திருக்குறள்-பதிவு-91
ஜியார்டானோ
புருனோ :
" யாருக்காக இடையில்
மறித்து கேள்விகளைக்
கேட்டீர்கள்……………………..?
யாரைக் காப்பாற்றுவதற்காக
கேள்விகளைக்
கேட்டீர்கள்……………………..?
நீங்கள் கேட்ட கேள்விகள்
சரியானவைகள் தானா
என்று யோசித்துப்
பார்த்தீர்களா……………………..?
இந்த விசாரணைக்கு
தொடர்புடையதா
என்று தெரிந்து
தான் கேட்டீர்களா……………………..? "
(ஜியார்டானோ புருனோ
இவ்வாறு கேட்டவுடன்
விசாரணைக்குழு அதிகாரி
கார்டினல்கள் இருக்கும்
இந்த அவையில் தான்
ஏதேனும் தவறாக கேட்டு
விட்டேனா ? என்று
நினைத்து பார்த்ததில்
அவருக்கு பயம் வந்து
மயக்கமே வந்து விடுவது
போல் இருந்தது.)
இந்த சமயத்தில்
கார்டினல் சார்டோரி
எழுந்து கேள்விகள்
கேட்கலானார்)
கார்டினல்
சார்டோரி :
" Father Bruno……..!
விசாரணைக்குத்
தேவையானவை எவை
என்பதைத் தெரிந்து
கொண்டு தான்
அவர் கேள்விகளைக்
கேட்கிறார்.
பிரான்ஸ் (France)
நாட்டு நவேரா (Navarre)
மன்னர் மீது நீங்கள்
கொண்டுள்ள
பற்றின் காரணமாக
அவருக்காக பல
சதி வேலைகளைச்
செய்துள்ளீர்கள் "
ஜியார்டானோ
புருனோ :
" நான் நவேரா நாட்டு
மன்னரை ஒரு போதும்
சந்தித்தது இல்லை "
கார்டினல்
சார்டோரி :
" மறைந்த மன்னர்
ஹென்றி-3 (Henry-III)
அவர்களுடைய நம்பிக்கைக்கு
பாத்திரமானவராக
இருந்து இருக்கிறீர்கள் "
ஜியார்டானோ
புருனோ :
" போப் அவர்களை
நேரில் சந்தித்து
ஒரு தனிமையான
நேர்காணலில் மட்டுமே
இந்த கேள்விக்கு என்னால்
பதிலளிக்க முடியும்"
கார்டினல்
சார்டோரி :
" ரோம் நாட்டுக்கு எதிராகவும்
போப்புக்கு எதிராகவும்
புதிய அணியை
உருவாக்கி அவர்களை
எதிர்ப்பதற்காக
பிரான்ஸ் நாட்டு ஹென்றி
உங்களை இங்கிலாந்துக்கு
அனுப்பி வைத்து
இருக்கிறார்"
ஜியார்டானோ
புருனோ :
" நான் இங்கிலாந்திற்கு
படிக்க தான் சென்றேன்
என்னுடைய பெரும்பாலான
நேரங்களை ஆக்ஸ்போர்ட்
பல்கலைக் கழகத்தில் உள்ள
அறிஞர்களுடன்
கலந்துரையாடல்
செய்வதற்காக செலவிட்டேன்”
கார்டினல்
சார்டோரி :
" ஐரோப்பிய மன்னர்களுடன்
தாங்கள் தொடர்பு
வைத்துக் கொணடதற்கான
காரணம் என்ன…………………………? “
ஜியார்டானோ
புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)
கார்டினல்
சார்டோரி :
" ஜியார்னிஸ்ட்டுகள் கொண்ட
ஒரு பிரிவை உண்டாக்கி
உங்களை நீங்களே
தலைவராக நியமித்துக்
கொண்டு இருக்கிறீர்கள்
அதனுடைய
நோக்கம் என்ன"
ஜியார்டானோ
புருனோ :
" அந்த பிரிவிலுள்ள
ஒரே ஒரு நபரையாவது
இந்த நீதிமன்ற அறைக்குள்
கொண்டு வாருங்கள்
நான் ஒத்துக்கொள்கிறேன் "
கார்டினல்
சார்டோரி :
" நீங்கள் ஏன் ஜெர்மனி
சென்றீர்கள்……………………..? "
ஜியார்டானோ
புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)
கார்டினல்
சார்டோரி :
" நீங்கள் ஏன் இங்கிலாந்து
சென்றீர்கள்……………………..? "
ஜியார்டானோ
புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)
கார்டினல்
சார்டோரி :
“ யார் உங்களுடன்
தொடர்பு கொண்டு
இருக்கிறார்கள்……………………..?
யாருடன் நீங்கள்
தொடர்பு கொண்டு
இருக்கிறீர்கள்……………………..?
யாருடைய பேச்சை
கேட்டு நீங்கள் இவ்வாறு
எல்லாம் நடந்து
கொள்கிறீர்கள்……………………..?
உங்களுடைய குறிக்கோள்
தான் என்ன……………………..?
உங்களிடம்
ஒப்படைக்கப்பட்ட
பணி தான் என்ன……………………..?
உங்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள
அரசியல் வேலைகள்
தான் என்ன……………………..? "
ஜியார்டானோ
புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)
விசாரணைக்குழு
ஜியார்டானோ
புருனோவிடம் இருந்து
பதில்களை வாங்க
வேண்டுமானால்
இந்த வழிகள் எதுவும்
பலனளிக்காது
என்பதை உணர்ந்து
கொண்ட காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவை
சிறையில் சித்திரவதை
செய்து கொண்டே
கேள்விகள் கேட்பது என்று
முடிவு எடுத்தது.
ரோம் நகரத்தில்
ஜியார்டானோ
புருனோவிற்கு எதிரான
மூன்றாம் கட்ட விசாரணை
சிறையில் சித்திரவதையுடன்
தொடங்கியது.
--------- இன்னும் வரும்
---------- K.பாலகங்காதரன்
--------- 28-01-2019
/////////////////////////////////////////////////////////////