August 08, 2022

ஜபம்-பதிவு-838 (சாவேயில்லாத சிகண்டி-172)

 ஜபம்-பதிவு-838

(சாவேயில்லாத

சிகண்டி-172)

 

என்னை

உணர்ந்தவர்கள்

என்னை

வணங்குவார்கள்

 

என்னைத்

தெரிந்தவர்கள்

என்னைப்

பின்பற்றுவார்கள்

 

என்னைப்

புரிந்தவர்கள்

என்னுடன்

இருப்பார்கள்

 

என்று

சொல்லிக் கொண்டே

கிருஷ்ணன்

தன்னுடைய

மானிட

உருவிற்கு வந்தார்

துரியோதனனைப்

பார்த்து சிரித்தார்

பின்பு பேசினார்

 

துரியோதனா

போர் என்பது

தவிர்க்க முடியாத

ஒன்றாகி விட்டது

போர்

நடந்தே ஆக

வேண்டும்

என்ற

சூழ்நிலையை

உருவாக்கி

விட்டாய்

 

சமாதானத்தின்

அனைத்து

கதவுகளும்

அடைக்கப்பட்டு

விட்டது

 

எது

நடக்கக் கூடாது

என்று

நினைத்தேனோ

அது

நடக்கக் கூடிய

நிலைக்கு

வந்து விட்டது

 

நல்லது நடக்கும்

என்று

எதிர்பார்த்தேன்

கெட்டது

நடப்பதற்கான

செயல்கள்

நடந்து விட்டது

 

விதியை

யாராலும்

மாற்ற முடியாது

விதியை

வென்றவர்

இந்த

அவனியில்

யார் உள்ளனர்

 

விதி வழிச்

சென்றவர்

வகுத்த வழி

வல்லமை

உடையது

மதி வழி

சென்றவர்

வகுத்த வழி

மயக்கத்தில்

தான் வீழ்வது

 

அமைதியைக்

கொண்டு

வருவதற்கும்

தர்மத்தை நிலை

நாட்டுவதற்கும்

இப்போதைய

நிலையில்

போர்

ஒன்றே வழி

 

போரைத் தவிர்க்க

நினைத்தேன்

ஆனால்

தவிர்க்க

முடியாத

ஒன்றாகி

விட்டது போர்

 

அடுத்து

நம்முடைய

சந்திப்பு

போர்க்களத்தில்

தான்

இருக்கும்

 

போர்க்களத்தில்

சந்திப்போம்

 

துரியோதனன் :

நானும்

அதற்காகத்

தான்

காத்திருக்கிறேன்

அந்த

அடிமைகளின்

அழிவைக் காண

வேண்டும்

என்பதற்காக

 

கிருஷ்ணன் :

யார்

அழிவார்கள்

என்பதை

இப்போதே

எப்படி

சொல்ல முடியும்

 

துரியோதனன் :

நீ தான்

பார்க்கப்

போகிறாயே

.

கிருஷ்ணன் :

நான் பார்ப்பேன்

நீ பார்ப்பாயா

 

(என்று

சொல்லி விட்டு

கிருஷ்ணன்

அந்த

அவையை விட்டு

வெளியே சென்று

விட்டார்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-837 (சாவேயில்லாத சிகண்டி-171)

 ஜபம்-பதிவு-837

(சாவேயில்லாத

சிகண்டி-171)

 

யார் அங்கே

அந்த மாடு

மேய்க்கும் இடையனை

சங்கிலியால்

பிணையுங்கள்

கைது செய்யுங்கள்

 

காவலர்கள்

வருகிறார்கள்

காவலர்கள்

கிருஷ்ணனை

கைது செய்ய

வரும் போது

 

கிருஷ்ணன் நின்ற

இடத்திலேயே

விஸ்வரூபம்

எடுத்தான்

 

ஆகாயத்துக்கும்

பூமிக்குமாய்

நிமிர்ந்து நின்றான்

 

அந்தக் காட்சியைப்

பார்த்த அனைவரும்

அவரைக்

கடவுளாக நினைத்து

வணங்கினர்

 

துரியோதனன் :

யாரும்

ஆச்சரியப்பட வேண்டாம்

இதில்

ஆச்சரியப்படுவதற்கு

ஒன்றும் இல்லை

 

இது

அதிசயப்படவேண்டிய

விஷயமே கிடையாது

 

இது ஒரு

சாதாரண விஷயம்

அவன் மாயஜால

வித்தை

காட்டுகிறான்

அந்த வித்தையை

என்னாலும் செய்து

காட்டமுடியும்

 

கிருஷ்ணன்

கடவுள் இல்லை

அவனை கடவுளாக

நினைத்து

வணங்க வேண்டாம்

 

பீஷ்மர் :

துரியோதனா

கிருஷ்ணரை

கைதியாக்கும்

செயலைச் செய்யாதே

 

கிருஷ்ணர் கடவுள்

அவரைக் கைது

செய்து பாவத்தைத்

தேடிக் கொள்ளாதே

 

முதலில்

அவரை விடுவி

 

துரியோதனன் :

கிருஷ்ணனை யாரும்

கடவுளாக நினைக்க

வேண்டாம்

 

உண்மையை

உணர்ந்தவர்கள்

கடவுள் நிலைக்கு

உயர்ந்தவர்கள்

ஆகியோரைத் தான்
கடவுளாக

நினைக்க வேண்டும்

கடவுளாக

வணங்க வேண்டும்

 

உண்மை என்றால்

என்ன என்று

தெரியாதவன்

கிருஷ்ணன்

 

கடவுள் நிலைக்கு

உயராதவன்

கிருஷ்ணன்

 

தான் ஒரு

கடவுள்

என்று உலகை

ஏமாற்றிக் கொண்டு

இருப்பவன்

கிருஷ்ணன்

 

மாயஜால

வித்தைக்காரன்

கிருஷ்ணன்

 

கபடவேடதாரி

கிருஷ்ணன்

 

தனக்கென்று

ஒரு நியாயம்

வைத்திருப்பான்

அதைத் தான்

சரி என்பான்

அதைத் தான்

அனைவரும்

ஏற்றுக் கொள்ள

வேண்டும் என்பான்

அதைத் தான்

பின்பற்ற வேண்டும்

என்பான்

அதைப்

பின்பற்றுபவர்களை

நல்லவன் என்பான்

பின்பற்றாதவர்களை

கெட்டவன் என்பான்

 

தனக்கேற்றபடி

தர்மத்தையும்

நீதியையும்

நியாயத்தையும்

வளைத்துக்

கொள்வான்

 

தவறு என்று

தெரிந்தும் அதை

துணிந்து செய்து

நியாயப்படுத்தும்

வஞ்சக நெஞ்சம்

கொண்ட

கிருஷ்ணனை

வணங்க வேண்டாம்

 

கிருஷ்ணன் :

துரியோதனா

நான் யாரையும்

வணங்கச் சொல்லி

கட்டடாயப்படுத்தவில்லை

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-836 (சாவேயில்லாத சிகண்டி-170)

 ஜபம்-பதிவு-836

(சாவேயில்லாத

சிகண்டி-170)

 

துரியோதனன் :

கிருஷ்ணா

நீ எவ்வளவு தான்

வார்த்தைகளால்

ஜாலங்கள்புரிந்தாலும்

 

என்னுடைய முடிவு

ஒன்று தான்

 

குந்தி இந்த அவைக்கு

வரவேண்டும்

சத்தியம் உரைக்க

வேண்டும்

 

கிருஷ்ணன் :

ஆசை உன்

கண்களை மறைக்கிறது

அதனால் தான்

எது சரி

எது தவறு என்று

உனக்குத் தெரியவில்லை

 

போர் ஏற்பட்டால்

பாண்டவர்கள்

உன்னை அழிப்பார்கள்

என்பதை

நினைவில் கொள்

 

நீ அழிக்கப்படுவாய்

என்பதை

உணர்ந்து கொள்

 

பீஷ்மர் :

துரியோதனா

கிருஷ்ணர்

சொல்வதைக் கேள்

 

பாண்டவர்களுக்குரிய

பங்கைத்

திருப்பிக் கொடு

 

அது தான்

உனக்கும் நல்லது

அஸ்தினாபுரத்திற்கும்

நல்லது

 

துரியோதனன் :

தாத்தா

என்னுடைய முடிவில்

எந்த மாற்றமும் இல்லை

 

என்னுடைய முடிவை

நான் மாற்றிக்

கொள்ளப்போவதும்

இல்லை

 

மாற்றிக் கொள்ளும்

எண்ணமும்

எனக்கு இல்லை

 

என்னுடைய

முடிவில் இருந்து

நான் பின்வாங்க

மாட்டேன்

 

குந்தி அரசவைக்கு

வர வேண்டும்

சத்தியம் உரைக்க வேண்டும்

 

என்னுடைய முடிவு

இது தான்

 

இது தான் என்னுடைய

இறுதி முடிவு

 

கிருஷ்ணன் :

துரியோதனா

இப்போது நீ

திருந்தா விட்டால்

எப்போதுமே

உன்னால்

திருந்த முடியாது

 

நீ திருந்துவதற்கு

ஒரு வாய்ப்பு

கிடைத்திருக்கிறது

அதைப்

பயன்படுத்திக் கொள்

 

கடந்து சென்ற

காலத்தை

மீண்டும் கொண்டு

வர முடியாது

 

காலம் சொல்கிறபடி

தான் நாம்

கேட்க வேண்டுமே தவிர

நாம் சொல்கிறபடி

காலம் கேட்காது

 

காலம் என்ன

சொல்ல வருகிறது

என்பதை அறிந்து

கொள்ள முயற்சி செய்

 

காலம் நாம்

திருந்துவதற்கு

வாய்ப்பு கொடுக்கும்

அந்த வாய்ப்பை நாம்

பயன்படுத்திக்

கொள்ளவில்லை என்றால்

காலத்தால்

அழிந்து போவோம்

 

இறந்து பிணமாகிக்

கிடக்கும்

கௌரவர்கள் 100 பேர்

உடல்கள்மீதும்

உன் தாய் காந்தாரி

அழுவதை இந்த

உலகம் பார்க்க

வேண்டுமா

 

கண்ணில்லாத உன்

தந்தையின்

கண்களிலிருந்து

சிந்தும் கண்ணீர்

உன் பிணத்தின்

மீது விழ வேண்டுமா

 

இவைகள் அனைத்தும்

நடக்க வேண்டும்

என்று நீ விரும்புகிறாயா

 

துரியோதனன் :

கிருஷ்ணா

நீ தூதுவனாக மட்டும்

வந்திருக்காவிட்டால்

இங்கேயே

உன்னுடைய நாக்கை

அறுத்து எரிந்திருப்பேன்

 

ஆணவத்தின் உச்சத்தில்

நின்று கொண்டு

அகங்காரத்துடன் பேசிக்

கொண்டிருக்கும்

உன்னை நான்

சும்மாவிடப்

போவதில்லை

 

உன்னை சங்கிலியால்

பிணைக்கப் போகிறேன்

கைது செய்யப்

போகிறேன்

கைதியாக்கப்

போகிறேன்

சிறையில்

அடைக்கப் போகிறேன்

 

என்று

சொல்லிக் கொண்டே

துரியாதனன் காவலர்களை

அழைத்தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////