March 27, 2020

பரம்பொருள்-பதிவு-163


               ஜபம்-பதிவு-411
             (பரம்பொருள்-163)

அரவான்  :
“இந்த இருளை
சாட்சியாக வைத்து
காந்தர்வ முறைப்படி
திருமணம் செய்து
கொள்வோம் “

திருநங்கை  :
“என்னது இருளை
சாட்சியாக
வைத்து திருமணமா
விசித்திரமாக
இருக்கிறது “

“எந்த சுபகாரியத்தை
செய்தாலும்
பஞ்ச பூதங்களான
நிலம், நீர், நெருப்பு,
காற்று, விண்,
ஆகியவற்றை
சாட்சியாக
வைத்துத் தானே
செய்வார்கள் - அதிலும்
பெரும்பான்மையானவர்கள்
ஒளியை சாட்சியாக
வைத்துத் தானே
செய்வார்கள் “

“அப்படி இருக்கும்
போது சுபகாரியமான
திருணத்தை - நாம்
செய்து கொள்ளும் போது
எதற்காக இருளை
சாட்சியாக வைத்து
திருமணம் செய்ய
வேண்டும் என்கிறீர்கள் “

 அரவான் :
“பஞ்சபூதங்களுக்கும்
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;
இந்த பிரபஞ்சத்திற்கு
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;
இந்த உலகத்தில்
உள்ள தோற்றங்கள்
அனைத்திற்கும்
மூலமாக இருப்பதும்
இருள் தான் ;”

“ஆதியும் இருள் தான் ;
அந்தமும் இருள் தான் ;
ஆரம்பமும் இருள் தான் ;
முடிவும் இருள் தான் ;”

“அன்று இருந்ததும்
இருள் தான் ;
இன்று இருப்பதும்
இருள் தான் ;
நாளை இருக்கப்
போவதும்
இருள் தான் ;”

“இந்த உலகம்
முழுவதும் நிரம்பி
இருப்பதும்
இருள் தான் ;
அனைத்துப்
பொருட்களிலும்
ஊடுருவி நிரம்பி
இருப்பதும்
இருள் தான் ;”

“இருள் இன்றி
இந்த உலகத்தில்
எதுவும் இல்லை “

“ஒளியானது தனது
ஆயுட்காலம்
இருக்கும் வரை
இருளுக்குள் இருந்து
விட்டு செல்லும் ;
ஒளியானது
நிலையானது
கிடையாது ;
நிலையற்றது ;
என்றும் இருக்கப்
போவது இருள்
ஒன்று தான் ; “

“அதனால் தான்
நிலையற்ற ஒளியை
சாட்சியாக வைக்காமல்
நிலையான இருளை
சாட்சியாக வைத்து
நாம் காந்தர்வ
முறைப்படி
திருமணம் செய்து
கொள்ளலாம் என்றேன் “

திருநங்கை  :
“நீங்கள் வித்தியாசமாக
யோசிப்பவர் என்று
கேள்விப்பட்டேன் ;
ஆனால் இவ்வளவு
வித்தியாசமாக
யோசிப்பவர் என்பதை
இப்போது தான்
தெரிந்து கொண்டேன் ; “

“உங்கள் கருத்தை
நான் ஏற்றுக்
கொள்கிறேன் ;
நாம் இருளை
சாட்சியாக வைத்தே
திருமணம்
செய்து கொள்வோம் “

(ஏற்கனவே அழகாக
கோர்த்து வைக்கப்பட்ட
மாலையை அரவான்
தன்னுடைய கையில்
எடுத்து திருநங்கையின்
கழுத்தில் போட்டான் ;
திருநங்கை தன்னுடைய
கையில் இருந்த
மாலையை அரவான்
கழுத்தில் போட்டாள் ;
அரவானின்
திருமணம் காந்தர்வ
முறைப்படி நடக்க
இருள் அதற்கு
சாட்சியாக இருந்தது ;)

அரவான் :
“வாருங்கள் என்னுடைய
மாளிகைக்குள் இருக்கும்
என்னுடைய தனிமையான
அறைக்குள் செல்வோம் “

திருநங்கை :
“என்னை நீங்கள்
உள்ளே வா என்று
அழைத்தால் தான்
நான் மாளிகைக்குள்
வருவேன் “

அரவான்  :
“அப்படியா !
என்னுடைய
இதயசிம்மாசனத்தில்
வீற்றிருக்கும்
என்னுடைய
இதய ராணியே  !
என்னுடைய
மாளிகைக்கு வர
வேண்டும்  

(என்று
திருநங்கையைப்
பார்த்துக் கொண்டே
தன்னுடைய ஒரு
கையை நீட்டினான்
அரவான் “

“வெட்கத்தால்
தலைகுனிந்த
திருநங்கை
அரவானின் கையைப்
பற்றிக் கொண்டு
அரவானின்
மாளிக்கைக்குள்
இருக்கும் அரவானின்
தனி அறைக்குள்
நுழைந்தாள் “)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 27-03-2020
//////////////////////////////////////////