February 14, 2019

திருக்குறள்-பதிவு-107


                      திருக்குறள்-பதிவு-107

“ அறியாமை ;
மூடநம்பிக்கை ;
வன்முறையுடன்
கூடிய இரத்தம் ;
ஆகியவற்றால்
கட்டப்பட்ட
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையையும் ;
சர்ச்சுகளையும்; அன்பும்
கருணையும் கொண்டு
மனிதத் தன்மையுடன்
இயங்குவதற்கு
தேவையான
முயற்சிகள் செய்த
என்னை குற்றவாளி
என்று பழிசுமத்தி
மன்னிப்பு கேட்கச்
சொல்கிறீர்கள்; “

“ என்னை நீங்கள்
சிறையில்
அடைத்த போதே
நீங்கள் என்னிடம்
தோற்று விட்டீர்கள் :
அப்படி இருக்கும்போது
என்னிடம்
தோற்றுவிட்ட நீங்கள்
வெற்றி பெற்ற என்னை
மன்னிப்பு கேட்க
சொல்வது தான்
வேடிக்கையான விஷயம் ;”

“ கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டேன்
என்று என்னை
வாழ விடாமல்
என்ன என்ன
செயல்களை எல்லாம்
செய்ய முடியுமோ …………..?
அதை எல்லாம்
எனக்கு எதிராக
செய்தீர்கள் ;
அப்பொழுதே
நான் மன்னிப்பு
கேட்டிருக்க வேண்டும்
கேட்கவில்லை “

“ எந்த ஒரு இடத்திலும்
என்னை நிலையாக
வாழ விடாமல்
ஊர் ஊராக
நாடு நாடாக
அலைய விட்டீர்கள்
அப்பொழுதே
நான் மன்னிப்பு
கேட்டிருக்க வேண்டும்
கேட்கவில்லை “

“ என்னை ஆறு
வருடங்களுக்கும்
மேலாக சிறையில்
வைத்து சித்திரவதை
செய்தீர்கள் ;
மரண அவஸ்தையை
அளித்தீர்கள் ;
அப்பொழுதே
நான் மன்னிப்பு
கேட்டிருக்க வேண்டும்
கேட்கவில்லை “

“அப்பொழுது  எல்லாம்
மன்னிப்பு கேட்காத
நான் இப்போது
மன்னிப்பு கேட்பேன்
என்று நீங்கள்
நினைக்கிறீர்களா……………? “

என்று சொல்லிக்
கொண்டே தரையில்
முட்டி போட்டு
உட்கார்ந்திருந்த
ஜியார்டானோ புருனோ
எழுந்து நின்றார்

சிறிது தூரம்
மெதுவாக
நடந்து சென்று
நாற்காலியின்
அருகில் சென்று
அதனை பிடித்துக்
கொண்டு நின்று
கொண்டிருந்தார்

சிறிது நேரம்
மெளனமாக இருந்தார்

“ ஜியார்டானோ
புருனோ சொல்லப்
போகும் அந்த
வார்த்தையில் தான் –
அவர் தண்டிக்கப்
படுவாரா………………………..?
அல்லது
விடுதலை
செய்யப்படுவாரா……………….?
என்பது தெரியும்
என்ற காரணத்தினால் ,
ஜியார்டானோ
புருனோ சொல்லும்
அந்த வார்த்தைக்காக
அந்த அவையில் உள்ள
அனைவரும் காத்துக்
கொண்டு இருந்தனர். ”

“ அனைவரும்
ஜியார்டானோ
புருனோவையே
பார்த்துக் கொண்டு
இருந்தனர் “

“ அந்த இடத்தில் ஒரு
ஆழ்ந்த அமைதி
நிலவியது ‘

நாற்காலியை
பிடித்தவாறு
நின்று கொண்டிருந்த
ஜியார்டானோ புருனோ
மெல்ல
நிதானமாக
அழுத்தம்
திருத்தமாக
ஒவ்வொரு
வார்த்தையாக
சொல்ல ஆரம்பித்தார்


நான்……………………………………………..


மன்னிப்பு…………………………………


கேட்க………………………………………….


மாட்டேன்………………………………..


என்று சொல்லிக்
கொண்டே
நாற்காலியில்
அமர்ந்தார்
ஜியார்டானோ
புருனோ.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  14-02-2019
//////////////////////////////////////////////