July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-95


               ஜபம்-பதிவு-587
          (அறிய வேண்டியவை-95)

“எஞ்சியிருக்கும்
நம்மால்
பாண்டவர்களுடைய
வெற்றியை தடுக்க
முடியாது என்று
தலைக்கனத்தில்
மிதந்து
கொண்டிருக்கும்
பாண்டவர் படைகளை
புறமுதுகு காட்டி
ஓடும் படி போர்
புரிவோம் வாருங்கள்”

“சூழ்ச்சி செய்து
பெறும் வெற்றி
வெற்றி அல்ல
நேர்மையாக
போரிட்டு
பெறுவதே வெற்றி
என்பதை பாண்டவர்
படையில்
உள்ளவர்கள்
அனைவரும்
உணர்ந்து
கொள்ளும் வகையில்
போரிட்டுக்
காட்டுவதற்காக போர்
புரிவோம் வாருங்கள் “

“தோல்வியின்
எல்லையைத்
தொட்டு விட்டார்கள்
கௌரவர்களுக்கு
வெற்றி என்பது
இனி எட்டாக்
கனி தான் என்று
நினைத்துக்
கொண்டிருக்கும்
பாண்டவர்களுக்கும்
வெற்றி என்பது
எட்டாக்கனி
என்பதை உணரும்
வகையில் போர்
புரிவோம் வாருங்கள்”

“கௌரவர்கள் வீழ்ந்து
விட்டார்கள் 
அவர்களை
அழிப்பது இனி
எளிமையானது தான்
என்று நினைத்துக்
கொண்டிருக்கும்
பாண்டவர்களுக்கு
கௌரவர்கள்
விழவில்லை
பாய்வதற்கு நேரம்
பார்த்துக் காத்துக்
கொண்டிருந்திருக்கிறார்கள்
என்பதை பாண்டவர்கள்
அறியும் படி போர்
புரிவோம் வாருங்கள்”

“வீழ்ந்தவர்கள்
வீழ்ந்தவர்கள் தான்
இனி அவர்களால்
எழுந்திருக்க
முடியாது என்று
கௌரவர்களை
நினைத்துக்
கொண்டிருக்கும்
பாண்டவர்களுக்கு
வீழ்ந்தவர்கள்
எழுந்தால்
எப்படி இருக்கும்
என்பதை பாண்டவர்கள்
அறியும் படி போர்
புரிவோம் வாருங்கள்”

“மரண அவஸ்தை
என்றால் என்ன
என்பதை பாண்டவர்
படையில் உள்ள
அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
மரண அவஸ்தை
என்றால் என்ன
என்பதை
அவர்களுக்கு
காட்டுவதற்காக
போர் புரிவோம்
வாருங்கள்”

“தோல்வியைப்
பார்த்து பயந்து ஓடி
ஒளிந்து கொண்டான்
துரியோதனன் என்ற
அவப்பெயர் உனக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டும் என்றால்
எங்களுடன்
வாருங்கள்
போர்க்களம் புகுவோம்
போர் செய்வோம்
தோல்வியைக் கண்டு
துவளாதவர்கள்
கௌரவர்கள்
என்பதை
இந்த உலகம்
அறிய போர்
செய்வோம்
வாருங்கள்”

(அஸ்வத்தாமன்
பேசிய பேச்சைக்
கேட்டு துரியோதன்
மகிழ்ச்சி அடைந்தான்
அஸ்வத்தாமன்
பேசிய பேச்சுக்கள்
துரியோதனனுடைய
உள்ளத்தில் புதிய
உற்சாகத்தை
அளித்தது
தண்ணீரை ஸ்தம்பனம்
செய்து அதில்
ஓய்வு எடுத்துக்
கொண்டிருந்த
துரியோதனன் பேசத்
தொடங்கினான்)

துரியோதனன் :
“அஸ்வத்தாமா நீ
பேசிய பேச்சுக்கள்
துரோகத்தால்
சிதைந்து விட்டிருந்த
என்னுடைய
மனதிற்கு
ஆறுதல் அளிப்பதாக
இருக்கிறது “

“உடலில் ஏற்பட்ட
காயங்களை விட
மனதில் ஏற்பட்ட
காயத்தின்
வலி தான்
எனக்கு அதிகமாக
இருக்கிறது”

“உடலில் ஏற்பட்ட
காயங்கள் வலித்தால்
மருத்துவரிடம்
செல்லலாம் 
ஆனால் எனக்கு
மனதில் வலி
ஏற்பட்டிருக்கிறது
என்னுடைய
வலி தீர
வேண்டும் என்றால்
எனக்கு அமைதி
தேவைப்படுகிறது
நான் தனிமையில்
இருக்கும் போது
என்னுடைய மனதில்
அமைதி ஏற்படும்
அதன் காரணமாக
நிம்மதி என்பது
எனக்கு ஏற்படும்
என்ற காரணத்தினால்
இங்கு வந்தேன் “

“அமைதி என்னுடைய
மனதில் ஏற்பட
வேண்டும் என்றால்
நான் தனிமையில்
இருக்க வேண்டும்”

“நான் தனிமையில்
இருக்க வேண்டும்
என்றால் யாருடைய
தொந்தரவும் எனக்கு
இருக்கக் கூடாது”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment