ஜபம்-பதிவு-826
(சாவேயில்லாத
சிகண்டி-160)
துரியோதனன் :
என்ன செய்ய
வேண்டும் என்று
சொல்கிறீர்கள்
தந்தையே
திருதராஷ்டிரன் :
பாண்டவர்கள்
12 வருடம்
வனவாசம்,
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
முடித்து
விட்டார்கள்
என்பதை
ஒத்துக் கொள்
பெரியோர்களை
அவமதிக்காதே
துரியோதனன் :
நியாயம் தவறி
நடப்பவர்களை
நியாயத்தின் படி
நடங்கள் என்று
சொல்வது தவறா
நியாயம் என்றால்
என்ன என்று
தெரியாதவர்களிடம்
நியாயத்தின் படி
நடக்காதவர்களிடம்
நியாயத்தைப்
பற்றி
மற்றவர்களிடம்
அறிவுரை
சொல்பவர்களிடம்
நியாயவாதிகளாக
தங்களை காட்டிக்
கொள்பவர்களிடம்
நியாயவாதிகளாக
நடிப்பவர்களிடம்
நியாயத்தை
எதிர்பார்க்க
முடியாதது
தான்
இப்போது
நான் என்ன
செய்ய
வேண்டும்
கிருபர் :
பாண்டவர்கள்
12 வருடம்
வனவாசம்,
1 வருடம்
அஞ்ஞாத
வாசம்
முடித்து
விட்டார்கள்
அவர்கள்
கேட்கும்
பங்கை
திருப்பிக்
கொடு
இந்திரப்பிரஸ்தத்தைத்
திருப்பிக் கொடு
கிருஷ்ணன் :
ஆமாம்
கிருபர்
சொன்னது
சரிதான்
பாண்டவர்களுக்குரிய
பங்கான
இந்திரப்பிரஸ்தத்தைத்
திருப்பிக் கொடு
துரியோதனன் :
இந்திரப்பிரஸ்தம்
என்ன
அஸ்தினாபுரத்தையே
தருகிறேன்
ஆனால் குந்தி
ஒன்று செய்ய
வேண்டும்
கிருஷ்ணன் :
என்ன செய்ய
வேண்டும்
துரியோதனன் :
சத்தியம்
உரைக்க
வேண்டும்
கிருஷ்ணன் :
என்ன சத்தியம்
உரைக்க
வேண்டும்
துரியோதனன் :
என்னுடைய
சித்தப்பா
பாண்டு
பெண்ணுடன்
உடலுறவு
கொண்டால்
இறந்து விடுவார்
என்ற
காரணத்தினால்
குந்தி
பாண்டுவுடன்
உடலுறவு
கொள்ளாமல்
எமதர்மனுடன்
உடலுறவு
கொண்டு
யுதிஷ்டிரனையும்,
வாயு பகவானுடன்
உடலுறவு
கொண்டு
பீமனையும்,
இந்திரனுடன்
உடலுறவு
கொண்டு
அர்ஜுனனையும்
மகனாகப்
பெற்றார்.
மாத்ரியும்
பாண்டுவுடன்
உடலுறவு
கொள்ளாமல்
அஸ்வினி
இரட்டையர்களுடன்
உடலுறவு கொண்டு
நகுலனையும்,
சகாதேவனையும்
மகனாகப்
பெற்றார்.
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment