October 26, 2019

தீபாவளி வாழ்த்துக்கள்-27-10-2019

      தீபாவளி வாழ்த்துக்கள்-27-10-2019


அன்பிற்கினியவர்களே!

“இந்துமதப் பண்டிகைகளில்
மிக முக்கியமான பண்டிகை
தீபாவளி பண்டிகை.”

“பிராக்சோதிடபுரியை
ஆண்ட நரகாசுரன் என்ற
அரக்கனையழித்த நாளே
தீபாவளி என்று கூறிக்
கொண்டிருப்பது
தவறான கருத்தாகும்.”

“அரக்கனை அழித்த நாளுக்கு
ஒரு கொண்டாட்டம் என்பது
எங்கும்; எக்காலத்தும்; எந்த
இடத்திலும்; இருந்தது இல்லை”

“அரக்கனைக் கொன்றதற்கு
ஒரு பண்டிகை என்றால்
இராவணணைக் கொன்ற நாள் ;
கம்சனைக் கொன்ற நாள் ;
இடும்பனைக் கொன்ற நாள்;
பகனைக் கொன்ற நாள்;
துரியோதனனைக்
கொன்ற நாள்;
அவ்வாறே,
அந்தகாசுரனைக்
கொன்ற நாள்;
சலந்தராசுரனைக்
கொன்ற நாள்;
இரண்யாட்சனைக்
கொன்ற நாள்;
திருவணாவர்த்தனைக்
கொன்ற நாள்;
இப்படிப் புகழ்
படைத்த அரக்கர்கள்
ஒவ்வொருவரையுங்
கொன்ற
நாட்களையெல்லாம்
கொண்டாட
வேண்டியதாயிருக்கும்;
அந்த கொண்டாட்டங்களை
எல்லாம் பண்டிகையாக
கொண்டாடினால் நம்
வாழ்க்கையே முடிந்து விடும்;
எனவே, அரக்கனைக்
கொன்ற நாளை இந்துக்கள்
தீபாவளித் திருநாளாக
கொண்டாடவில்லை
என்பதை முதலில்
மனதில் நிறுத்த வேண்டும்;”

“ஐப்பசி மாதம் அமாவாசைக்கு
முன் தினம் தீபாவளி வரும்”

“தீபம்-+ஆவளி=தீபாவளி
தீபம் என்றால் விளக்கு
என்று பொருள்;
ஆவளி என்றால் வரிசை
என்று பொருள்;
தீபாவளி என்றால்
தீபத்தை வரிசையாக
வைத்துச் சிவபெருமானை
வழிபடுவதற்கு உரிய நாள்
தீபாவளி என்று பொருள்”

“இந்த உலகத்தில்
ஒளியைத் தருகின்ற
பொருள்கள் மூன்று:

ஒன்று    :சூரியன்
இரண்டு  : சந்திரன்
மூன்று   :விளக்கு

“சூரியனும் சந்திரனும் நமக்கு
வேண்டிய காலத்தில்
வேண்டிய நேரத்தில்
வேண்டிய இடத்தில்
ஒளியைத் தருவதில்லை ;
ஆனால் விளக்கிலிருந்து
பெறப்படும் ஒளியை
வேண்டிய காலத்தில்
வேண்டிய நேரத்தில்
வேண்டிய இடத்தில்
பயன் படுத்திக் கொள்ளலாம்;”

“சூரியன் மற்றும் சந்திரனை
விளக்குடன் ஒப்பிடும்போது
சூரியன் மற்றும்
சந்திரனிலிருந்து
பெறப்படும் ஒளியை விட
விளக்கிலிருந்து பெறப்படும்
ஒளி எவ்வளவு மகத்துவம்
வாய்ந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் ;
இந்த விளக்கிலிருந்து
வெளிப்படும் ஒளியை
வணங்கும் நாள் தான்
தீபாவளித் திருநாள்.;”

“தீபமங்கள ஜோதியாக
விளங்கும் சிவபெருமானை
தீபத்தை வரிசையாக வைத்து
பிரம்ம முகூர்த்தத்தில்
எண்ணெய் ஸ்நானம் செய்து
நீராடி சிவபெருமானை
வழிபடுவதற்கு உரியநாள்
தான் தீபாவளித் திருநாள்”

“திருக்கார்த்திகையில்
எப்படி தீபமேற்றி இறைவனை
வணங்குகிறார்களோ
அதைப்போலத் தான்
தீபாவளித் திருநாள்
அன்றும் இறைவனை
தீபமேற்றி வணங்குகிறார்கள்”

“இந்துக்களின் வழிபாட்டுக்கு
இன்றியமையாத ஒன்றாக
விளங்குவது தீபமாகும் ;
அந்த காலம் முதல்
இந்தக் காலம் வரை
திருவிளக்கு பூஜை செய்வதும் ;
மங்கல காலங்களில்
விளக்கை ஏற்றுவதும் ;
திருமண காலத்திலே
விளக்குகளை வைத்து
மணமக்கள் வலம் வருவதும் ;
நம் நாட்டு வழக்கமாகும்.”

“இந்துமதத்தின் புனிதத்
தன்மையைப் பற்றியும் ;
இந்துக்களால் கொண்டாடப்படும்
பண்டிகைகள், திருவிழாக்கள்
ஆகியவற்றைப் பற்றியும் ;
இந்துக்களால் நடத்தப்படும்
சடங்குகள் பற்றியும் ;
தெரியாதவர்களான
பகுத்தறிவாதிகள் என்று
தங்களை சொல்லிக்
கொள்பவர்கள் ;
பிற மதத்தவர்கள் ;
பிற மதத்தவர்களின்
ஓட்டுக்களை வாங்குவதற்காக
இந்துமதத்தையும்
இந்துக்களால்
கொண்டாடப்படும்
பண்டிகைகளையும்
இகழுபவர்கள்;
சமூக ஆர்வலர்கள் என்று
தங்களை சொல்லிக் கொண்டு
கருத்து சொல்லிக் கொண்டு
இந்த சமுதாயத்தில் திரிந்து
கொண்டிருப்பவர்கள் ;
,இவர்கள் தான் ;
தீபாவளித் திருநாளில்
புதைந்துள்ள புனிதத்தன்மை
தெரியாமல் தீபாவளிப்
பண்டிகையை இகழுவார்கள் ;”

“இத்தகையவர்களை
புறந்தள்ளி விட்டு
இந்துக்களின் புனிதத்தன்மை
வாய்ந்த பண்டிகையாம்
தீபாவளித் திருநாளை
27-10-2019-ம் தேதி
ஞாயிற்றுக் கிழமையன்று
ஞான விளக்கேற்றி மனதில்
உள்ள இருளையெல்லாம்
அகற்றி விட்டு ;
நம்மிடமுள்ள
காமம், குரோதம், லோபம்,
மோகம், மதம், மாச்சரியம்
ஆகிய ஆறுவகை
குணங்களை பட்டாசுகளால்
சுட்டுத்தள்ளி விட்டு ;
இறைவனின் திருநாமத்தை
சொல்லி தீய சக்திகளை
எல்லாம் அழித்து விட்டு ;
தீபாவளித் திருநாளை
மகிழ்ச்சியுடன்
கொண்டாடுவோம் ;”

“தீபாவளித் திருநாள்
வாழ்த்துக்கள் !”

--------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
---------26-10-2019
/////////////////////////////////////////////////////