பரம்பொருள்-பதிவு-114
“அது
மட்டுமல்ல
தன்னுடைய
உயிரை
களப்பலியாக
கொடுக்கிறேன்
என்று
சொன்ன
அரவானின்
வார்த்தைகளைக்
கேட்ட
துரியோதனன்
சற்று
திகைத்துத்
தான் நின்றான் ;
உயிரைப்
பற்றி
கவலைப்படாத
அரவான்
என்ற
மாவீரன்
தனக்கு
எதிராக
நின்று
கொண்டிருப்பதைக்
கண்டு
துரியோதனன்
அதிர்ச்சியில்
தான் நின்றான் ;
வீரத்தின்
உருவாக
நின்று
கொண்டிருந்த
அரவானைக்
கண்டு
துரியோதனன்
மலைத்துத்
தான் நின்றான் ;
துரியோதனனால்
எதுவுமே
பேச முடியாமல்
வார்த்தையின்றித்
தான்
நின்றான் ; “
“ஆனால்
எந்தவிதமான
கலக்கமும்
இல்லாமல்
கொஞ்சம்
கூட
வார்த்தையில்
நடுக்கம்
என்ற
ஒன்று
இல்லாமல்
அரவான்
தொடர்ந்து
பேசினான்”
அரவான்
:
“பெரியவர்கள்
கேட்டு
இந்த
சிறியவன்
இல்லை
என்று
சொல்ல
முடியுமா ?
பெரிய
தந்தையே !
அதுவும் பெரிய தந்தை
அதுவும் பெரிய தந்தை
மகனிடம்
யாசகமாக
உயிரையே
கேட்கும் போது
உயிரைத்
தரமுடியாது
என்று
சொல்ல முடியுமா ?
அப்படி
நீங்கள்
கேட்டு
நான் இல்லை
என்று
சொன்னால்
பெரியவர்கள்
சொல்லை
தட்டியவன்
ஆவேன் ;
பெரியவர்களுடைய
வார்த்தைக்கு
மரியாதை
கொடுக்காதவனாவேன்
;
பெரிய
தந்தையை
மதிக்காதவனாவேன்
;
நாளை
இந்த உலகம்
என்னைப்
பார்த்து
அரவான்
பெரியவர்களை
மதிக்கவில்லை
;
பெரியவர்கள்
சொல்லை
கேட்கவில்லை
;
பெரியவர்கள்
கேட்டதை
அளிக்கவில்லை;
- என்று
வசைபாடும்
இழிவான
சொற்களுக்கு
இலக்காக
நான்
விரும்பவில்லை ;”
“யாசகமாக
நீங்கள்
கேட்கும்
என்னுடைய
உயிரை
களப்பலியாக
கொடுப்பதற்கு
சம்மதிக்கிறேன்
பெரிய
தந்தையே ! “
“என்னுடைய
உயிரை
களப்பலியாக
கொடுப்பதற்கு
இப்போதே
நான்
தயாராக
இருக்கிறேன் ;
என்னுடைய
உயிரை
தங்களுக்கு
களப்பலியாக
தருகிறேன்
என்று
வாளை
எடுத்தான் அரவான் ; “
துரியோதனன்
:
“நிறுத்து
அரவான்
நிறுத்து
!
களப்பலி
கொடுப்பதற்கு
இன்றைய
நாள்
தகுந்த
நாள் கிடையாது ;
வருகின்ற
அமாவாசையே
களப்பலி
கொடுப்பதற்கு
தகுந்த
நாள் ;
அன்றைய
நாளில் தான்
நான்
களப்பலி கொடுப்பதற்கு
முடிவு
செய்திருக்கிறேன் ;
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
காளியின்
முன்பு
உன்னுடைய
உயிரை
களப்பலியாக
கொடுத்தால்
போதும் “
அரவான்
:
.”ஒன்றே
ஒன்றை மட்டும்
நான்
சொல்லிக் கொள்ள
கடமைப்பட்டிருக்கிறேன்
பெரிய
தந்தையே !
நாளை
என்ன
நடக்கும்
என்பது
யாருக்கும்
தெரியாது ;
காலம்
என்ன
நினைக்கிறது
என்பதும்
யாருக்கும்
தெரியாது ;
வருகின்ற
அமாவாசை
வரை
நான்
உயிரோடு
இருந்தால் ;
என்னுடைய
உடல்
பின்னமாகாமல்
இருந்தால் ;
நான்
கொடுத்த
வாக்குறுதியின்படி
உங்களுக்காக
வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
காளியின்
முன்பு
களப்பலியாகிறேன்
பெரிய
தந்தையே ! “
துரியோதனன்
:
“அப்படியே
ஆகட்டும்
அரவான்
உன்னுடைய
சொல்
எனக்கு மிகுந்த
மகிழ்ச்சியை
அளிக்கிறது. ;
நீ
செய்யப்போகும் இந்த
தியாகச்
செயலுக்காக
வருகின்ற
அமாவாசையை
எதிர்நோக்கி
நான் காத்துக்
கொண்டிருப்பேன்
;”
அரவான்
;
“அப்படியே
ஆகட்டும்
பெரிய
தந்தையே ! “
(துரியோதனன்
அரவானிடம்
விடைபெற்றுச்
செல்கிறான்)
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-------------10-01-2020
//////////////////////////////////////////