ஜபம்-பதிவு-595
(அறிய
வேண்டியவை-103)
கிருஷ்ணன் :
“ஏனென்றால்
துரியோதனன்
ஒரு
உண்மையான
வீரன்”
தர்மர்
:
“எப்படி
சொல்கிறீர்கள்?”
கிருஷ்ணன்
:
“துரியோதனன்
தனது
இஷ்டத்திற்கு
ஒரு
எதிரியைத்
தேர்ந்தெடுத்து
அவருடன்
சண்டையிட்டு
வெற்றி
பெற்று
விட்டான்
என்றால்
இந்த
உலகம்
துரியோதனனை
வீரம்
இல்லாத
ஒருவனை
எதிரியாகத்
தேர்ந்தெடுத்து
வெற்றி
பெற்று
விட்டான்
என்று சொல்லும்”
“தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை
அவன்
எதிரியிடமே
ஒப்படைத்து
விட்டால்
துரியோதனனுடன்
போரிடுவதற்கு
தகுதியுடையவர்
மட்டுமே
போரிடுவதற்கு
சம்மதம்
தெரிவித்து
துரியோதனனுடன்
போரிடுவர்
அத்தகையவரை
துரியோதனன்
கொன்றால்
இந்த
உலகம்
துரியோதனனை
வீரன்
என்று பேசும்”
“அதனால்
தான்
துரியோதனன்
தானே
தன்னுடைய
எதிரியைத்
தேர்ந்தெடுக்காமல்
தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை
எதிரியிடமே
ஒப்படைத்து
விட்டான்”
“அதனால்
தான்
சொல்கிறேன்
துரியோதனன்
உண்மையான
வீரன்
என்று”
////////////////////////////////////////
(துரியோதனனும்
பீமனும்
பேசிக்
கொள்கின்றனர்)
துரியோதனன்
:
“நீயா
வருகிறாய்?”
பீமன்
:
“ஆமாம்
நான்
தான்
வருகிறேன்
உன்னை
எதிர்த்து
சண்டையிடுவதற்கு
நான்
தான் வருகிறேன்
கதாயுதத்தை
எடுத்துக்
கொண்டு
சண்டையிடுவதற்கு
நான்
தான் வருகிறேன்”
துரியோதனன் :
“கதாயுதத்தை
எடுத்துக்
கொண்டு
என்னுடன்
சண்டையிடுவதற்கு
வருகிறேன்
என்று
சொல்லாதே
என்னுடைய
கதாயுதத்தால்
சாவதற்காக
வருகிறேன்
என்று
சொல் “
பீமன்
:
சாவதற்கு
என்றுமே
பயப்படாதவன்
இந்த
பீமனே !
சாவைக்
கண்டு
என்றுமே
அஞ்சாதவன்
இந்த
பீமனே !
சாவை
பிறருக்கு
பரிசளித்தே
பழக்கப்பட்டவன்
இந்த
பீமனே !
அந்த
சாவை
உனக்கும்
பரிசாக
வழங்குவதற்கு
தயாராக
வந்திருப்பவனும்
இந்த
பீமனே !
“இன்று
உன்னுடைய
சாவை
யாராலும்
தடுத்து
நிறுத்த முடியாது
என்னுடைய
கையால்
நீ
அடி வாங்கி
சாகப்
போவதையும்
யாராலும்
தடுத்து
நிறுத்த
முடியாது
இந்திரனே
உனக்கு
உதவியாக
வந்தாலும்
உன்னுடைய
சாவை
அந்த
இந்திரனாலும்
தடுத்து
நிறுத்த
முடியாது
துரியோதனா”
“கோழையைப்
போல்
தண்ணீரை
ஸ்தம்பனம்
செய்து
மடுவிற்குள்
ஒளிந்து
கொண்டிருக்கும்
துரியோதனா
முதலில்
தண்ணீரை
விட்டு
வெளியே
வா
சண்டையிடுவதற்கு
தயார்
என்றால்
வெளியே
வா”
(பீமனின்
வார்த்தைகளைக்
கேட்ட
துரியோதனன்
புற்றிலிருந்து
சீறி
வெளியே
பாய்கின்ற
நாகம்
போல் ஸ்தம்பனம்
செய்யப்பட்ட
தண்ணீரை
பிளந்து
கொண்டு
வெளியே
வந்தான் ;
உருக்குமயமானதும்
ஸ்வர்ணத்தால்
அலங்கரிக்கப்பட்டதுமான
பெரிய
கதையை
கையில்
ஏந்தியவாறு
ஸ்தம்பனம்
செய்யப்பட்ட
தண்ணீரை
பிளந்து
கொண்டு
துரியோதனன்
வெளியே
வந்தான் ;
“சிகரத்துடன்
கூடிய
மலை
போன்று
இருக்கிறவனும்
மிகுந்த
புஜபலத்தைக்
கொண்டவனாய்
இருக்கிறவனும்
சூலத்தைக்
கையில்
ஏந்திய
ருத்திரரைப்
போல்
இருக்கிறவனும்
தண்டத்தைக்
கையில்
ஏந்திய
அந்தகனைப்
போல்
இருக்கின்றவனும்
வஜ்ராயுதத்தைக்
கையில்
ஏந்திய
இந்திரனைப்
போல்
இருக்கிறவனுமாகிய
துரியோதனன்
நன்றாக
ஒளி விடுகின்ற
சூரியனைப்
போல்
ஸ்தம்பனம்
செய்யப்பட்ட
தண்ணீரை
பிளந்து
கொண்டு
வெளியே
வந்தான்)
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
09-07-2020
/////////////////////////////////