November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-5

 

திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-5

 

“உயிரே

அறிவாக இருக்கிறது

அந்த அறிவே

கடவுளாக இருக்கிறது

அந்த கடவுளே

நமது சிரசில்

இருக்கிறது

என்பதை உணர்ந்து

கடவுள் நம்முடைய

உடலில் சிரசில்

எந்த இடத்தில்

இருக்கிறார்

கடவுளை

அடையக் கூடிய

வழி எது

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்த

வேண்டியது எது

என்பதை அறிந்து

அதைப்

பயன்படுத்தி

ஞானம், சமாதி,

என்ற வரிசையில்

முக்தி என்ற

மோட்ச நிலையை

ஒருவன்

அடையும் போது

மனிதன்

கடவுளாகவே

மாறுகிறான்:

 

“கடவுள் நமக்குள்

இருக்கிறார்

கடவுள் நமக்குள்

அறிவாக

இருக்கிறார்

கடவுள்

அறிவாகவே

இருக்கிறார்

அறிவாக

கடவுளே

இருக்கிறார்

நம்முடைய

உடலில்

ஜீவாத்மாவாக

இருக்கும்

கடவுள்

தான்

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

பரமாத்மாவாக

இருக்கிறது

என்பதை

மனிதன்

உணர்ந்து

கொள்ளும் போது

மனிதன்

கடவுளாகவே

மாறுகிறான்”

 

“நமக்குள்

அறிவாக இருக்கும்

கடவுள் - இந்த

பிரபஞ்சம்

முழுவதும் இருக்கிறார்

இந்த பிரபஞ்சம்

முழுவதும்

இருக்கும்

கடவுள் தான்

நம்முடைய

உடலிலும் இருக்கிறது

என்பதையும்”

 

“இந்த பிரபஞ்சத்தின்

ரகசியங்கள்

அனைத்தும் எப்படி

இந்த பிரபஞ்சம்

முழுவதும் நிரம்பி

இருக்கிறதோ

அத்தனை ரகசியங்கள்

அனைத்தும்

நமக்குள் இருக்கிறது

என்பதையும்”

 

“பல கோடி

வருடங்கள்

இந்த பிரபஞ்சம்

எப்படி பரிணமித்து

வந்தது என்பது

பற்றிய ரகசியங்கள்

எப்படி இந்த

பிரபஞ்சத்தில்

இருக்கிறதோ

அப்படியே

நமக்குள்ளும்

அந்த ரகசியங்கள்

அனைத்தும் மறைந்து

இருக்கிறது

என்பதையும்”

 

“இந்த பிரபஞ்ச

ரகசியங்கள் எப்படி

இந்த பிரபஞ்சம்

முழுவதும் பரவிக்

கிடக்கிறதோ

அப்படியே

இந்த பிரபஞ்ச

ரகசியங்கள்

அனைத்தும்

நமக்குள்ளும்

இருக்கிறது

என்பதையும்”

 

“நமக்குள் இருக்கும்

ரகசியத்தை

யார் ஒருவர்

அறிந்து

கொள்கிறாரோ

அவரால் மட்டுமே

இந்த பிரபஞ்ச

ரகசியங்களை

உணர்ந்து கொள்ள

முடியும்

என்பதையும்,”

 

“நமக்குள் நடந்து

கொண்டிருக்கும்

ரகசியங்களை

அறிந்து கொள்ளாமல்

வெளியில் நடக்கும்

ரகசியங்களை

உணர்ந்து கொள்ள

முடியாது

என்பதையும்”

 

“அகத்திற்குள்

இருப்பதை யார்

ஒருவரால் உணர்ந்து

கொள்ள முடியுமோ

அவர்களால் மட்டுமே

புறத்தில் உள்ளதை

உணர்ந்து கொள்ள

முடியும்

என்பதையும்”

 

“அகத்திற்குள்

இருப்பதை உணர்ந்து

கொள்ளாமல்

புறத்தில் உள்ளதை

உணர்ந்து கொள்ள

முடியாது என்பதையும்”

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////

No comments:

Post a Comment