May 20, 2022

ஜபம்-பதிவு-760 (சாவேயில்லாத சிகண்டி-94)

 ஜபம்-பதிவு-760

(சாவேயில்லாத

சிகண்டி-94)

 

காலம் தரும்

தீர்ப்புக்கு முன்னால்

பீஷ்மன் தன்னுடைய

சாவை தடுக்க

முடியாது

 

காலத்தின்

கணக்கை

யாராலும்

மாற்ற முடியாது

 

பீஷ்மனின்

சாவை காலத்தின்

கணக்கிற்கு

விட்டு விடுவோம்

 

பீஷ்மனின்

அழிவிற்காகக்

காத்திருக்கிறேன்

அவனுடைய

சாவைப்

பார்ப்பதற்காகக்

காத்திருக்கிறேன்

 

பீஷ்மனை

நான் பார்த்துக்

கொள்கிறேன்

 

நீங்கள் மனதில்

சஞ்சலம் கொள்ளாமல்

எடுத்த காரியத்தை

முடித்தேன்

என்ற மன

திருப்தியுடன்

செல்லுங்கள்

 

(என்று

சொல்லி விட்டு

அம்பை பரசுராமரின்

காலில் விழுந்தாள்)

 

அம்பை :

பரசுராமரே

என்னை

ஆசிர்வதியுங்கள்

 

பரசுராமர் :

அம்பையே

எந்த ஒரு

பிரச்சினை வந்தாலும்

அதை எதிர்த்து

நின்று நீ

வெற்றி பெறுவாய்

 

நீ கொண்ட

கொள்கை

வெற்றி பெற

கடவுள் உனக்கு

துணை புரியட்டும்

 

(என்று சொல்லி

விட்டு தவ

வாழ்க்கை

மேற்கொள்வதற்காக

முதல் பாதை

வழியாக

பரசுராமர் காட்டை

நோக்கி செல்லத்

தொடங்கினார்

 

இரண்டாவது

பாதை வழியாக

பீஷ்மரைக்

கொன்றே ஆக

வேண்டும் என்ற

கொள்கையுடன்

அம்பை நடக்கத்

தொடங்கினாள்

 

மூன்றாவது

பாதை வழியாக

பீஷ்மர்

தேரில் ஏறி

அஸ்தினாபுரம்

நோக்கி செல்லத்

தொடங்கினார்.

 

மூன்று

வெவ்வேறு

பாதைகளில்

பயணம் செய்து

கொண்டிருப்பவர்களுடைய

பயணத்தின் முடிவைத்

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

அம்பையைப்

பின்தொடர்ந்து

அம்பையின்

பாதை வழியே

சென்றாலே போதும்

பயணத்தின்

முடிவைத் தெரிந்து

கொள்ளலாம்

 

அம்பையைப்

பின்தொடர்வோம்

பயணத்தின்

முடிவைத் தெரிந்து

கொள்வோம்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-759 (சாவேயில்லாத சிகண்டி-93)

 ஜபம்-பதிவு-759

(சாவேயில்லாத

சிகண்டி-93)

 

பரசுராமர் :

அம்பையே

நான்

தோற்று விட்டேன்

 

உனக்குக் கொடுத்த

வாக்கை என்னால்

காப்பாற்ற

முடியவில்லை

 

அம்பை :

பரசுராமரே

தோற்றது

நீங்கள் கிடையாது

தோற்றது அந்த

பீஷ்மன் தான்

 

தவறு செய்தவன்

உங்கள் சீடன்

பீஷ்மன்

என்று தெரிந்தும்

பீஷ்மனைப் போரில்

கொல்வதற்காக

எப்போது ஆயுதம்

எடுத்தீர்களோ

அப்போதே

நீங்கள் வெற்றி

பெற்று வீட்டீர்கள்

 

பீஷ்மன்

உங்களை வீரத்தால்

வெற்றி பெற

நினைக்கவில்லை

சூழ்ச்சி செய்து

உங்களை

கோழைத் தனமாக

வெற்றி பெற

நினைத்தான்

 

சூழ்ச்சி செய்து

உங்களை வீழ்த்தி

வெற்றி பெற

நினைத்த கோழை

பீஷ்மனுடன்

இனி போரிட

மாட்டேன் என்று

ஆயுதங்களை

கீழே வைத்து விட்டு

போரிலிருந்து

விலகியதால்

நீங்கள் தோற்று

விட்டீர்கள் என்று

எப்படி

சொல்ல முடியும்

 

சூழ்ச்சியால்

உங்களை

வீழ்த்த நினைத்த

அந்த பீஷ்மன்

தான் தோற்றான்

 

வெற்றி

பெறுவதற்காகவே

பிறந்தவர் நீங்கள்

 

உங்களை

வீழ்த்துவதற்கு

இந்த உலகத்தில்

யாரும்

பிறக்கவுமில்லை

இனி பிறக்கப்

போவதும் இல்லை

 

உங்களுக்கு

நிகரானவர்கள்

இந்த உலகத்தில்

யாரும் கிடையாது

 

எனக்குக் கொடுத்த

வாக்கிற்காகக்

கடைசி வரை

போரிட்டீர்கள்

எனக்கு ஏற்பட்ட

அவமானத்தைத்

துடைப்பதற்காகப்

போரிட்டீர்கள்

என்னை வாழ

வைப்பதற்காகப்

போரிட்டீர்கள்

நியாயத்திற்காகப்

போரிட்டீர்கள்

தவறு செய்தவன்

உங்கள் சீடன்

என்று தெரிந்தும்

அவனைக்

கொல்வேன் என்று

உறுதியுடன்

போரிட்டீர்கள்

நீங்கள் செய்த

இந்த

செயல்களே நீங்கள்

அனைவரையும்

விட உயர்ந்தவர்

என்பதைக்

காட்டி விட்டது

 

பீஷ்மனை

உங்களால் கொல்ல

முடியாததற்குக்

காரணம்

உங்கள் கைகளால்

பீஷ்மன் சாகக்கூடாது

என்று காலம்

எழுதி வைத்து

இருக்கலாம்

 

காலம் தன்னுடைய

தீர்ப்பை

வழங்கும் போது

பீஷ்மன் யார்

கைகளில்

சாவான் என்பது

தெரிந்து விடும்

 

இந்த உலகத்தில்

பிறந்தவர்

இறந்தே ஆக

வேண்டும் என்பது

இயற்கை நியதி

இறப்பிலிருந்து

யாரும் தப்பிக்க

முடியாது

எவ்வளவு பெரிய

வரத்தைப்

பெற்றவர்களும்

இறந்திருக்கிறார்கள்

என்பது

அனைவரும்

அறிந்த உண்மை

இதற்கு பீஷ்மன்

ஒன்றும்

விதிவிலக்கல்ல

 

பீஷ்மன் யார்

கைகளில் சாவான்

எப்படி சாவான்

என்பதை

வருங்காலம்

நமக்கு உணர்த்தும்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-758 (சாவேயில்லாத சிகண்டி-92)

 ஜபம்-பதிவு-758

(சாவேயில்லாத

சிகண்டி-92)

 

நீ ஒருவன் தான்

என்னை

சூழ்ச்சி செய்து

வெற்றி பெற

வேண்டும் என்ற

எண்ணத்தில்

போரிட்டிருக்கிறாய்

 

ஒரு கோழையுடன்

போரிட நான்

விரும்பவில்லை

 

நான் ஒத்துக்

கொள்கிறேன்

 

நான் தோற்று

விட்டதை

ஒத்துக் கொள்கிறேன்

 

பரசுராமராகிய நான்

பீஷ்மனிடம்

தோற்றதை

ஒத்துக் கொள்கிறேன்

 

பீஷ்மா

நீ வெற்றி

பெறுவதற்காக

எத்தகைய செயலையும்

செய்வாய் என்பதை

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

எப்போது

என் மீது

செலுத்தினாயோ

அப்போதே நான்

தெரிந்து கொண்டேன்

 

பணம் பதவி

அதிகாரம் புகழ்

ஆகியவற்றுக்கு

அடிமையாக

இருக்கும் நீ

அவைகளை

தக்க வைத்துக்

கொள்வதற்காக

இப்படி ஒரு

கீழ்த்தரமான

செயலைச்

செய்வாய்

என்பதை நான்

எதிர்பார்க்கவில்லை

 

எந்த

குருஷேத்திரத்தில்

என்னை

தூங்க வைத்து

வெற்றி பெற

வேண்டும் என்று

நினைத்தாயோ

அதே

குருஷேத்திரத்தில்

நீ வீழ்த்தப்பட்டு

யாரும் இல்லாத

அனாதையாக

படுத்துக்

கிடக்கப் போகிறாய்

 

ஒரு வீரன் தான்

என்னுடைய சீடனாக

இருக்க முடியும்

ஒரு கோழை

என்னுடைய சீடனாக

இருக்க முடியாது

 

பீஷ்மா

நீ என்னுடைய

சீடனாக

இருப்பதற்கு

தகுதியற்றவன்

 

உயர்ந்த கலைகளை

தகுதியற்ற சீடனுக்கு

கற்றுக் கொடுத்தால்

ஒரு குருவுக்கு

எத்தகைய அவமானம்

ஏற்படும் என்பதை

இந்த பரசுராமரைப்

பார்த்து

இந்த உலகம்

தெரிந்து

கொள்ளட்டும்

 

பணம் பதவி

அதிகாரம் புகழ்

ஆகியவற்றுக்கு

ஆசைப்பட்டு

உயர்ந்த கலைகளைக்

கற்றுக் கொள்ளும்

தகுதியில்லாத சீடன்

எத்தகைய

செயல்களைச்

செய்வான் என்பதை

பீஷ்மா

உன்னைப் பார்த்து

இந்த உலகம்

தெரிந்து கொள்ளட்டும்

 

உயர்ந்த கலைகளை

தகுதியற்ற

சீடனான உனக்கு

கற்றுக் கொடுத்து

உயர்ந்த கலைகள்

களங்கப் படுவதற்கு

நான் காரணமாகி

விட்டேன்

நீக்க முடியாத

பாவத்தைச்

செய்தவனாகி

விட்டேன்

பாவம் என்னைச்

சூழ்ந்துள்ளது

 

பாவத்தை நீக்கும்

மிகப் பெரிய

பொறுப்பு எனக்கு

இருப்பதால்

காட்டிற்கு சென்று

தவம் செய்ய

தீர்மானித்து விட்டேன்

 

இனி நான்

ஆயுதம் எடுத்து

எந்த ஒரு

போரையும் நான்

செய்ய மாட்டேன்

இதுவே எனது

இறுதிப் போர்

 

நான் காட்டிற்கு

செல்கிறேன்

 

(என்று

சொல்லிக் கொண்டே

பரசுராமர்

தன்னுடைய

ஆயுதங்களைக்

கீழே போட்டு விட்டு

தவ வாழ்க்கை

மேற்கொள்வதற்காக

காட்டை நோக்கி

செல்லத்

தொடங்கும் போது

அம்பை அவர்

எதிரே வந்து

நிற்கிறாள்

தன் முன்னால்

வந்து நின்ற

அம்பையைப்

பார்த்து

பரசுராமர் பேசத்

தொடங்குகிறார்)

 

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-757 (சாவேயில்லாத சிகண்டி-91)

 ஜபம்-பதிவு-757

(சாவேயில்லாத

சிகண்டி-91)

 

நீ செய்ய

நினைக்கும்

இந்த செயல்

கடவுளின்

அவதாரமாகக் கருதப்படும்

பரசுராமருக்கு

களங்கத்தை

ஏற்படுத்தும் வகையில்

அமைந்து விடும்

 

பரசுராமருக்கு

களங்கத்தை

ஏற்படுத்தும் எந்த

ஒரு செயலையும்

செய்யாதே

 

பரசுராமர் மேல்

செலுத்திய

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

திரும்ப

அழைத்துக் கொள்

 

திரும்ப

அழைத்துக் கொள்

பீஷ்மா

திரும்ப

அழைத்துக் கொள்

 

(நாரதர் இவ்வாறு

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போது

பீஷ்மர் அங்கே

நின்று கொண்டிருந்த

அந்த எட்டு

பிராமணர்களை

பார்க்கிறார்

அந்த எட்டு

பிராமணர்களும்
ஒன்றாகச் சேர்ந்து

பீஷ்மா

நாரதர்

சொல்படியே செய்வாயாக

அதுவே உனக்கும்

இந்த உலகத்துக்கும்

நன்மையாகும்

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

திரும்ப

அழைத்துக் கொள்

என்று

சொன்னவுடன் பீஷ்மர்

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

திருப்பி

வரவழைக்கும்

மந்திரத்தைச்சொல்லி

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை திரும்ப

அழைக்கிறார்

 

பிரஸ்வாபம் அஸ்திரம்

பீஷ்மரின் வலது

கையில் வந்து

அமர்கிறது

 

மந்திரம் சொல்கிறார்

பிரஸ்வாபம் அஸ்திரம்

கையில் இருந்து

மறைந்து விடுகிறது)

 

போர்க்களத்தில்

தன்னைத் தூங்க

வைத்து வெற்றி

பெற வேண்டும்

என்பதற்காக

பீஷ்மன் தன்

மீது பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

செலுத்தினார்

என்பதைத் தெரிந்து

கொண்ட பரசுராமர்

பீஷ்மரைப் பார்த்து

பேசத் தொடங்கினார்)

 

பரசுராமர் :

பீஷ்மா

போதும் நிறுத்து

 

தனக்கு எதிரியாக

வருபவர் யாராக

இருந்தாலும்

போரில்

அவரைக் கொன்று

வெற்றி பெறுபவன்

தான் வீரன்

 

போரில் என்னைக்

கொல்ல மாட்டேன்

என்று

சொல்லி விட்டு

என்னுடன்

போரிட்டது

இப்படி சூழ்ச்சி

செய்து

என்னை வீழ்த்தி

வெற்றி பெற

வேண்டும் என்ற

காரணத்திற்காகத் தானா

 

என்னைத்

தூங்க வைத்து

வெற்றி பெற

வேண்டும் என்பதற்காக

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

எப்போது என் மீது

செலுத்தினாயோ

அப்போதே நீ

ஒரு வீரனல்ல

ஒரு கோழை

என்பதை

நிரூபித்து விட்டாய்

 

இவ்வளவு நாள்

நான் ஒரு

வீரனுடன் தான்

போரிடுகிறேன் என்று

நினைத்து போரிட்டேன்

ஆனால்

இப்போது தான்

தெரிகிறது

நீ ஒரு

கோழை என்று

ஒரு கோழையுடன்

போரிட்டதை

நினைத்து நான்

வெட்கப்படுகிறேன்

 

என்னுடன் போரிட்ட

அனைத்து

ஷத்திரியர்களும்

என்னைக் கொன்று

வெற்றி பெற

வேண்டும் என்ற

எண்ணத்தில் தான்

போரிட்டார்களே தவிர

உன்னைப் போல்

சூழ்ச்சி செய்து

வெற்றி பெற

வேண்டும் என்று

என்ற எண்ணத்தில்

யாரும் இதுவரை

என்னுடன்

போரிட்டதில்லை

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////