November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-3

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-3

 

“மனதின்

முடிவில் தான்

அறிவானது

இயங்கத் தொடங்கும்

அறிவின்

முடிவில் தான்

மனமானது

இயங்கத் தொடங்கும்”

 

“மனம் எங்கே

முடிவு அடைகிறதோ

அங்கே தான்

அறிவானது

தொடங்குகிறது

அறிவானது

எங்கே

முடிவடைகிறதோ

அங்கே தான்

மனமானது

தொடங்குகிறது”

 

“மனதின்

இறப்பில் தான்

அறிவின்

பிறப்பானது

தொடங்குகிறது

அறிவின்

இறப்பில் தான்

மனதின்

பிறப்பானது

தொடங்குகிறது

அதாவது

ஒன்றின்

அழிவில் தான்

மற்றொன்று

பிறக்கிறது”

 

“மனம்

இறக்கும் போது

அறிவானது

பிறக்கிறது

அறிவு

இறக்கும் போது

மனமானது

பிறக்கிறது”

 

“உயிரானது

படர்க்கை நிலையில்

விரிவு அடையும்

போது மனமாகிறது

மனமானது

ஒடுக்க நிலையில்

ஒடுங்கும் போது

அறிவாகிறது”

 

“உயிரானது

படர்க்கை நிலை

எய்தி

விரிவடைந்து

மனமாக

இயங்கிக்

கொண்டிருக்கும்

போது அதன்

சுழற்சி நிலை

அதிகமாக இருக்கும்”

 

“உயிரானது

மனமாக

இயங்கும் போது

மனம் என்ற

நிலையில்

உயிரானது

சுழன்று கொண்டே

இருக்கிறது”

 

“உயிரானது

மனம் என்ற

நிலையில்

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

மனதிற்கு

கட்டுப்பட்டு

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

தவறாகத்

தான் இருக்கும்”

 

“இயங்கிக்

கொண்டிருந்த

மனமானது

ஒடுங்கி

உயிருடன்

இணையும் போது

அறிவாகிறது

உயிரே

அறிவாக

இருக்கும் நிலையில்

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

சரியானதாகத்

தான் இருக்கும்”

 

“உயிரானது

மனமாக

மாறும் போது

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

தவறாக

இருக்கும் என்ற

காரணத்தினால்

தான் மனம்

இயங்கிக்

கொண்டிருக்கும்

போது எந்த

ஒரு முடிவும்

எடுக்கக் கூடாது”

 

“மனமானது

ஒடுங்கி

அறிவாகவே

மாறும் போது

எடுக்கப்படும்

எந்த ஒரு

முடிவும்

சரியாகத்

தான் இருக்கும்

இந்த

நிலையில்

தான் எந்த

ஒரு முடிவையும்

எடுக்க வேண்டும்”

 

“நாம் ஒரு

பொருளைத்

தொலைத்து விட்டு

மனமானது

இயங்கிக்

கொண்டிருக்கும் போது

தொலைந்த

பொருளைத்

தேடிய போது

கிடைக்கவில்லை “

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////

No comments:

Post a Comment