August 08, 2022

ஜபம்-பதிவு-832 (சாவேயில்லாத சிகண்டி-166)

 ஜபம்-பதிவு-832

(சாவேயில்லாத

சிகண்டி-166)

 

ஆசைகள்

அனைத்தையும்

வைத்துக் கொண்டு

சுயநலமாக வாழ்ந்து

கொண்டிருக்கும் நீ

உத்தமனா அல்லது

தன்னுடைய

சுகத்தை துறந்து

எங்களுக்காகவே

வாழ்ந்து

கொண்டிருக்கும்

என்னடைய மாமா

சகுனி உத்தமரா

 

என்னுடைய

மாமா

சகுனி பெயரைச்

சொல்வதற்கு

உனக்குத்

தகுதியில்லை

 

தாய் மாமன்

இருந்தால்

இந்தத்

தரணியையே

ஆளலாம்

என்பதற்கு

என்னுடைய

தாய் மாமன்

சகுனி

அவர்களே

உதாரணம்

 

கிருஷ்ணன் :

தரணியை

ஆள்வது பற்றி

பிறகு பேசிக்

கொள்ளலாம்

 

முதலில்

பாண்டவர்களுக்குரிய

இந்திரப்

பிரஸ்தத்தைத்

திருப்பிக் கொடு

 

துரியோதனன் :

நான் தான்

ஏற்கனவே

சொல்லி

விட்டேனே

 

குந்தி இந்த

அவைக்கு

வர வேண்டும்

சத்தியம்

உரைக்க

வேண்டும்

 

கிருஷ்ணன் :

ஐந்து

கிராமங்களையாவது

கொடு

 

துரியோதனன் :

குந்தி இந்த

அவைக்கு

வர வேண்டும்

சத்தியம்

உரைக்க

வேண்டும்

 

விதுரர் :

துரியோதனா

கிருஷ்ணன்

சொல்வதைக்

கேள்

வீணாக

அழிந்து

போகாதே

 

பாண்டவர்களை

உன்னால்

எதிர்க்க

முடியாது

 

எதிர்த்தால்

அழிந்து

விடுவாய்

 

 

கிருஷ்ணன் :

துரியோதனா

 

விதுரர்

சொல்வதைக் கேட்டு

உன் உயிரைக்

காப்பாற்றிக் கொள்

 

விதுரர் உன்னுடைய

நல்லதுக்குத் தான்

சொல்கிறார்

 

துரியோதனன் :

எங்கள் வீட்டு

சாப்பாட்டை

சாப்பிட்டு விட்டு

எங்களுக்கே

துரோகம் செய்து

கொண்டிருப்பவர் தான்

என்னுடைய சித்தப்பா

 

குந்தியின்

புதல்வர்களுக்காவும்

மாத்ரியின்

புதல்வர்களுக்காகவும்

ஆதரவாகவே பேசிக்

கொண்டிருப்பவர்

 

அவர் பிறப்பு அப்படி

 

தாசி

வயிற்றில் பிறந்தவர்

அதனால்

தான் அவர்

அப்படி

செயல்படுகிறார்

 

அரச குலத்தில்

பிறந்திருந்தால்

அவர் இப்படி

செய்திருக்க மாட்டார்

தாசி வயிற்றில்

பிறந்தவர்

அதனால் தான் இப்படி

எங்களுக்கு எதிராக

செயல்படுகிறார்

 

விதுரர் :

துரியோதனா

என் தாயை

இழிவு படுத்திய

உன்னை நான்

சும்மாவிடப்

போவதில்லை

 

எந்த ஆயுதம்

வேண்டுமோ

அந்த ஆயுதத்தை

எடுத்துக் கொள்

என்னுடன் சண்டையிடு

 

ஒன்று

நான் உயிரோடு

இருக்க வேண்டும்

இல்லை

நீ உயிரோடு

இருக்க வேண்டும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////



No comments:

Post a Comment