திருக்குறள்-பதிவு-32
5.
வாமன அவதாரம்:
தசாவதாரத்தில்
1.மச்ச அவதாரம்,
2.கூர்ம அவதாரம்,
3.வராக அவதாரம்,
என்ற மூன்று
அவதாரங்களும்,
நீரில் உயிரினங்கள்
தோன்றி
விலங்கு நிலை
அடைந்ததைக்
குறிக்கிறது.
நான்காவது அவதாரமான
நரசிம்ம அவதாரம்
என்பது
சிங்க முகமும்,
மனித உடலும்
கொண்ட ஒரு
உயிரினத்திலிருந்து
அதாவது
விலங்கு முகமும்,
மனித உடலும்
கொண்ட யாளி
என்ற உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் என்ற
நிலை தோன்றியது
என்பதைக் குறிப்பது
ஆகும்
5.வாமன அவதாரம்,
6.பரசுராம அவதாரம்,
7.ராம அவதாரம்,
8.பலராம அவதாரம்,
9.கிருஷ்ண அவதாரம்
10.கல்கி அவதாரம்
எனப்படுகின்ற
ஐந்தாவது அவதாரம்
முதல் பத்தாவது
அவதாரம் வரை
உள்ள ஆறு
அவதாரங்களும்
மனிதனின் பரிணாம
வளர்ச்சியை
பற்றி சொல்கிறது
வாமனன் என்றால்
குள்ள வடிவினன்
குள்ள வடிவினன்
என்று பொருள்
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
அதாவது
மிருகமும், மனிதனும்
சேர்ந்த நிலையில்
மிருக நிலை
கழிக்கப்பட்டு
மனிதன் என்ற
நிலை தோன்றியபோது
அதாவது முழுமையான
மனிதனாக மாற்றம்
அடையும்போது
முதன் முதலில்
மனிதன் குள்ளமாக
மூன்றடிக்குள்
தான் இருந்தான்
மனிதன் மூன்று
அடியில் தோன்றியதையும்,;
முழுமை பெற்ற
மனிதனாக
மாற்றம் அடைந்ததையும்;
குறிப்பது தான்
வாமன அவதாரம் ஆகும்
6.பரசுராம
அவதாரம்
குள்ளமாக இருந்த
மனிதன் வளர்ந்து
காட்டில் வாழ்ந்து
வந்தான்
தன் தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்காக
காட்டில் மரங்களை
வெட்டியும்;
தன் பசியை
தீர்த்துக் கொள்வதற்காக
காட்டு விலங்குகளை
வேட்டையாடியும்;
காட்டில் வாழ்வதற்கு
ஏற்ற வகையில்
ஆயுதங்களைக் கையாளத்
தெரிந்தவனாக இருந்தான்;
என்பதைக் குறிப்பதே
பரசுராமர் கையில்
உள்ள கோடாரி
என்ற ஆயுதம் ஆகும்
குள்ளமாக இருந்த
மனிதன் வளர்ந்து
காட்டில் அலைந்து,
தன்னுடைய
தேவைகளை
நிறைவேற்றிக் கொள்வதற்கு
ஆயுதங்களைப் பயன்
படுத்தினான்
என்பதைக் குறிப்பதே
கோடாரியைக்
கையில் வைத்திருக்கும்
பரசுராமர் என்ற
அவதாரம் ஆகும்
7.ராம
அவதாரம்
காட்டில் அலைந்து
திரிந்து கொண்டிருந்த
மனிதன் ஓரிடத்தில்
நிலையாக தங்கி
சிறு சிறு
குழுக்களாக இணைந்து
தங்களுக்கு என்று ஒரு
தலைவனைத்
தேர்ந்தெடுத்து,
தங்களுக்கு என்று
சட்டதிட்டங்களை
உருவாக்கி,
அனைவரும் அமைதியாக
வாழ்வதற்கான
வழி முறைகளை
ஏற்படுத்தி,
ஒழுக்கக் கட்டுப்பாடுகளை
ஏற்படுத்திக் கொண்டு,
தனக்கென்று ஒரு
இராச்சியத்தை
உருவாக்கிக் கொண்டு,
அரசாட்சி செய்து
கொண்டு வாழ்ந்தான்
மனிதன் நாட்டில்
ஆட்சி செய்து
வாழ்ந்து வந்தாலும்
மனிதனால்
காட்டில் அலைந்து
திரிந்த நினைவு
மறக்கவில்லை என்ற
காரணத்தினாலும்,
காட்டில் அலைந்து
திரிந்த பதிவுகள்
மனிதனுள் பதிந்து
உள்ள காரணத்தினாலும்,
அந்த பதிவின்
காரணமாக மனிதன்
காட்டில் சுற்றி
திரிந்தான்.
ராம அவதாரத்தில்
ராமர் நாட்டில்
ஆட்சி செய்து
வாழ்ந்தாலும்
தன் மனைவியான
சீதையைத் தேடி
காட்டில் அலைந்து
திரிந்தார் என்பதைக்
குறிப்பது தான்
ராம அவதாரம்
ஆகும்
--------- இன்னும் வரும்
---------- 07-10-2018
////////////////////////////////////////////////