June 20, 2019

பரம்பொருள்-பதிவு-28


                     பரம்பொருள்-பதிவு-28

“இறைவன் இந்த
பிரபஞ்சம் முழுவதும்
நீக்கமற நிறைந்திருந்து
மூன்று நிலைகளில்
எழுந்தருளி
அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறான் “

ஒன்று:  அருவ நிலை
இரண்டு: உருவ நிலை
மூன்று: அருஉருவ நிலை

பனிக்கட்டி--->உருவநிலை

“தண்ணீரை எடுத்துக்
கொள்வோம்,.
தண்ணீரை ஜீரோ (ZERO)
டிகிரி செல்சியஸ்
அளவிற்கு குளிர்படுத்தும்
போது தண்ணீரானது
பனிக்கட்டியாக
மாற்றம் அடைகிறது,
பனிக்கட்டியின்
இந்த நிலையைத் தான்
நாம் உருவநிலை
என்கிறோம்
அதாவது பனிக்கட்டியின்
நிலை என்பது
தண்ணீரின் உருவ
நிலையைக் குறிக்கும் “

ஆவியாதல்--->அருவநிலை

“ தண்ணீரை 100 டிகிரி
செல்சியஸ் அளவிற்கு
சூடேற்றி கொதிக்க
வைக்கும் போது
தண்ணீரானது ஆவியாகிறது
தண்ணீரின் ஆவியாகும்
இந்த நிலையைத் தான்
நாம் அருவ நிலை
என்கிறோம்,.
அதாவது ஆவியாகும்
நிலை என்பது தண்ணீரின்
அருவநிலையை அதாவது
தண்ணீரின் உருவமற்ற
நிலையைக் குறிக்கும் “

தண்ணீர்-->அருஉருவநிலை

“ தண்ணீரானது தன்னுடைய
இயல்பான நிலையில்
இருக்கும் போது
அருஉருவ நிலையில்
இருக்கிறது - அதாவது
தண்ணீர் என்பது
அருஉருவ நிலையில்
இருப்பதைக் குறிக்கும்
அதாவது தண்ணீர்
தன்னுடைய இயல்பான
நிலையில்
உருவமற்ற நிலையையும் ;
உருவமுள்ள நிலையையும் ;
கொண்டுள்ளது
என்பதைக் குறிக்கும் “

பனிக்கட்டி :
உருவ நிலையைக்
குறிக்கும்

தண்ணீர் :
உருவ நிலையையும்,
அருவ நிலையையும்
குறிக்கும்,

ஆவியாதல் :
உருவமற்ற நிலையைக்
குறிக்கும்,

“ இந்த பிரபஞ்சத்தில்
உள்ள எந்த ஒரு
பொருளை எடுத்துக்
கொண்டாலும்
அந்தப் பொருளினுடைய
இந்த மூன்று
நிலைகளையும்
தெரிந்து கொண்டாலன்றி
நம்மால் அந்த
பொருளைப் பற்றி
முழுமையாக தெரிந்து
கொள்ள முடியாது “

“ ஒரு பொருளைப் பற்றி
ஒருவன் முழுமையாக
தெரிந்து கொண்டவனாக
இருப்பானேயாகில்
அவன் அந்தப் பொருளின்
இந்த மூன்று
நிலைகளையும் தெரிந்து
கொண்டவனாய் தான்
இருப்பாய் “

“ உலகில் உள்ள எந்த
ஒரு பொருளின்
தன்மையைப் பற்றி
முழுமையாக அறிந்து
கொள்ள வேண்டும்
என்றால் - அந்தப்
பொருளினுடைய
அருஉருவ நிலையை
முதலில் அறிந்து
கொள்ள வேண்டும்
ஒரு பொருளின்
அருஉருவ நிலையை
அறிந்து கொண்டால்
மட்டுமே - அந்த
பொருளினுடைய
உருவ நிலையையும்
அருவ நிலையையும்
நம்மால் அறிந்து
கொள்ள முடியும் “

“ தண்ணீரின் இயல்பான
நிலை என்பது
அருஉருவ நிலை
என்பதை - நாம்
உணர்ந்து கொண்டால்
பனிக்கட்டி என்பது
தண்ணீரின் உருவநிலை
என்பதையும்
ஆவியாதல் என்பது
தண்ணீரின்
உருவமற்ற நிலை
என்பதையும்
நம்மால் உணர்ந்து
கொள்ள முடியும் ‘

“ தண்ணீரின்
அருஉருவ நிலையை
நாம் உணர்ந்து
கொள்ளும் போது
தண்ணீரின் உருவநிலை
மற்றும் தண்ணீரின்
அருவ நிலை
ஆகியவற்றை  எப்படி
உணர்ந்து கொள்ள
முடியுமோ
அப்படியே கடவுளை
உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால்
கடவுளுடைய
அருஉருவ நிலை எது
என்பதை நாம் முதலில்
அறிய வேண்டியது
அவசியமாகும்

இறைவனின் அருஉருவ
நிலையை கண்டறிவது
எப்படி………………………………………..?

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 20-06-2019
//////////////////////////////////////////////////////////////