ஜபம்-பதிவு-406
(பரம்பொருள்-158)
உலூபி :
“நீ எந்தவொரு
செயலைச் செய்யும்
போதும் அந்த செயல்
சரியான செயலாகத்
தான் இருக்கும் என்ற
காரணத்தினால் தான்
நீ எந்தவொரு
செயலைச் செய்யும்
போதும் நான்
எந்தவிதமான
தடையையும்
ஏற்படுத்தியதில்லை “
“இப்போது நீ செய்யப்
போகும் களப்பலி என்ற
செயலுக்குக் கூட நான்
தடையை ஏற்படுத்தவில்லை”
“தடையை ஏற்படுத்த
முடியாது என்பது
எனக்குத் தெரியும் “
“இருந்தாலும் நான் செய்த
செயல்கள் அனைத்தும்
பெற்ற மகனின் உயிரைக்
காப்பாற்றுவதற்காக
ஒரு தாய் செய்யும்
செயல்கள் தான் ;
ஒரு தாய் செய்யும்
செயல்களைத் தான்
நானும் செய்தேன் ; “
“முடிந்தவரை முயற்சி
செய்தேன் உன்னுடைய
களப்பலியைத் தடுப்பதற்கு ;
முடியாது என்பதை
முயற்சி செய்தபின்
தான் தெரிந்து கொண்டேன் “
“நீ செய்யப் போகும்
களப்பலி என்ற செயல்
சரியானது தான்
என்பதை நான்
தாமதமாகத் தான்
தெரிந்து கொண்டேன்”
“பரந்தாமன் ஶ்ரீகிருஷ்ணன்
உன்னிடம் கையேந்தி
நின்றார் என்ற
காரணத்திற்காகவோ ;
உன்னுடைய தந்தை
ஒப்புதல் அளித்தார்
என்ற காரணத்திற்காகவோ ;
உன்னுடன் இரத்த
சம்பந்தம் கொண்டவர்கள்
ஒப்புதல் அளித்தார்கள்
என்ற காரணத்திற்காகவோ ;
நான் உன்னை ஆசிர்வாதம்
அளித்து உன்னை
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போவதில்லை “
“என்னுடைய மகன்
அரவான் செய்யும் செயல்
சரியான செயலாகத் தான்
இருக்கும் என்ற
காரணத்திற்காகத் தான்
நான் உன்னை ஆசிர்வதித்து
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போகிறேன்”
“என்னுடைய மகன்
அரவான் ஒரு செயலைச்
செய்தால் அதில் ஆயிரம்
நன்மைகள் இருக்கும்
என்ற காரணத்திற்காகத் தான்
நான் உன்னை ஆசிர்வதித்து
களப்பலிக்கு வழியனுப்பி
வைக்கப் போகிறேன்”
“மற்றவர்கள் வாழ்வதற்காக
உன்னுடைய வாழ்க்கையையே
அழித்துக் கொள்வதற்காக
தயாராகிக் கொண்டிருக்கும்
உன்னுடைய செயலைக்
கண்டு நான் பெருமை
அடைகிறேன் என் மகனே”
“தியாகத்தின் உருவமாக
திகழ்ந்து கொண்டிருக்கும்
உன்னை பெற்று எடுத்ததற்காக
நான் மிகுந்த மகிழ்ச்சி
அடைகிறேன் என் மகனே”
“யாருக்கும் கிடைக்காத
மிகப்பெரிய பாக்கியம்
உனக்கு கிடைத்திருக்கிறது
ஆமாம் !
தாயே தன்னுடைய
மகனை களப்பலிக்கு
அனுப்பும் மிகப்பெரிய
பாக்கியம் உனக்கு
கிடைத்திருக்கிறது “
(என்று சொல்லி விட்டு
உலூபி சுவரில் மாட்டி
வைக்கப்பட்டிருந்த
வாளை எடுத்தாள் ;
தன்னுடைய கட்டை
விரலால் வாளில்
அழுத்தமாகக் கீறினாள் ;
உலூபியின் கட்டை
விரலில் இருந்து
இரத்தம் அருவியென
கொட்டியது இரத்தத்தால்
நனைந்திருந்த கட்டை
விரலால் உலூபி
தன்னுடைய மகன்
அரவானின் நெற்றியில்
இரத்தத்தால்
திலகம் இட்டாள் )
(இந்த உலகத்தை
காப்பாற்றுவதற்காக
தன்னுடைய இரத்தத்தையே
கொடுப்பதற்காக காத்துக்
கொண்டு இருக்கும்
அரவானின் நெற்றியில்
உலூபி தன்னுடைய
கட்டை விரலில் இருந்து
வழியும் இரத்தத்தால்
இரத்தத் திலகமிட்டாள்)
“செல் மகனே செல் !”
“இந்த உலகத்தை
காப்பாற்றக் கூடிய
மிகப்பெரிய பொறுப்பு
உன்னிடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது”
“உனக்கு அளிக்கப்பட்ட
பொறுப்பை
நிறைவேற்றுவதற்காக
செல் மகனே செல் !”
“வருங்கால உலகத்தை
காப்பாற்றுவதற்காக
செல் மகனே செல் ! “
(தாயிடம் ஆசிகள் பெற்று
விட்டு அரவான்
உலூபியின் அறையை
விட்டு வெளியே
சென்று கொண்டிருந்தான் ;
அரவான் செல்லும்
திசையையே பார்த்துக்
கொண்டிருந்தாள் உலூபி ;
அவளையும் அறியாமல்
அவள் கண்களிலிருந்து
சிந்திய கண்ணீர் இந்த
பூமியை நனைத்தது)
----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 19-03-2020
//////////////////////////////////////////