March 03, 2019

திருக்குறள்-பதிவு-117


                   திருக்குறள்-பதிவு-117

“ஜியார்டானோ
புருனோவின் சிலையின்
இரண்டாவது கூறில்
செதுக்கப்பட்டுள்ள
எட்டு நபர்களின்
உருவங்கள்
அவர்கள் அனுபவித்த
போராட்ட வாழ்க்கையை
நாம் நினைக்கத்
தூண்டுகிறது “

ஒன்று :
பீட்ரஸ் ராமஸ் (1515-1572)
(Petrus Ramus (1515-1572))
“பிரெஞ்சு தத்துவவாதி ;
தர்க்க அறிஞர் ;
சொல்லாட்சிக் கலைஞர் ;”

“கிறிஸ்தவ மதத்தின்
அடித்தளத்தை
அசைக்கும் விதத்தில்
அவருடைய செயல்கள்
அமைந்திருப்பதாக
சர்ச்சுகளால்
குற்றவாளி என்று
குற்றம் சாட்டப்பட்டார் ;”

“சர்ச்சுகளுக்கு எதிரான
அவருடைய செயல்களை
நிறுத்திக் கொள்ள
வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டார் ;”

“ஆனால் அவர் தன்
செயல்களை நிறுத்திக்
கொள்ளவேயில்லை ;”

“புனித பர்த்தலமேயுத்
திருநாள்
(St.Bartholomew’s Day)
ஆரம்பித்த இரண்டாம் நாள்
இவர் கொடுமையான
முறையில் படுகொலை
செய்யப்பட்டார்; “

இரண்டு
லூசிலியோ வனினி
(1585-1619)
Lucilio Vanini (1585-1619)
“இத்தாலிய தத்துவவாதி ;
மருத்துவர் ;
சுதந்திர சிந்தனையாளர் ;”

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள ஒவ்வொன்றும்
அவைகளுக்கு என்று
நிர்ணயிக்கப்பட்ட
நியதிகளின்படி ,
அணு அளவும்
பிசகாமல் ,
இயக்க ஒழுங்கு
மாறாமல் ,
இயங்கிக்
கொண்டிருக்கிறது ;
என்று கருத்து
தெரிவித்த
முதல் அறிவியல்
அறிஞர் ;”

“ மனிதர்கள் என்பவர்கள்
குரங்கிலிருந்து
வந்தவர்கள் என்று
சார்லஸ் டார்வின்
கண்டுபிடித்து
சொன்னதற்கு முன்பாகவே
கருத்து தெரிவித்தவர்; “

“ இயேசு கிறிஸ்து
சிலுவையில்
அறையப்பட்ட நிகழ்வை
கொச்சைப் படுத்தும்
விதத்தில் கருத்து
தெரிவித்தார் என்று
குற்றம் சாட்டப்பட்டவர் ;”

“ கன்னிமேரியின்
கன்னித் தன்மையை
இகழும் விதத்தில்
கருத்து தெரிவித்தார் என்று
குற்றம் சாட்டப்பட்டவர்“

“இத்தகைய
காரணங்களினால் இவர்
டௌலோசில் (Toulouse)
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார் “

மூன்று
பாலோலோ சர்பி (1552-1623)
Paolo sarpi (1552-1623)
“இத்தாலிய
வரலாற்று அறிஞர் ;
விஞ்ஞானி ;
வழக்கறிஞர் ;”

“சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்று
நிக்கோலஸ் கோப்பர்
சொன்ன கருத்தே
சரியானது என்றும் ;

பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறானது
என்றும் கருத்து
தெரிவித்தார் ;” ‘

“கிறிஸ்தவ மதம்
மனிதர்களுக்குள்
இருக்கும்
வேற்றுமைகளைக்
களைந்து ;
மனிதர்கள் அனைவரும்
ஒற்றுமையுடன்
வாழ்வதற்கான
வழிமுறைகளைக்
கையாளும் ஒரு
மதமாகத் தான்
கிறிஸ்தவ மதம் இருக்க
வேண்டுமேயொழிய ;
மனிதர்களிடையே
வேற்றுமையை
உருவாக்கி மதவெறியை
ஊட்டும் விதத்தில்
இருக்கக்கூடாது
என்று சொன்னவர் ; “

“மதவெறி
கொண்டவர்களின்
மனிதத் தன்மையற்ற
தாக்குதல்களால்
இவர் கொடுமையான
முறையில் இறந்தார் ; “

நான்கு
தோமஸ்
காம்பனேல்லா
(1568-1639)
Tomasso Campanella
(1568–1639)
“இத்தாலிய தத்துவவாதி ;
இறையியல் வல்லுநர் ;
சோதிடர் ; “

“ அவர் அரிஸ்டாட்டிலின்
கருத்துக்களுக்கு எதிரான
கருத்துக்களை
கொண்டவராக இருந்தார்”

“ கலிலியோவிற்கு
எதிரான முதல் வழக்கில்
கலிலியோவிற்கு
ஆதரவாக இருந்தவர் “

“ அவர் சோதிடத்தின்
மேல் மிகுந்த நம்பிக்கை
கொண்டிருந்தார் ;
அவருடைய
எழுத்துக்களில்
சோதிடத்தின் தாக்கம்
அதிகம் இருந்தது ; “

“இவர் செய்த செயல்கள்
அனைத்தும் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
இருந்த காரணத்தினால்
சர்ச்சுகளால் கண்டனம்
செய்யப்பட்டார் ;
விசாரணை செய்யப்பட்டு
கொல்லப்பட்டார் ; “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  03-03-2019
//////////////////////////////////////////////