August 08, 2022

ஜபம்-பதிவு-828 (சாவேயில்லாத சிகண்டி-162)

 ஜபம்-பதிவு-828

(சாவேயில்லாத

சிகண்டி-162)

 

கிருஷ்ணன் :

துரியோதனா

நீ பெண்களை

மதிக்கத்

தெரியாதவன்

அதனால் தான்

பெண்களை

இழிவு

படுத்தும்

விதத்தில்

பேசிக்

கொண்டிருக்கிறாய்

 

திரௌபதியை

அஸ்தினாபுரத்தின்

அவையில்

அவமானப்படுத்தும்

செயல்களைச்

செய்ததில் இருந்தே

தெரியவில்லையா

நீ பெண்களை

மதிக்காதவன்

என்று

 

துரியோதனன் :

இரத்தம் சிந்தி

செய்யப்படுவது

தான் போர்

இரத்தம்

சிந்தாமல்

செய்யப்படும்

போருக்குப்

பெயர் தான்

பகடை ஆட்டம்

 

போரில் வெற்றி

பெற்றவனுக்கு

தோற்ற நாடு

எப்படி சொந்தமோ

அதைப் போலவே

பகடை ஆட்டத்தில்

வெற்றி பெற்றவனுக்கு

தோற்றவன் எவற்றை

எல்லாம் பந்தயம்

வைத்து ஆடினானோ

அத்தனையும் சொந்தம்

 

பகடை ஆட்டத்தில்

வெற்றி பெற்றது

பொருளாக இருந்தால்

வெற்றி பெற்றவன்

தேவை என்றால்

பயன்படுத்திக்

கொள்ளலாம்

தேவையில்லை

என்றால்

அழித்து விடலாம்

அதைப்போலவே

படை ஆட்டத்தில்

வெற்றி பெற்றது

மனிதர்களாக

இருந்தால்

வெற்றி பெற்றவன்

தேவை என்றால்

அவர்களை

அடிமைகளாக

வைத்துக் கொள்ளலாம்

தேவையில்லை

என்றால்

அவர்களைக்

கொன்று விடலாம்

 

அதனால்

தான் நான்

குந்தியின்

புதல்வர்களும்

மாத்ரியின்

புதல்வர்களும்

என்னுடைய

அடிமைகள்

என்பதை அவர்கள்

உணர வேண்டும்

என்பதற்காகவும்

அவர்கள்

என்னுடைய

அடிமைகள்

என்பதை இந்த

உலகத்திற்கு

உணர்த்த

வேண்டும்

என்பதற்காகவும்

ஒரு அடிமையை

எப்படி நடத்த

வேண்டுமோ

அப்படித் தான்

அவர்களை

நடத்தினேன்

 

இந்த உலகம்

அவர்களை நான்

அவமானப்

படுத்தியதாக

எடுத்துக் கொண்டது

அசிங்கப் படுத்தியதாக

எடுத்துக் கொண்டது

இழிவு படுத்தியதாக

எடுத்துக் கொண்டது

 

என் மீது எந்தத்

தவறும் கிடையாது

ஒரு எஜமான்

ஒரு அடிமையை

எப்படி நடத்த

வேண்டுமோ

அப்படித் தான்

அவர்களை

நடத்தினேன்

 

இதே முறையைத்

தான் திரௌபதி

விஷயத்திலும்

கையாண்டேன்

திரௌபதி

என்னுடைய

அடிமை என்பதை

அவள் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காகவும்

திரௌபதி

என்னுடைய

அடிமை என்பதை

இந்த உலகத்திற்கு

தெரியப்படுத்த

வேண்டும்

என்பதற்காகவும்

அவளை அழைத்து

வரச்சொல்லி

தேரோட்டியை

அனுப்பினேன்

 

தான் ஒரு பேரரசி

என்ற ஆணவத்தில்

அலைந்து

கொண்டிருந்த

திரௌபதி

தான் ஒரு

அடிமை

என்பதை மறந்து

எஜமானனான

என்னுடைய

வார்த்தைக்கு

கட்டுப்படாமல்

ஆணவத்தில்

பேசினாள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

 

 

 

 

No comments:

Post a Comment