ஜபம்-பதிவு-836
(சாவேயில்லாத
சிகண்டி-170)
துரியோதனன் :
கிருஷ்ணா
நீ எவ்வளவு தான்
வார்த்தைகளால்
ஜாலங்கள்புரிந்தாலும்
என்னுடைய முடிவு
ஒன்று தான்
குந்தி இந்த அவைக்கு
வரவேண்டும்
சத்தியம் உரைக்க
வேண்டும்
கிருஷ்ணன் :
ஆசை உன்
கண்களை மறைக்கிறது
அதனால் தான்
எது சரி
எது தவறு என்று
உனக்குத் தெரியவில்லை
போர் ஏற்பட்டால்
பாண்டவர்கள்
உன்னை அழிப்பார்கள்
என்பதை
நினைவில் கொள்
நீ அழிக்கப்படுவாய்
என்பதை
உணர்ந்து கொள்
பீஷ்மர் :
துரியோதனா
கிருஷ்ணர்
சொல்வதைக் கேள்
பாண்டவர்களுக்குரிய
பங்கைத்
திருப்பிக் கொடு
அது தான்
உனக்கும் நல்லது
அஸ்தினாபுரத்திற்கும்
நல்லது
துரியோதனன் :
தாத்தா
என்னுடைய முடிவில்
எந்த மாற்றமும் இல்லை
என்னுடைய முடிவை
நான் மாற்றிக்
கொள்ளப்போவதும்
இல்லை
மாற்றிக் கொள்ளும்
எண்ணமும்
எனக்கு இல்லை
என்னுடைய
முடிவில் இருந்து
நான் பின்வாங்க
மாட்டேன்
குந்தி அரசவைக்கு
வர வேண்டும்
சத்தியம் உரைக்க வேண்டும்
என்னுடைய முடிவு
இது தான்
இது தான் என்னுடைய
இறுதி முடிவு
கிருஷ்ணன் :
துரியோதனா
இப்போது நீ
திருந்தா விட்டால்
எப்போதுமே
உன்னால்
திருந்த முடியாது
நீ திருந்துவதற்கு
ஒரு வாய்ப்பு
கிடைத்திருக்கிறது
அதைப்
பயன்படுத்திக் கொள்
கடந்து சென்ற
காலத்தை
மீண்டும் கொண்டு
வர முடியாது
காலம் சொல்கிறபடி
தான் நாம்
கேட்க வேண்டுமே தவிர
நாம் சொல்கிறபடி
காலம் கேட்காது
காலம் என்ன
சொல்ல வருகிறது
என்பதை அறிந்து
கொள்ள முயற்சி செய்
காலம் நாம்
திருந்துவதற்கு
வாய்ப்பு கொடுக்கும்
அந்த வாய்ப்பை நாம்
பயன்படுத்திக்
கொள்ளவில்லை என்றால்
காலத்தால்
அழிந்து போவோம்
இறந்து பிணமாகிக்
கிடக்கும்
கௌரவர்கள் 100 பேர்
உடல்கள்மீதும்
உன் தாய் காந்தாரி
அழுவதை இந்த
உலகம் பார்க்க
வேண்டுமா
கண்ணில்லாத உன்
தந்தையின்
கண்களிலிருந்து
சிந்தும் கண்ணீர்
உன் பிணத்தின்
மீது விழ வேண்டுமா
இவைகள் அனைத்தும்
நடக்க வேண்டும்
என்று நீ விரும்புகிறாயா
துரியோதனன் :
கிருஷ்ணா
நீ தூதுவனாக மட்டும்
வந்திருக்காவிட்டால்
இங்கேயே
உன்னுடைய நாக்கை
அறுத்து எரிந்திருப்பேன்
ஆணவத்தின் உச்சத்தில்
நின்று கொண்டு
அகங்காரத்துடன் பேசிக்
கொண்டிருக்கும்
உன்னை நான்
சும்மாவிடப்
போவதில்லை
உன்னை சங்கிலியால்
பிணைக்கப் போகிறேன்
கைது செய்யப்
போகிறேன்
கைதியாக்கப்
போகிறேன்
சிறையில்
அடைக்கப் போகிறேன்
என்று
சொல்லிக் கொண்டே
துரியாதனன் காவலர்களை
அழைத்தான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment