ஜபம்-பதிவு-584
(அறிய
வேண்டியவை-92)
“தொடை
உடைக்கப்
பட்டுத்தான்
இந்தத்
துரியோதனன்
இறப்பான்
என்றால்
என்னுடைய
விதி
என்னுடைய
இறப்பை
என்னுடைய
தொடையில்
எழுதி
வைத்திருக்கிறது
என்று
பொருள் “
“தொடை
உடைக்கப்பட்டுத்
தான்
என்னுடைய மரணம்
நிகழ
வேண்டும்
என்று
இருந்தால் அதை
யாராலும்
தடுத்து
நிறுத்த
முடியாது”
“என்னுடைய
மரணம்
எப்படி
நிகழ்ந்தாலும்
அதைப்பற்றி
நான்
கவலைப்படப்
போவதில்லை
என்னுடைய
உடலில்
உயிர் ஒட்டி
இருக்கும்
வரை
போரிடுவேன்
போரிடுவதிலிருந்து
பின்
வாங்க
மாட்டேன்”
“தாயே
என்னை
ஆசிர்வதியுங்கள்”
காந்தாரி :
“நீடுழி
வாழ்க மகனே!”
(காந்தாரி
கண்ணீர்
வடித்துக்
கொண்டே
தன்னுடைய
மகன்
துரியோதனனை
வாழ்த்தினாள்
துரியோதனன்
அங்கிருந்து
செல்கிறான்)
//////////////////////////////////////////////
(மறுநாள்
18-ம் நாள்
குருஷேத்திரப்
போர்
பதினெட்டாம்
நாள்
குருஷேத்திரப்
போரில்
துரியோதனன்
கடுமையாகப்
போரிடுகிறான்
துரியோதனை
எதிர்த்த
அனைவரையும்
அடித்து
நொறுக்குகிறான்
துரியோதனின்
உடலின்
மேல் பட்ட
ஆயுதங்கள்
தான்
உடைந்தனவே
தவிர
துரியோதனன்
உடல்
எந்தவித
பாதிப்பையும்
அடையவே
இல்லை
சதாதேவன்
சகுனியின்
தலையைக்
கொய்து எறிந்தான்
சகுனி
இறந்ததைக் கண்டும்
கேட்டும்
கௌரவ
சேனைகள்
நடுநடுங்கியது
தன்னுடைய
மாமா
சகுனியின்
இழப்பு
துரியோதனனை
மிகவும்
வாட்டிக்
கொண்டிருந்தாலும்
தன்னைச்
சுற்றி தனக்கு
பாதுகாப்பாக
இருந்த
அனைவரும்
இறந்ததைக்
கண்டிருந்தாலும்
தனக்கு
அறிவிரை சொல்லி
தன்னை
திருத்த முயற்சி
செய்தவர்கள்
தனக்காக
போரிட்டு உயிரை
விட்டதைக்
கண்டிருந்தாலும்
பதினெட்டாம்
நாள் நடந்த
போரில்
துரியோதனன்
அனைவரையும்
இழந்து
விட்டிருந்தாலும்
மாபெரும்
வீரனான
துரியோதனன்
மனதால்
தளரவே
இல்லை
துரியோதனனைத்
தவிர
பதினொரு
அக்ரோணி
சேனைகளும்
அழிந்து
விட்டன )
(
2000 - தேர்கள்
700
- யானைகள்
5000
- குதிரைகள்
10000
- வீரர்களுடன்
திருஷ்டத்யும்னன்
தலைமை
ஏற்றுள்ள
பாண்டவர்
படை முன்னேறி
வர
தனியொரு வீரனாக
நின்று
கொண்டிருந்தான்
துரியோதனன்
11
அக்ரோணிப்
படைகளை
வைத்திருந்து
மாபெரும்
மன்னனாக
திகழ்ந்து
கொண்டிருந்த
மிகப்பெரும்
வீரரான
துரியோதனன்
கௌரப்
படையில்
ஒருவரும்
இன்றி
தன்னந்தனியாக
பாண்டவர்களுடைய
படையை
எதிர்த்து
நின்று
கொண்டிருந்தான்
“வீரத்திற்கு
எடுத்துக்காட்டாய்
விளங்கிக்
கொண்டிருக்கும்
துரியோதனன்
மனதில்
ஏற்பட்ட
கவலையாலும்
உடலில்
ஏற்பட்ட
காயங்களாலும்
தன்னுடைய
மனதை
அமைதிப்
படுத்துவதற்காக
தன்னிடம்
மீதம் இருந்த
ஒரே
ஒரு ஆயுதமான
தன்னுடைய
கதாயுதத்தை
எடுத்துக்
கொண்டு
வட
திசை நோக்கி
நடந்து
ஒரு மடுவை
அடைந்தான்
துரியோதனன்
மடு
என்றால்
ஆற்றிடை
பள்ளம்
என்று
பொருள் )
(அப்போது
அந்த இடத்திற்கு
சஞ்சயன்
வந்தான்)
துரியோதனன்
:
“சஞ்சயா
கௌரவப்
படையில்
மீதம் இருப்பது
எத்தனை
பேர் யார் யார்
எல்லாம்
உயிரோடு
இருக்கிறார்கள்
என்பது
உனக்குத்
தெரியுமா?”
சஞ்சயன் :
“நான்
வரும் வழியில்
வியாசர்
முனிவரைச்
சந்தித்தேன்
கௌரவ
சேனையில்
அஸ்வத்தாமன்
; கிருபர் ;
கிருதவர்மன்
; ஆகிய
மூன்று
பேர் மட்டுமே
உயிரோடு
இருக்கிறார்கள்
என்று
அவர் கூறினார் “
துரியோதனன்:
“எங்களுடையவன்
என்று
சொல்லிக்
கொள்வதற்கு
இப்போது
நீ மட்டுமே
என்னுடன்
இருக்கிறாய்
எங்களுடையவர்களில்
நம்பிக்கைக்குரியவன்
என்று
சொல்லிக்
கொள்வதற்கு
இப்போது
நீ
மட்டுமே
என்னுடன்
இருக்கிறாய்”
“நான்
இப்போது
இருக்கும்
நிலையில்
எனக்கு
நம்பிக்கையாக
இருக்கக்
கூடியவர்கள்
யாரும்
இல்லை
நம்பிக்கைக்குரியவர்கள்
என்று
சொல்லுவதற்கு
உகந்தவர்களும்
யாரும்
இல்லை”
“நான்
உன்னைத் தான்
நம்புகிறேன்
வேறு
யாரையும்
நம்பவில்லை”
“நான்
சொல்லப்போகும்
செய்தியை
என்னுடைய
தந்தையிடம்
சென்று
சொல்வாய்
என்ற
நம்பிக்கையில்
சொல்கிறேன்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
09-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment