February 06, 2019

திருக்குறள்-பதிவு-99


                       திருக்குறள்-பதிவு-99

பெல்லரமினோ :
“நான் என்ன செய்ய
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்கள் “

கார்டினல் சார்டோரி :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மூலம்
ஆண்டவரின்
வார்த்தைகளை
மக்களிடம் கொண்டு
செல்லும் புனிதமான
பணியை நாம்
மேற்கொண்டிருக்கும்
போது ஜியார்டானோ
புருனோவைப்
போன்றவர்களால்
சில சமயங்களில்
பிரச்சினைகள்
எழத்தான் செய்யும் ; “

“ ஆனால், மற்ற
பிரச்சினைகளைப்
போல் ஜியார்டானோ
புருனோவின்
பிரச்சினையைக் கருதிக்
கொண்டு சரியான
விதத்தில்
பிரச்சினையைக்
கையாளவில்லை என்றால்
இதனால் ஏற்படக்கூடிய
அனைத்து
விளைவுகளுக்கும்
நாம் தான்
பொறுப்பேற்க
வேண்டி வரும் ; “

“ ஜியார்டானோ
புருனோவின்
பிரச்சினை ஒரு
தனி நபருடைய
பிரச்சினையாக
இல்லாமல்
உலகளாவிய
பிரச்சினையாக
தற்போது மாற்றப்பட்டு
இருக்கின்ற காரணத்தினால்
இந்த உலகமே
ஜியார்டானோவின்
பிரச்சினையை உற்று
கவனிக்கும் நிலையில்
இருக்கிறது ;”

பெல்லரமினோ :
“ இந்த பிரச்சினையை
எப்படி தீர்ப்பது
என்பதை அறிந்து
கொள்வதற்காகத் தான்
நான் உங்களைத்
தேடி வந்தேன் “

கார்டினல் சார்டோரி :
“இந்த பிரச்சினை குறித்து
போப் அவர்களிடம்
பேசிப் பாருங்கள் “

பெல்லரமினோ :
“ நான் போப்
அவர்களை சந்தித்தேன் “

“ ஜியார்டோனோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்படுவதை
அவர் விரும்பவில்லை “

“ ஜியார்டோனோ புருனோ
உயிரோடு இருக்க
வேண்டும் என்பதையே
போப் அவர்கள்
விம்புகிறார் “

“ அதுமட்டுமில்லை,
இந்த விசாரணையின்
மீது போப் அவர்கள்
அதிக அளவு அக்கறை
கொண்டு இருக்கிறார் “

“ சிறிய தவறு கூட
நேர்ந்து விடக்கூடாது
என்பதில் கவனமாக
இருக்கிறார் “

கார்டினல் சார்டோரி :
“ அப்படி என்றால்
ஜியார்டானோ புருனோ
மனம் மாற வேண்டும் “

“ மனம் மாறுவார் என்று
நீங்கள் நினைக்கிறீர்களா “

பெல்லரமினோ :
“எனக்குத் தெரியவில்லை”

கார்டினல் சார்டோரி :
“ஜியார்டானோ
புருனோவை
சித்திரவதை செய்து
மனமாற்றம் அடையச்
செய்ய முடியாது

ஆனால்,
ஒன்று செய்யலாம் “

பெல்லரமினோ :
“என்ன செய்யலாம்”

கார்டினல் சார்டோரி :
“ அவரை சிறையிலிருந்து
வெளியே அழைத்து
வந்து உங்களுடைய
தனிமையான இடத்தில்
வைத்து அவரிடம்
நட்பு ரீதியாக
பேசிப் பாருங்கள் “

பெல்லரமினோ :
“ இது சரியாக வரும்
என்று நீங்கள்
நினைக்கிறீர்களா…………….? “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவின்
குணத்தை அறிந்து
கொள்வதற்கும்
அவர் மனதில்
என்ன இருக்கிறது
என்பதை தெரிந்து
கொள்வதற்கும்
ஒரு நல்ல வாய்ப்பாக
ஜியார்டோனோ
புருனோவின்
சந்திப்பை நீங்கள்
ஏன் பயன்படுத்திக்
கொள்ளக் கூடாது…………………..? “

“ பல வருடங்களாக
சிறையில் இருந்தவர் ;
பலவிதமான
சித்திரவதைகளை
அனுபவித்தவர் ;
சுதந்திரத்தின் சுவாசக்
காற்று எப்படி இருக்கும்
என்பதை அவருக்கு
கொஞ்சம் காட்டுங்கள் ;
என்ன நடக்கிறது
என்று பார்ப்போம் “

பெல்லரமினோ :
“ முயற்சி செய்து
பார்க்கிறேன் “

கார்டினல் சார்டோரி :
“ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
பெல்லரமினோ………….? “

“ பெல்லரமினோவாக
இருக்கும் தாங்கள்
கார்டினல் என்ற
பதவியைப் பெற்று
கார்டினல்
பெல்லரமினோவாக
பதவி ஏற்கப்
போகிறீர்கள் என்பதை
நினைவில்
கொள்ளுங்கள்.”

“ அந்த பதவிக்குரிய
புனிதத்தை
காப்பாற்றுவதற்காக
எத்தகைய
செயல்களைச்
செய்ய வேண்டுமோ
அத்தகைய
செயல்களை
துணிந்து
செய்யுங்கள்.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  06-02-2019
/////////////////////////////////////////////////////////////