ஜபம்-பதிவு-412
(பரம்பொருள்-164)
(அரவானுடைய
தனி அறையில்
உள்ள கட்டிலில்
அரவானும்
திருநங்கையும்
ஒன்றாக
அமர்ந்து கொண்டு
இருக்கும் போது
அரவான் பேசத்
தொடங்கினார்
)
அரவான் :
“நடந்து முடிந்த
நம்முடைய
காந்தர்வ திருமணம்
என்னுடைய
விருப்பத்தின்
பேரில் இருளை
சாட்சியாக
வைத்து நடந்து
முடிந்து விட்டது
“
“இனி இந்த
அறையில்
நடக்கப்போகும்
நம்முடைய
இன்பம் நிறைந்த
இந்த இரவிற்கு
இருள் இருக்க
வேண்டுமா ?
அல்லது
ஒளி இருக்க
வேண்டுமா?
என்பதை
முடிவு செய்யும்
பொறுப்பை
உன்னுடைய
விருப்பத்திற்கே
விட்டு விடுகிறேன்
“
திருநங்கை :
(அரவானின்
வார்த்தைகளைக்
கேட்ட திருநங்கை
நாணத்தால்
தன்னுடைய
முகத்தை மூடிக்
கொண்டாள்)
அரவான் :
“நிலவை மேகம்
மூடும்போது
இந்த உலகம்
எப்படி இருளால்
சூழ்ந்து
விடுகிறதோ
அதைப்போல
நிலவு போன்று
இருக்கும்
உன்னுடைய
முகத்தை
கைகள் என்ற
மேகத்தால் மூடிக்
கொண்டதால்
இந்த அறை
இருளால் சூழ்ந்து
விட்டதைப் பார்
“
திருநங்கை :
“நீங்கள் பெரிய
கவிஞராக
இருப்பீர்கள்
போல
இருக்கிறது
;
நீங்கள் பேசும்
வார்த்தையே
கவிதையாக
இருக்கிறது
;”
அரவான் :
“நம்முடைய
மனதைக் கவர்ந்த
பெண் நமக்கு
அருகில்
இருக்கும் போது
எந்த ஒரு
ஆணும்
கவிஞனாகத்தான்
மாறுவான் “
“கவிஞனாக
இல்லாதவனும்
கவிஞனாகத்
தான் மாறுவான்”
“கவிஞனாக
பிறக்காதவனும்
கவிஞனாகத்
தான் மாறுவான்”
“நானும்
அப்படித்தான்
உன்னைப்
பார்த்தது முதல்
கவிஞனாக
மாறி விட்டேன்”
“கவிஞனாவதற்கு
முன் கண்களால்
உன்னுடைய
அழகை ரசித்தேன்
;
கவிஞனனான பின்
வார்த்தைகளால்
உன்னுடைய
அழகை
ரசிக்கிறேன்
;”
திருநங்கை :
“நீங்கள் ரசித்த
என்னுடைய
அழகை
கவிதையாக்கி
சொல்வீர்களா
?
உங்களுடைய
வாயிலிருந்து
வரும் அழகான
வார்த்தைகளின்
மூலம் அதை
நான் கேட்க
விரும்புகிறேன்
“
“என்னுடைய
ஆசையை
நிறைவேற்றுவீர்களா?”
அரவான் :
“உங்களை
வர்ணித்து ஒரு
கவிதை என்ன
ஓராயிரம்
கவிதை
சொல்லலாமே
?
ஆயிரம் கவிதை
போதுமா-அல்லது
அதற்கு மேலும்
வேண்டுமா ?
“
திருநங்கை :
“ஓர் ஆயிரம்
கவிதை எல்லாம்
தேவையில்லை
என்னுடைய
மனதை கவரும்
வகையில்
ஒரே ஒரு
கவிதை
சொல்லுங்கள்
அது போதும்
“
அரவான் :
“சரி சொல்கிறேன்
! “
(என்று
அரவான்
கவிதை சொல்லத்
தொடங்கினார்)
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
28-03-2020
//////////////////////////////////////////