திருக்குறள்-
ஐயப் படாஅது-பதிவு-6
“யார் ஒருவர்
உணர்ந்து
வைத்திருக்கிறாரோ
அவர் தான்
கடவுளுக்கு
ஒப்பானவர்
கடவுளுக்கு
சமமாக
மதிக்கப்பட
வேண்டியவர்
கடவுளாகவே
துதிக்கப்பட
வேண்டியவர்
ஏனென்றால்
அவர் அகத்திற்குள்
உள்ள அறிவாக
இருக்கும் கடவுளை
உணர்ந்து
கடவுளாகவே
மாறியவர்
அகத்திற்குள்
கடவுள் அறிவாக
இருக்கிறார்
அந்த கடவுளே
இந்த பிரபஞ்சம்
முழுவதும்
அறிவாக இருக்கிறது
அகத்திற்குள்
ஜீவாத்மாவாக
இருக்கும் கடவுள்
புறத்தில்
பரமாத்மாவாக
இருக்கிறார்
என்பதை
உணர்ந்தவர்
கடவுளாகவே
மதிக்கப்பட
வேண்டியவர்
“
“ஐயப் படாஅது
என்றால்
சந்தேகத்திற்கு
சிறிதும் இடம்
இல்லாமல்
என்று பொருள்”
“அகத்தது
உணர்வானை
என்றால்
அகத்திற்குள்
கடவுள்
இருக்கிறார்
என்பதை
உணர்ந்தவன்
என்று பொருள்”
“தெய்வத்தோ
டொப்பக் கொளல்
என்றால்
அகத்திற்குள்
ஜீவாத்மாக
இருக்கும் கடவுள்
புறத்தில்
பரமாத்மாவாக
இருக்கிறார்
என்பதை
உணர்ந்து கொண்டு
அகத்திற்குள்
இருக்கும்
கடவுள் எங்கே
இருக்கிறார்,
கடவுளை
அடையக்கூடிய
வழி எது,
கடவுளை
அடைவதற்கு
பயன்படுத்தக்
கூடிய
பொருள் எது
என்பதை
உணர்ந்து
இவைகளைக்
கடைபிடித்து
பின்பற்றி
வழிநடந்து
இறைவனாகவே
மாறியவனை
இறைவனாக மதிக்க
வேண்டும்
என்று பொருள்”
“அதாவது
நம்முடைய
உடலில்
அகத்திற்குள்
ஜீவாத்மாக
இருக்கும் கடவுள்
புறத்தில்
பரமாத்மாவாக
இருக்கிறார்
என்பதை
சந்தேகத்திற்கு
இடமின்றி
உணர்ந்து
கொண்டு
அகத்திற்குள்
இருக்கும்
கடவுள் எங்கே
இருக்கிறார்,
கடவுளை
அடையக்கூடிய
வழி எது,
கடவுளை
அடைவதற்கு
பயன்படுத்தக்
கூடிய
பொருள் எது
என்பதை
உணர்ந்து
இவைகளைக்
கடைபிடித்து
பின்பற்றி
வழிநடந்து
இறைவனாகவே
மாறியவனை
இறைவனாக மதிக்க
வேண்டும்
என்பதைத் தான்
திருவள்ளுவர்
ஐயப் படாஅது
அகத்தது
உணர்வானைத்
தெய்வத்தோ
டொப்ப கொளல்
என்ற திருக்குறளின்
மூலம் தெளிவு
படுத்துகிறார்
----------என்றும்
அன்புடன்
----------K.பாலகங்காதரன்
-----------11-11-2020
//////////////////////////////////////////