ஜபம்-பதிவு-824
(சாவேயில்லாத
சிகண்டி-158)
இந்த உலகத்தில்
எவ்வளவோ
பெரிய சூதாடிகள்
எல்லாம்
இருந்திருக்கிறார்கள்
ஆனால்
யுதிஷ்டிரன் போல்
சூதாட்டத்தில்
மனைவியை
பந்தயமாக
வைத்து
ஆடியதில்லை
அறிவுள்ளவன்
செய்யும்
செயலா இது
எந்த அறிவு
கெட்டவனும்
இத்தகைய
ஒரு செயலை
செய்யவே
மாட்டான்
சூதாட்டத்தில்
இழந்த
சொத்துக்களை
யாருமே திரும்பக்
கேட்க மாட்டார்கள்
என்ற வழக்கம்
இந்த உலகத்தில்
இருக்கிறது
என்பதும்
சூதாட்டத்தில்
இழந்த சொத்துக்களை
திருப்பிக் கொடுக்க
வேண்டிய
அவசியமும்
இல்லை என்பதும்
உனக்குத் தெரியாதா
அல்லது
தெரியாதது போல்
நடிக்கிறாயா
கிருஷ்ணன் :
அதனால் தான்
பாண்டவர்கள்
12 வருடம்
வனவாசம்
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
முடித்து
இருக்கிறார்கள்
துரியோதனன் :
முடிக்கவில்லை
அஞ்ஞாத வாசம்
ஒரு வருடம்
முடிவதற்கு
முன்பாகவே
அவர்கள் வீராட
நாட்டில் மாட்டிக்
கொண்டார்கள்
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
முடிவடைவதற்கு
முன்பாகவே
வீராட நாட்டில்
தன்னை
வெளிப்படுத்திக்
கொண்டான்
அர்ச்சுனன்
கையும்
களவுமாக
மாட்டிக்
கொண்டான்
அர்ச்சுனன்
அந்த
அடிமைகள்
மீண்டும்
12 வருடம்
வனவாசம்
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
மீண்டும்
மேற்கொள்ள
வேண்டும்
அதற்காக அந்த
அடிமைகளை
மீண்டும் காட்டிற்கு
அனுப்பி வையுங்கள்
பீஷ்மர் :
துரியோதனா
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
முடிந்த
பிறகு தான்
வீராட நாட்டில்
அர்ச்சுனன்
வெளிப்பட்டான்
துரியோதனன் :
ஆனால்
காலக்கணக்கு
அவ்வாறு
சொல்லவில்லையே
துரோணர் :
காலக்கணக்கில்
சூரிய கணக்கு
சந்திர கணக்கு
என இரண்டு
பிரிவுகள்
இருக்கிறது
ஒரு கணக்கை
மட்டும் கணக்கில்
வைத்துக் கொண்டு
நாம் எந்த ஒரு
முடிவுக்கும்
வரக்கூடாது
இரண்டு
கணக்குகளையும்
ஒப்பிட்டு பார்த்துத்
தான் முடிவுக்கு
வர வேண்டும்
அப்படி
ஆராய்ந்து
பார்த்ததில்
பாண்டவர்கள்
ஒரு வருடம்
அஞ்ஞாத
வாசத்தை
சரியாக
முடித்து
விட்டார்கள்
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
முடிந்து விட்டது
என்று தெரிந்த
பிறகு தான்
அர்ச்சுனன்
தன்னை வீராட
நாட்டில்
வெளிப்படுத்தினான்
காலக்
கணக்கின்படி
ஒரு வருடம்
அஞ்ஞாத வாசம்
முடிவடைந்த
பின்னரே
வீராட
நாட்டிலிருந்து
அர்ச்சுனன்
வெளிப்பட்டான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment