அன்பிற்கினியவர்களே,
“ திருநெல்வேலி
மாவட்டத்தில்
வீரத்திற் கொரு
விளை நிலமாய் ;
பல்வகைக் கலைகளும்
பூத்துக் குலுங்கும்
சிறப் பிடமாய் ;
அறிவுத் திறனில்
உயர்ந்து விளங்கும்
புகழி டமாய் ;
அன்பு ஈவதில்
சிறந்து விளங்கும்
உயர் விடமாய் ;
விளங்கும்
கிராமத்தில் பிறந்து
இளவயது முதல்
தமிழில் படித்து ;
தமிழாய் வளர்ந்து ;
கல்லூரி படிப்பை
ஆங்கில
இலக்கியத்தில் படித்து
;
ஆங்கில ஆசிரியராக
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்கள்
தலைமையாசிரியராக
பதவி உயர்வு பெற்று
சீரிய முறையில்
பணியாற்றிக்
கொண்டிருக்கிறார் !”
“ அவர் கல்வித் துறையில்
இந்த அளவிற்கு
உயர்ந்ததற்கு காரணம்
அவர் சுவாசமாக
சுவாசித்தது
“ செய்யும் தொழிலே
தெய்வம் “ - என்ற
பழமொழியைத் தான் “
“ செய்யும் தொழிலே
தெய்வம் என்று
தாங்கள் செய்யும்
தொழிலை
நினைப்பவர்கள்
வாழ்க்கையின் உயர்ந்த
நிலைகளைத் தொட்டு
மக்களின் மனதில்
இடம் பெறுவார்கள்
என்பதற்கு
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களே சாட்சி !”
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்கள்
தலைமையாசிரியராக
பதவியேற்ற போது
காலம் குறுகியதாக
இருந்த காரணத்தினால்
அவருடைய
பதவியேற்பு
விழாவிற்கு
என்னாலும்
என்னுடைய
நண்பர்களாலும்
செல்ல முடியவில்லை ! “
“ தற்போது
பணி நிமித்தம்
காரணமாக
சென்னை
வந்திருந்த போது
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களை
நானும் என்னுடைய
நண்பர்களும்
வாழ்த்தும் பேறு
பெற்றோம் ! “
“ உழைப்புக்கு
உதாரணமாக திகழ்ந்து
கொண்டிருக்கும் ;
மாணவர்களின்
எதிர்கால
வாழ்வாதாரத்திற்கு
வழிகாட்டியாக
விளங்கிக்
கொண்டிருக்கும் ;
என்னுடைய
இரண்டாவது அண்ணன்
தலைமையாசிரியர்
திரு.K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்தும் போது !
பெருமையும்
மகிழ்ச்சியும் அடைவது,
!
நானும் என்னுடைய
நண்பர்களும் மட்டுமல்ல
?
எங்களுடைய தந்தை
தெய்வத்திரு
T.காசிநாதன்
மற்றும்
எங்களுடைய தாயார்
K.சொர்ணம்
அவர்களும்
சேர்ந்து தான்
என்று சொல்லிக்
கொள்வதில் நான்
மிக்க மகிழ்ச்சி
அடைகிறேன்
----------என்றும் அன்புடன்
----------- K.பாலகங்காதரன்
--------- 07-07-2019
//////////////////////////////////////////////////////////