ஜபம்-பதிவு-417
(பரம்பொருள்-169)
உயர்வின்
உயர் தாகத்தை
ஒத்துக் கொள்ள
முடியாமல்-அந்த
பிச்சைக்கார
ஏமாளிகளின்
பரிகாச சிரிப்பைக்
கண்டு – இந்த
நானிலம்
நாணா விட்லும்
நடிப்பின் நயம்
உணர்ந்து – நாம்
மனதிற்குள் அழ
வேண்டியது தான்
பாவிகளின்
பண்பின் கருதி
பன்னீர்
பூச்சுக் கொள்ளும்
பண்பற்ற
பரதேசிகளும் – இந்த
சர்வாதிகார
காப்பியத்தில்
சிந்தை தடுமாற
வேண்டியது தான்
உண்மையின்
உரு விளங்காமல்
மூகமூடிகள்
அனைத்தும்
முகத்தை
மூடிவிட்டதால்
இதயம் என்ன?
சோம்பல்
முறிக்க வேண்டுமா ?
சொர்க்கக் கதவு
சொப்பனத்தில்
மட்டுமா ?
சொந்தமாகக்
கிடையாதா ?
நரகம் மட்டும்
நம்மைப்
பார்த்து
நகைத்தால்
நாம் என்ன ?
ஏமாளிகளின்
தலையாட்டி
பிம்பமா?
ஏற்றத்தை
மறந்து
தருக்கர்களுக்கு
தலைவணங்க ?
தன்மானத்தை
விலை
கூறி விட்டு
மடிப்பிச்சை
கேட்க
நாம் என்ன
மானமிழந்தவர்களா ?
வந்தாரை வாழ
வைத்து விட்டு
இலக்கியம்
படைக்க
நாம் என்ன
இளிச்சவாயர்களா ?
சரித்திரம் எனன ?
ஒரு சிலருக்கு
மட்டுமா ?
சொந்தம்
நம்மை அது
மோந்து கூட
பார்க்காதா
நய வஞ்சக
பிசாசுகள்
நயமாய்
களிநடம்
புரியும் போது
ஆளவந்தார்கள்
அரியணை இன்றி
அரற்றி
கொண்டிருக்க
முல்லைப்பல்
காட்டி விட்டால்
மூழ்கி விடுவோமா ?
சிற்றின்பத்தை
சிதையாத
செதுக்கிய
சிற்பத்தால்
இன்பத்தின்
எழி லேணி நம்
இதயச் சுவரை
முட்டி விடுவதால்
நாம் என்ன
கண் இழந்த
கண்ணிய வானா?
கருத்திழந்த கசடரா ?
பாசத்தை
மறைத்து
வைத்திருக்கும்
பண்புள்ளவர்களை
பச்சோந்திகள்
என்பதால்
உயர்வுகள் என்ன
சாம்பல்
மேட்டில்
உட்காரவா
வேண்டும் ?
ஏமாந்த
வேளையில்
கிறுக்குத் தனம்
படைக்க
நாம் என்ன ?
ஏமாந்தவர்களின்
கூடாரமா
அல்லது
பல்லி ளித்தவர்களின்
பாசறையா ?
சிந்தனை
சிலநேரம்
தான் ஊர்
சுற்றும்
செயல்கள்
எந்நேரமும்
செயலில்
இல்லாவிட்டால்
உழைப்பின்
பலனை
உலகம் இழக்க
வேண்டியது தான !
பசித்தவர்களின்
பட்டினி
வயிற்றில் தான்
பண்புள்ள
பரிவுகள்
பதவியேற்கின்றன
மாடமாளிகைகள்
மண்மேடா
காவிட்டால்
மமதைகள்
மண்டியிட
முடியாமல்
அரசோச்ச
வேண்டியது தான்!
கனல் காவியம்
கனன்று
கொண்டிருந்தால்
புரட்சியின்
புயல் தெரியாது
புதுமையின்
நோக்கம்
புரியாது இது
புலமையின்
சாரல் களல்ல
ஏழ்மையின்
எழுச்சி கீதங்கள்
உவகையின்
உயிரோட்டங்கள்
தழுவலுக்கு
காத்திருக்கும்
தன்மான
கவித் திறன்கள்
விதியை விலக்கி
வைத்து விட்டு
மதியை வேலை
செய்ய தூண்டும்
பண்பின்
பதவிகள்
பரிதவிப்பின்
குமுறல்கள்
திருநங்கை :
“அற்புதம்”
----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////