பரம்பொருள்-பதிவு-122
அரவான் :
"யோசித்தால்
நல்ல
முடிவை
எடுக்கலாம்
அல்லவா?"
கிருஷ்ணன் :
"யோசித்தால்
நம்மால்
முடிவைத் தான்
எடுக்க முடியும்
"
"அது நல்ல
முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை நம்மால்
எப்படி தீர்மானம்
செய்ய முடியும்
"
"ஒருவருக்கு
நல்ல
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு
- கெட்ட
முடிவாகத் தெரியும்
"
"ஒருவருக்கு
கெட்ட
முடிவாகத் தெரிவது
மற்றொருவருக்கு
- நல்ல
முடிவாகத் தெரியும்
"
"யோசித்து
முடிவு எடுக்கும்
உரிமை மட்டுமே
நம்மிடம் இருக்கிறது
அது நல்ல முடிவா
அல்லது
கெட்ட முடிவா
என்பதை தீர்மானிக்கும்
உரிமை நம்மிடம்
இல்லை - அது
இந்த சமுதாயத்திற்கு
மட்டுமே இருக்கிறது
"
அரவான் :
"அப்படி
என்றால்
யோசிக்க வேண்டாம்
என்கிறீர்களா
?"
கிருஷ்ணன் :
"துரியோதனனுக்காக
களப்பலி ஆகாதே
;;
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு
என்று நான்
கேட்டிருந்தால்
நீ யோசித்திருக்கலாம்
"
"நான்
அவ்வாறு
கேட்கவேயில்லையே
"
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
துரியோதனன்
உன்னை
களப்பலியாக
கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறாயா
என்று தானே
கேட்டேன் "
"நான்
கேட்டதில்
ஏதேனும் தவறு
இருக்கிறதா
யோசிக்க
வேண்டும் என்கிறாய்
"
அரவான் :
"பரந்தாமா
!
நீங்கள் கேட்டதில்
எந்தவிதமான
தவறும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை
"
"நீங்கள்
சொல்வது
அனைத்தும்
சரியானதாகவே
எனக்குப் படுகிறது
"
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் - நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாவதன்
மூலம் நான்
பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களுக்கு
செய்து
கொடுத்த வாக்கை
மீறியவன் ஆக
மாட்டேன் "
"வாக்குத்
தவறியவன்
ஆக மாட்டேன்
"
"நான்
சம்மதிக்கிறேன் "
"நான்
களப்பலியாவதற்கு
சம்மதிக்கிறேன்
"
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் என்னை
களப்பலியாகக்
கேட்டு
வந்தால் அவருக்காக
களப்பலியாகிறேன்
;
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்கள்
என்னை களப்பலியாகக்
கேட்டு வரவில்லை
என்றால் நான்
பாண்டவர்களுக்காக
களப்பலியாக
சம்மதிக்கிறேன்
;"
கிருஷ்ணன் :
"அரவான்
! - நீ
களப்பலியாக
சம்மதித்ததை
ஏற்றுக் கொள்கிறேன்
;
ஆனால்,
உன்னுடைய சம்மதத்தை
மட்டுமே வைத்துக்
கொண்டு உன்னை
நான்
களப்பலி கொடுப்பதற்கான
முடிவை எடுக்க
முடியாது "
"உன்னுடைய
தாய்
தந்தை மற்றும்
உன்னுடன்
இரத்த சம்பந்தம்
கொண்டவர்கள்
அனைவரிடமும்
அனுமதி பெற்ற
பிறகே வருகின்ற
அமாவாசை தினத்தன்று
துரியோதனன்
உன்னை
களப்பலியாகக்
கேட்டு
வரவில்லை என்றால்
பாண்டவர்களுக்காக
உன்னை களப்பலி
கொடுப்பதற்கான
முடிவை எடுப்பேன்
"
"அவர்களுடைய
சம்மதம்
பெறாமல் உன்னை
நான் களப்பலி
கொடுக்க மாட்டேன்
"
அரவான் :
"ஏன் அனைவரிடமும்
ஒப்புதல் பெற
வேண்டும் ;
என்னுடைய அனுமதி
மட்டும் இருந்தால்
போதாதா………………………………..?
"
-----------
இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
------------
02-02-2020
//////////////////////////////////////////