October 22, 2020

அறிய வேண்டியவை-148

 

ஜபம்-பதிவு-640

(அறிய வேண்டியவை-148)

 

சகுனி :

“ஒரு விஷத்தை

உனக்குக்

கொடுக்கிறேன்

நீ அதை

சாப்பிட்டால்

உனக்கு மரணம்

ஏற்படுகிறது”

 

“விஷம் உன்னுடைய

உடலில்

செயல்பட்டால்

தானே உனக்கு

மரணம் நிகழும்

விஷம்

உன்னுடைய உடலில்

செயல்படாவிட்டால்

மரணம்

என்பது எப்படி

உனக்கு ஏற்படும்

அப்படி என்றால்

விஷம் உன்னுடைய

உடலில் செயல்பட்டு

இருக்கிறது என்று

தானே அர்ததம்”

 

“விஷம்

உன்னுடைய

உடலில்

செயல்படாவிட்டால்

உன்னால்

எப்படி

இறக்க முடியம்”

 

“விஷம்

செயல்பட வேண்டும்

என்றால்

அந்த விஷத்தில்

உயிர்

இருக்க வேண்டும்

உயிர் எங்கு

இருக்கிறதோ

அங்கு

அறிவு என்பது

இருக்கும்”

 

“எந்த

ஒருபொருளை

எடுத்தாலும்

அது

செயல்படும் போது

மட்டும் தான்

அதனுடைய

அறிவானது

வெளிப்படும் “

 

“அதுபோல

அனைத்து

பொருட்களுக்கும்

உயிர்

இருக்கும் போது

என்னுடைய

பகடைகளுக்கும்

உயிர்

இருக்கும் தானே

உயிர் இருந்தால்

செயல்படும் தானே

செயல்பட

வேண்டும்

என்றால்

அறிவு

இருக்க

வேண்டும் தானே “

 

“அறிவு

இருந்தால்

மட்டும் தான்

நாம்

பேசும்

பேச்சைக் கேட்கும்

அதனால் தான்

நான் என்னுடைய

பகடைகளிடம்

பேசிக் கொண்டு

இருக்கிறேன்”

 

“என்னுடைய

பகடைகள்

உயிருள்ளவை

என்பதை

நான் உணர்ந்து

,இருக்கிறேன் “

 

“நான் பேசினால்

அவைகளுக்கு

கேட்கும்

என்பதை

நான்

தெரிந்து

வைத்திருக்கிறேன்”

 

“நான்

சொன்னவைகளை

செயல்படுத்தியிருக்கிறது

என்பதை

நான்

கண்டிருக்கிறேன்”

 

“நான்

மனதில்

நினைத்தவைகளை

செயல்படுத்தியிருக்கிறது

என்பதை

நான்

உணர்ந்திருக்கிறேன்”

 

“என்னுடைய

பகடைகள்

நான்

சொல்கிறவைகளை

கேட்டு நடக்கக்கூடிய

குழந்தையாக

இருப்பதை

நினைத்து நான்

சந்தோஷப்

பட்டிருக்கிறேன்”

 

“அதனால் நான்

என்னுடைய

பகடைகளுடன்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்னுடைய

எண்ணங்களை

நிறைவேற்ற

சொல்லி

அவைகளுடன்

பேசிக்கொண்டு

இருக்கிறேன் “

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////

அறிய வேண்டியவை-147

 

ஜபம்-பதிவு-639

(அறிய வேண்டியவை-147)

 

“அப்படி நாங்கள்

ஒன்று சேர்ந்து

பாண்டவர்களை

அழித்து விட்டால்

என்னுடைய

மருமகன்

துரியோதனனைத்

தவிர வேறு யாரும்

மன்னனாகவும்

முடியாது

மன்னனாக

இருக்கவும் முடியாது”

 

“என்னுடைய

திட்டங்கள் அனைத்தும்

வெற்றிகரமாக

நடந்து முடிந்து

விட்டால்

என் தங்கை

என் தங்கையின்

கணவன்

என் மருமகன்

ஆகியோருக்கு

கிடைக்க வேண்டிய

உரிமையைப்

பெற்றுத் தந்து

விடுவேன்”

 

“என் தங்கையின்

கணவரான

திருதராஷ்டிரனுக்கு

கிடைக்கக் கூடாது

என்று மறுக்கப்பட்ட

உரிமையை

என் மருமகன்

துரியோதனனுக்கு

கிடைக்கக்கூடாது

என்று ஒதுக்கப்பட்ட

நீதியை

நான் பெற்றுத்

தந்து விடுவேன்

அதற்கு நீங்கள்

தான் உதவிகள்

செய்ய வேண்டும்

என்னருமைப்

பகடைகளே !"

 

"நாளை நடத்தப் போகும்

ஆட்டத்தில்

சந்திர வம்சத்தின்

தலைவிதியே

நிர்ணயிக்கப்படப்

பட இருக்கிறது”

 

“"எதிர்காலம் யார்

கையில் இருக்கப்

போகிறது என்று

தீர்மானிக்கப்பட

இருக்கிறது"

 

“அஸ்தினாபுரத்தை

யார் அரசாளப்

போகிறார்கள் என்பது

நிர்ணயிக்கப்பட

இருக்கிறது”

 

“நாளை மிக

முக்கியமான நாள்

நாளை மட்டும் நான்

சொல்கிறபடி

நடந்து கொண்டு

என்னுடைய

எண்ணங்களை

நிறைவேற்றி

என்னை வெற்றி

பெறச்செய்ய

நான் கேட்கும்

எண்களை

தவறாமல்

எனக்கு அளியுங்கள்

என்னருமைப்

பகடைகளே

 

(சகுனி தன்னுடைய

பகடைகளுடன்

பேசிக்

கொண்டிருக்கும் போது

அங்கு கர்ணனும்

துரியோதனனும்

வந்து

கொண்டிருக்கிறார்கள்)

 

கர்ணன் :

“என்ன

காந்தார அரசர்

தனிமையில்

புலம்ப

ஆரம்பித்து விட்டார்

உங்களுடைய

ஆதங்கத்தை

உங்களுடைய

பகடைகளிடம்

கொட்டிக்

கொண்டிருக்கிறீர்களா?”

 

சகுனி :

“என்னுடைய பேச்சை

அறிவுள்ளவர்கள்

புரிந்து ஏற்றுக்

கொள்வார்கள்?”

 

கர்ணன் :

“அறிவுள்ளவர்கள் சரி

பகடைக்குத் தான்

உயிர் இல்லையே

அது எப்படி நீங்கள்

சொல்வதை புரிந்து

ஏற்றுக் கொள்ளும்”

 

சகுனி :

“யார் சொன்னது

என்னுடைய

பகடைகளுக்கு

உயிர் இல்லை என்று?”

 

கர்ணன் :

“இதை நான் தனியாக

வேறு யோசித்து

சொல்ல வேண்டுமா

உலகத்தில் உள்ள

அனைவரையும்

கேட்டாலே சொல்லி

விடுவார்களே

உயிர் இல்லை

என்று”

 

சகுனி :

“தெரியாமல்

பேசுகிறாய் கர்ணா

பொருட்களுக்கு

உயிர் இல்லை

என்று எப்படி

உன்னால்

சொல்ல முடியும்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////

 

அறிய வேண்டியவை-146

 

ஜபம்-பதிவு-638

(அறிய வேண்டியவை-146)

 

“எந்த ஒரு

செயலுக்காக நான்

இவ்வளவு நாள்

காத்துக்

கொண்டிருந்தேனோ

எந்த ஒரு செயலை

நிறைவேற்ற

வேண்டும் என்று

நான் செயல்பட்டுக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எதற்காக உழைத்துக்

கொண்டிருந்தேனோ

எது செயலுக்கு

வர வேண்டும்-என்று

இத்தனை நாள்

எதற்காகக் காத்துக்

கொண்டிருந்தேனோ

நாளை அதை

செயல்படுத்தக் கூடிய

வாய்ப்பு எனக்குக்

கிடைத்து இருக்கிறது”

 

“என்னுடைய கனவை

நினைவாக்கக் கூடிய

நாள் தான்

நாளை வரவிருக்கிறது

நான் எதிர்

நோக்கிக் காத்துக்

கொண்டிருந்ததும் - அந்த

நாளுக்காகத் தான்”

 

“நான் எதிர்பார்த்த

நாள் தான்

நாளை வரவிருக்கிறது

நாளை நடக்கவிருக்கும்

அந்த நாளுக்காகத்

தான் நீங்கள்

எனக்காகச்

செயல்பட வேண்டும்”

 

“நான் என்ன

எண்களைக்

கேட்கிறேனோ

அந்த எண்களை

எனக்காக நீங்கள்

அளிக்க வேண்டும்”

 

“நாளை ஒரு நாள்

மட்டும்

நீங்கள் எனக்காகச்

செயல்பட்டு

நான் கேட்கும்

எண்களை எனக்கு

அளித்து விட்டு

என்னை வெற்றி

பெறச் செய்தால்

என்னுடைய

கனவுகளை

நிறைவேற்றி விட்டால்

நான் உங்களை

என்றும் தொந்தரவு

செய்ய மாட்டேன்”

 

“என்னருமைப்

பகடைகளே

நான் யாரையும்

கெடுக்க

சொல்லவில்லை”

 

“யார்

வாழ்க்கையையும்

அழிக்கச்

சொல்லவில்லை”

 

“நான் அப்படி

நினைக்கவும்

இல்லை”

 

“பிறரை

அழித்துத் தான்

வாழ வேண்டும்

என்ற அவசியமும்

எனக்கு இல்லை”

 

“என்னுடைய

தங்கைக்கும்

அவளுடைய

கணவனுக்கும்

அவர்களுடைய

குழந்தைகளுக்கும்

கிடைக்க வேண்டிய

உரிமைக்காகப்

போராடுகிறேன்”

 

“என்னுடைய

தங்கையின்

கணவர் குருடன்

என்பதற்காக

நிராகரிக்கப்பட்ட

அரசாளும் உரிமை

அவருடைய

மகனுக்கும்

நடந்து விடக்கூடாது

என்பதற்காகப்

போராடுகிறேன்”

 

“எங்களிடமிருந்து

பறிக்கப்பட்ட

உரிமைகளை

பெறுவதற்காகப்

போராடிக்

கொண்டிருக்கிறேன்

அதில் ஒன்று தான்

இந்த பகடை

விளையாட்டு”

 

"இந்த பகடை

விளையாட்டை

வைத்துத்தான்

நாங்கள் இழந்த

அனைத்து

உரிமைகளையும்

பெறப் போகிறோம்"

 

“எங்களுடைய

உரிமைகளைப்

பெறுவதற்காகத் தான்

போராடுகிறேனே தவிர

மற்றவர்களை அழித்து

அவர்களுடைய

உரிமைகளை

பெறுவதற்காக நான்

போராடவில்லை”

 

“நாங்கள் செல்லும்

பாதையில் உள்ள

தடைகளை எடுத்து

விட்டு செல்கிறோம்”

 

“எங்களுடைய

வாழ்க்கையில்

குறுக்கிடும்

தடைகள் தான்

இந்த பாண்டவர்கள்

இந்த பாண்டவர்களை

மட்டும் நாங்கள்

தோற்கடித்து விட்டால்

அவர்களை முற்றிலுமாக

அழித்து விடுவோம்”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////

 

அறிய வேண்டியவை-145

 

ஜபம்-பதிவு-637

(அறிய வேண்டியவை-145)

 

(சகுனியின் அறையில்

சகுனி தன்னுடைய

பகடைகளைப்

பார்த்து பேசிக்

கொண்டிருந்தார்.)

 

சகுனி :

“என் உதிரத்தில்

கலந்து

உயிரில் பிணைந்து

உணர்வுடன்

உறவாடிக்

கொண்டிருக்கும்

என்னருமைப்

பகடைகளே !”

 

“என்னுடைய

எண்ணத்தைப்

புரிந்து கொண்டு

அதனை

செயல் படுத்துவதற்காகவே

வாழ்ந்து கொண்டிருக்கும்

என்னருமைச்

செல்வங்களே!”

 

“நான் கேட்கும்

எண்களை

எனக்கு

தவறாது அளித்து

என்னுடைய ஆசைகளை

நிறைவேற்றி

இன்று வரை

என்னைக் கைவிடாமல்

காப்பாற்றிக்

கொண்டு வரும்

என்னருமைக்

குழந்தைகளே!”

 

“என்னுடைய

உள்ளத்தில்

என்ன இருக்கிறது

என்பதை அறிந்து

அதை அப்படியே

செயல்படுத்திக்

கொண்டிருக்கும்

நீங்கள்

என்றுமே என்னைக்

கைவிட்டதில்லை”

 

“நான் எப்போது

எல்லாம் எனக்கு

வெற்றி

வேண்டும் என்று

உங்களிடம்

கேட்டிருக்கிறேனோ?

அப்பொழுதெல்லாம்

எனக்கு வெற்றியைத்

தேடித் தந்திருக்கிறீர்கள்”

 

“நான் உங்கள்

மேல் வைத்துள்ள

பாசத்தைப்

புரிந்து கொண்டு

இன்று வரை

எனக்காகவே

நீங்கள்

உழைத்து கொண்டு

இருக்கிறீர்கள்”

 

“என் அன்பைப்

புரிந்து கொண்ட

காரணத்தினால் தான்

என்னுடைய கைக்குள்

அடக்கமாகி

இருக்கும் நீங்கள்

என்னுடைய

தேவையைப்

புரிந்து கொண்டு

அதை நிறைவேற்றிக்

கொண்டு வருகிறீர்கள்”

 

“என்னுடைய

சிந்தனையில்

என்ன இருக்கிறது

என்பதைப்

புரிந்து

கொண்டிருக்கும்

காரணத்தினால் தான்

என்னுடைய

சிந்தனையில்

உள்ளவற்றை

நிறைவேற்றும்

செயல்களை

என்னுடைய

வாழ்க்கையில்

தொடர்ந்து செய்து

கொண்டிருக்கிறீர்கள்”

 

“எந்த ஒரு

நாளுக்காக - நான்

இவ்வளவு நாள்

காத்துக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எந்த ஒரு

நாளுக்காக - நான்

இவ்வளவு நாள்

உழைத்துக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எந்த விஷயத்தை

நிறைவேற்ற வேண்டும்

என்று இத்தனை

நாள் நான் காத்துக்

கொண்டிருந்தேனே

அந்த நாள்

நாளை வருகிறது”

 

“எதை செயல்படுத்த

வேண்டும் என்று

என்னுடைய

வாழ்நாள் முழுவதும்

காத்துக்

கொண்டிருந்தேனோ

அந்த நாள்

நாளை வருகிறது.”

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

-----------21-10-2020

/////////////////////////////////