January 31, 2019

திருக்குறள்-பதிவு-94


                     திருக்குறள்-பதிவு-94

சிறை அதிகாரி :
“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்பட மாட்டேன் ;
அவர்களால்
செயல்படுத்தப்படும்
அனைத்து
சட்டதிட்டங்களையும்
பணிந்து ஏற்றுக்
கொண்டு அதன்வழி
நடப்பேன் என்று
உறுதி அளியுங்கள். “


ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை  
அமைதியாக இருந்தார்)

சிறை அதிகாரி :
“ ஜியார்டானோ புருனோ
உங்களுக்கு இறுதியாக
ஒரு வாய்ப்பு
தருகிறோம் ;
ஆண்டவர் முன்பாக
மண்டியிட்டு
மன்னிப்பு கேட்டு
நீங்கள் செய்த
குற்றங்களை ஒப்புக்
கொள்ளுங்கள் ; “

“ அளிக்கப்பட்ட
சித்திரவதையின் மூலமாக
மரண வலியை
அனுபவித்துக்
கொண்டிருந்த ,
ஜியார்டானோ புருனோ
ஆரம்பம் முதல்
இந்த நேரம் வரை
எந்த விதமான
கூச்சலும் போடவில்லை ;
கண்ணீர் விட்டு
கதறி அழவில்லை ;
வலியைத் தாங்க
முடியாமல் என்னை
விட்டு விடுங்கள் என்று
கூச்சல் போடவில்லை ;
அமைதியாக இருந்தார்.

“ இந்த நிலையில்
யாராக இருந்தாலும்
அவர்களால்
நிதானமாக சிந்தித்து
பேசவே முடியாது ;
பைத்தியம் பிடித்த
நிலைக்கு போய்
விடுவார்கள் ;
என்ன பேசுகிறோம்
என்று தெரியாமல்
உளற ஆரம்பித்து
விடுவார்கள்  ;
மயங்கி கிழே
விழுந்து விடுவார்கள் ;
ஆனால் ஜியார்டானோ
புருனோ
அமைதியாக இருந்தார் ; “

“ இந்தக்
காட்சியைக் கண்டு
கார்டினல் சார்டோரி ;
பெல்லரமினோ :
பாதர் டிராகாக்லியோலோ
ஆகியோர் சற்று
அதிர்ச்சி அடைந்தனர் ;”

 “இவ்வளவு மனதைரியம்
கொண்ட ஒரு மனிதனை
சிறை அதிகாரி
இது வரை அவருடைய
சிறை வாழ்க்கையில்
மட்டுமல்ல அவருடைய
வாழ்க்கையிலும்
பார்த்ததில்லை ;
அதனால் அவரால்
பேச முடியவில்லை ;
வாயடைத்து நின்றார் “

“ சித்திரவதையை
நிறைவேற்றுபவர்கள்
கதறி அழுது ,
சத்தமாக ஓலமிட்டு ,
கூச்சலிட்டு ,
மன்னிப்பு
கேட்டு விட்டு ,
சென்றவர்களைத் தான்
பார்த்திருக்கிறார்கள்  ;
ஆனால் - இத்தகைய
ஒரு மனிதரை
அவர்கள் சித்திரவதை
செய்யும் தங்களுடைய
சிறை வாழ்க்கையில்
அவர்கள் கண்டதில்லை
என்ற காரணத்தினால் ,
அவர்களும் மிரண்டு
போய் தான் நின்றார்கள் ;”

 “ அந்த சித்திரவதை
செய்யும் சிறை
அறைக்குள் எந்தவித
சிறு ஓசையும் இல்லை
அமைதியாக இருந்தது “

“ இந்த நிலையில்
ஜியார்டானோ
புருனோவின்
வாயிலிருந்து சிறு
சத்தம் எழ
ஆரம்பித்தது “

“ அனைவரும்
ஜியார்டானோ
புருனோவையே பார்த்துக்
கொண்டிருந்தனர் ;
அனைவர் கவனமும்
ஜியார்டானோ
புருனோவை
நோக்கியே இருந்தது ;
ஜியார்டானோ புருனோ
என்ன சொல்லப்
போகிறார் என்று
அனைவரும் கவனித்துக்
கொண்டு இருந்தனர் ;”


ஜியார்டானோ புருனோ
நிதானமாக ஒவ்வொரு
வார்த்தையாக சொல்ல
ஆரம்பித்தார்

நான்………………………………………….

போப்………………………………………..

கிளமெண்ட்………………………….

VIII………………………………………………………

அவர்களிடம்……………………………

மட்டும் ………………………………………

தான்…………………………………………………

பேசுவேன்…………………………………..

என்று சொல்லி
விட்டு கண்கள்
இருளத் தொடங்க
அரை மயக்கத்தில்
ஜியார்டானோ புருனோ
கொஞ்சம் கொஞ்சமாக
தலையை சாய்த்தார்,

“அப்போது அவர்
இள வயதில் செய்த
செயல் ஒன்று
அவருக்கு நினைவுக்கு
வந்தது - அந்த காட்சி
அவருடைய
மனத்திரையில் ஓடியது “

“ இள வயது
ஜியார்டானோ
புருனோவை அவர் 
மேல் அன்பு கொண்ட 
ஒரு ஆண் 
துரத்திக் கொண்டு
அவர் பின்னாலேயே
சென்றார் ;”

“ ஜியார்டானோ
புருனோ வேண்டாம்
வேண்டாம் - அந்த
பாவப்பட்ட காரியத்தை
செய்யாதே !
தீர்க்க முடியாத - அந்த
பாவத்தை செய்யாதே !
ஆண்டவரால்
மன்னிக்க முடியாத
அந்த பாவத்தை
செய்யாதே ! - என்று
ஜியார்டானோ
புருனோவைத்
துரத்திக் கொண்டு
அவர் மேல் அன்பு
கொண்ட அந்த 
ஆண் சென்றார்.

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  31-01-2019
/////////////////////////////////////////////////////////////