May 29, 2020

500- வது பதிவு !


                       500- வது பதிவு !

அன்பிற்கினியவர்களே

“29-05-2020-ம் தேதி
வெள்ளிக் கிழமை
அன்று
ஜபம் தன்னுடைய
500-வது பதிவை
தொட்டிருக்கிறது “

“என்னுடைய
வாழ்க்கையின்
இரண்டு
கண்களாக
என்றும்
திகழ்ந்து
கொண்டிருக்கும்
என்னுடைய
தாய் திருமதி
K.சொர்ணம்
காசிநாதன்
மற்றும்
என்னுடைய
மனைவி
திருமதி.
P.பிரதீபா
பாலகங்காதரன்
ஆகிய
இருவரும் தான்
இதற்கு
மூலக் காரணமும்
முதற் காரணமும்
முழுக் காரணமும்
அடிப்படைக்
காரணமும்
ஆவர் “

“என்னுடைய
உயிரில்
உயிர்த்து
இயக்கத்தில்
பரிணமித்து
சிந்தனையில்
துளிர்த்து
என்றும்
என்னுடன்
பிணைந்து
இருக்கும்

என்னுடைய
சகோதரர்களான
திரு,K.தில்லைராஜ்
திரு.K.தர்மேந்திரராஜ்
ஆகியோரின்
பாசக் கரம் ;

சீடர்களின்
உதவிக் கரம் ;

உறவினர்களின்
உறவுக் கரம் ;

நண்பர்களின்
நட்புக் கரம் ;

சுற்றத்தார்களின்
ஆதரவுக் கரம் ;

சித்தர்களின்
ஞானக் கரம் ;

இறைவனின்
அருட் கரம் ;

ஆகிய
அனைவருடைய
அன்புக் கரங்களே
என்னுடைய
இந்த
வெற்றிக்குக்
காரணம் “

“இவர்கள்
அனைவரையும்
வணங்கி
என்னுடைய
நன்றியினைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

“என்னுடைய
உயிர்த்தன்மை
இறை நிலையுடன்
இரண்டறக் கலந்து
அதுவாகவே
மாறும் வரை
என்னுடைய
கலைப்பணி
தொடரும்
ஜபம் இன்னும் வரும்
என்பதைத்
தெரிவித்துக்
கொள்கிறேன் “

நன்றி !

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////













அறிய வேண்டியவை-பதிவு-8


               500-வது பதிவு !

               ஜபம்-பதிவு-500
          (அறிய வேண்டியவை-8)

“திரௌபதியின்
சேலையை
துச்சாதனன்
உருவும் போது
திரௌபதி தன்னுடைய
மானத்தைக்
காக்க வேண்டும்
என்று கிருஷ்ணனை
அழைத்தாள் ;
திரெளபதி
கிருஷ்ணனை
அழைத்தபோது
கிருஷ்ணன் வந்து
சேலையைக் கொடுத்து
திரௌபதியின்
மானத்தைக்
காப்பாற்றினார் ;
என்பது
அனைவருக்கும்
தெரியும் ; 
ஆனால்
கிருஷ்ணன்
எப்போது வந்தார் ;
எப்போது சேலை
கொடுத்து உதவினார் ;
எப்போது
திரௌபதியின்
மானத்தைக்
காப்பாற்றினார் ;
என்பது எத்தனை
பேருக்கு தெரியும் ;”

“துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவும் போது
திரௌபதி
தன்னுடைய
இரண்டு கைகளாலும்
தன்னுடைய
மார்புகளை
மூடிக் கொண்டு
கிருஷ்ணா
என்னை காப்பாற்று
என்று கிருஷ்ணனை
அழைத்தாள் ;
அப்போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தொடர்ந்து
துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவிக்
கொண்டிருக்கும் போது
திரௌபதி
தன்னுடைய
ஒரு கையால்
தன்னுடைய
மார்புகளை
மூடிக் கொண்டு
மற்றொரு கையை
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை
காப்பாற்று என்று
கிருஷ்ணனை
அழைத்தாள் ;
அப்போதும்
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை ;”

“தொடர்ந்து
துச்சாதனன்
திரௌபதியின்
சேலையை
உருவிக்
கொண்டிருக்கும் போது
திரௌபதி
தன்னுடைய
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை
காப்பாற்று என்று
கிருஷ்ணனை
அழைத்தாள்   ;
அப்போது
கடவுளாகிய
கிருஷ்ணன் வந்தார் ;
சேலை தந்தார் ;
திரௌபதியின்
மானத்தைக் காத்தார் ; “

“அதாவது  
தன்னுடைய
மானத்தை
தன்னுடைய
இரண்டு கைகளாலும்
காப்பாற்றிக்
கொள்ள  முடியும்
என்று திரௌபதி
நினைத்து
செயல்பட்ட போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தன்னுடைய
மானத்தை
தன்னுடைய
ஒரு கையால்
காப்பாற்றிக்
கொள்ள முடியும்
என்று திரௌபதி
நினைத்து
செயல்பட்ட போது
கடவுளாகிய
கிருஷ்ணன்
வரவில்லை “

“தன்னால்
தன்னுடைய
மானத்தைக்
காப்பாற்றிக்
கொள்ள முடியாது
மனித சக்திக்கு
அப்பாற்பட்ட
கடவுள் சக்தியால்
மட்டுமே
தன்னுடைய
மானத்தைக்
காப்பாற்ற முடியும்
என்று உணர்ந்து
தன்னுடைய
இரண்டு கைகளையும்
மேலே தூக்கி
கிருஷ்ணா
என்னை காப்பாற்று
என்று கிருஷ்ணனை
அழைத்த போது
கடவுளாகிய
கிருஷ்ணன் வந்தார் “

“மனிதனால்
ஒரு செயலைச்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் வரை
கடவுள் வரமாட்டார் ;

“மனிதனால்
ஒரு செயலைச்
செய்ய முடியாது
கடவுளால் மட்டுமே
அந்தச் செயலைச்
செய்ய முடியும்
என்ற நிலை
இருக்கும் போது
தான் கடவுள்
வருவார் என்பதே
இந்த கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டிய
உண்மை ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 29-05-2020
//////////////////////////////////////////