ஜபம்-பதிவு-404
(பரம்பொருள்-156)
உலூபி
:
“என்ன
வார்த்தை
சொல்லி
விட்டாய்
என்
மகனே ! “
“இந்த
வார்த்தையை
உன்னால்
எப்படி
சொல்ல
முடிந்தது ? “
“என்னைப்
பற்றித்
தெரிந்திருந்தும்
எப்படி
இப்படி ஒரு
வார்தையை
சொன்னாய் ? “
“நீ
! சொன்ன
வார்த்தைகளைக்
கேட்டு
விட்டு - என்
இதயம்
இன்னும்
வெடிக்காமல்
இருக்கிறதே ? “
“நான்
இன்னும்
இறக்காமல்
இருக்கிறேனே
! “
“ஐயோ!
நான்
என்ன
செய்வேன் ?”
“என்னைச்
சுற்றி
உள்ளவர்கள்
அனைவரும்
என்ன
வார்த்தைகளை
பேசக்கூடாதோ
? - அந்த
வார்த்தைகளை
எல்லாம்
பேசியதைக்
கேட்டும்
என்னுடைய
மனம்
கலக்கமடையவில்லை
“
“ஆனால்
நீ சொன்ன
இந்த
ஒரு வார்த்தை
என்னுடைய
மனதை
கலக்கமடையச்
செய்து
விட்டது “
“உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைக்கச்
சொல்கிறாய்
உலகத்தில்
உள்ள
எந்தத்
தாயாவது
தன்னுடைய
மகனின்
வாழ்க்கையை
முடித்து
வைப்பாளா ? “
“மகனின்
உயிருக்கு
ஆபத்து
என்றால்
தன்னுடைய
உயிரைக்
கொடுத்தாவது
தன்னுடைய
மகனுடைய
வாழ்க்கையை
காப்பாற்றத்
தானே எந்தத்
தாயும்
முயற்சி செய்வாள் “
“இந்த
உலகத்தில் உள்ள
எந்த
ஒரு தாயையும்
எடுத்து
கொண்டால்
தன்னுடைய
மகனுடைய
உயிருக்கு
ஆபத்து என்றால்
தன்னுடைய
உயிரைக்
கொடுத்தாவது
தன்னுடைய
மகனின்
உயிரை காப்பாற்றத்
தானே
முயற்சி செய்வாள்
அதையே
தானே
நானும்
செய்தேன் “
“அப்படி
இருக்கும் போது
எப்படி
தாயான என்னை
உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைக்கச் சொல்கிறாய் “
“பத்து
மாதம் உன்னை
கஷ்டப்பட்டு
பெற்றெடுத்து
மார்பிலும்
தோளிலும்
போட்டு
வளர்த்தது
எதற்காக
?
உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைத்து
உன்னை
களப்பலிக்கு
அனுப்பி
வைப்பதற்காகவா
? “
“நீ
பேசிய பேச்சிலும் ;
சிந்திய
சிரிப்பிலும் ;
செய்த
சேட்டையிலும் ;
என்னுடைய
கணவர்
என்னுடன்
இல்லாததை
மறந்து
இருந்தேனடா
எதற்காக
?
இதற்கு
காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைத்து
உன்னை
களப்பலியாக
அனுப்பி
வைப்பதற்காகவா
?”
“இந்த
உலகத்தில்
எனக்கு
ஆதரவாக
யாருமே
இல்லாத
போதும்
நீ ஒருவன்
எனக்காக
இருக்கிறாய்
என்று
கவலையை
மறந்து
உனக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்கு
காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைத்து
உன்னை
களப்பலியாக
அனுப்பி
வைப்பதற்காகவா
?”
“இந்த
உலகமே நீ
தான்
என்று - நீ
விடும்
சுவாசக்
காற்றில்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்குக்
காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைத்து
உன்னை
களப்பலியாக
அனுப்பி
வைப்பதற்காகவா
?”
“உன்னை
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
- இந்த
உலகத்தில்
உள்ளவர்கள்
பல்வேறு
நியாயங்களைக்
கற்பிக்கிறார்கள்
;
நீதி
என்கிறார்கள் ;
நியாயம்
என்கிறார்கள் ;
தர்மம்
என்கிறார்கள் ;
ஆனால்
யாரும் என்னுடைய
மனதை
புரிந்து கொள்ளாமல்
என்னுடைய
மனதை
புண்படுத்தும்படித்
தான்
பேசிக்
கொண்டிருக்கிறார்கள் “
“அவர்களைப்
போலவே
நீயும்
என்னைப் புரிந்து
கொள்ளாமல்
உன்னுடைய
வாழ்க்கையை
முடித்து
வைக்கச்
சொல்கிறாய் ;
களப்பலிக்கு
ஆசிர்வாதம்
கேட்கிறாய்
; “
“நீ
பேசும் பேச்சு
ஒரு
தாயினுடைய மனதை
எந்த
அளவிற்கு
பாதிப்பை
ஏற்படுத்தும்
என்பது
உனக்குத்
தெரியாதா
மகனே ! “
“தெரிந்திருந்தால்
நீ
இப்படி
பேசி
இருக்க
மாட்டாய் ? “
“இந்தத்
தாயைப்
புரிந்து
கொள் மகனே ! “
“இந்தத்
தாயின் மனதைப்
புரிந்து
கொள் “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
14-03-2020
//////////////////////////////////////////