ஜபம்-பதிவு-582
(அறிய
வேண்டியவை-90)
காந்தாரி
:
“நான்
சொன்னதைச்
செய்யாமல்
நீ வேறு
ஒரு
செயலைச்
செய்து
இருக்கிறாய்
என்றால்
இந்த
செயலை
நீ உன்
சொந்த
அறிவினால்
செய்ததாக
எனக்குத்
தெரியவில்லை”
“யாரோ
உன்னை
தூண்டி
விட்டு
இத்தகைய
ஒரு
செயலைச்
செய்யச்
சொல்லி
இருக்கிறார்கள்
யாரோ
உன்னுடைய
மனதைக்
குழப்பி
இத்தகைய
செயலைச்
செய்யச்
சொல்லி
இருக்கிறார்கள்
யாரோ
உனக்கு தவறான
பாதையைக்
காட்டி
அதன்
வழியாக
செல்லச்
சொல்லி
இருக்கிறார்கள்”
“யாரோ
உனக்கு
தவறான
நெறியைப்
போதித்து
உன்னை
இந்த
செயலைச்
செய்யச்
சொல்லி
இருக்கிறார்கள்
யாரோ
உன்னுடைய
சிந்தனையை
சிந்திக்க
விடாமல்
உன்னுடைய
சிந்தனையை
கலக்கி
விட்டு
விட்டு
நீ
குழப்பத்தில்
இருக்கிறாய்
என்பதைத்
தெரிந்து
கொண்டு
இந்த
செயலைச்
செய்யச்
சொல்லி
இருக்கிறார்கள்”
“தாய்
முன்பு பிறந்த
மேனியாக
செல்லக்
கூடாது
என்று உன்னிடம்
யார்
சொன்னது
உன்னுடைய
மனதை
மாற்றி
இத்தகைய ஒரு
செயலை
உன்னைச்
செய்யச்
சொன்னது யார்”
துரியோதனன் :
“வாசுதேவ
கிருஷ்ணன்”
காந்தாரி :
“தாய்
முன்பு
பிறந்த
மேனியுடன்
செல்லக்
கூடாது
என்று
சொன்னது
வாசுதேவ
கிருஷ்ணனா!”
துரியோதனன் :
“ஆமாம்
தாயே!”
காந்தாரி :
“வாசுதேவ
கிருஷ்ணன்
உன்னுடைய
எதிரிகளான
பாண்டவர்களுடன்
கூட்டணி
அமைத்துக்
கொண்டு
இருப்பவன்”
“குருஷேத்திரப்
போரில்
நான்
சண்டையிட
மாட்டேன்
என்று
சொல்லிக்
கொண்டே
பாண்டவர்களுடைய
வெற்றிக்காகப்
பாடுபட்டுக்
கொண்டிருப்பவன்”
“பாண்டவர்களின்
வெற்றிக்காக
பல்வேறு
சூழ்ச்சிகளையும்
தர்மம்
என்ற
பெயரில்
செய்து
கொண்டிருப்பவன்
“
“பாண்டவர்களின்
வெற்றிக்காக
உன்னுடன்
இருந்தவர்களையும்
உனக்குத்
துணையாக
இருந்தவர்களையும்
கொன்றவன்”
“பாண்டவர்களின்
மேல்
கருணை
கொண்டவன்
பாண்டவர்களின்
நலனில்
அக்கறை
கொண்டவன்
வாசுதேவ
கிருஷ்ணன்
அத்தகையவன்
பாண்டவர்களின்
நலனைப்
பற்றி
யோசிப்பானா
அல்லது
கௌரவர்களின்
நலனைப்
பற்றி
யோசிப்பானா
என்பதைப்
பற்றி
நீ
யோசித்துப்
பார்த்திருக்க
வேண்டாமா”
“பாண்டவர்களின்
எதிரியாக
இருக்கும்
உனக்கு
வாசுதேவ
கிருஷ்ணன்
நல்லதை
செய்வான்
என்று
எப்படி நினைத்தாய்
வாசுதேவ
கிருஷ்ணன்
உன்னுடைய
நல்லதற்கு
தான்
சொன்னான்
என்பதை
எப்படி
நம்பினாய் “
“எதிரிக்கு
துணையாக
இருப்பவனுடைய
பேச்சைக்
கேட்டு
தாயின்
பேச்சுக்கு
எதிராக
நடந்தவன்
இந்த
உலகத்திலேயே நீ
ஒருவனாகத்
தான்
இருக்க
வேண்டும் “
துரியோதனன்
:
“மாயக்
கண்ணன்
என்னுடைய
மனதை
மயக்கி
சிந்தனையை
குழப்பி
விட்டு விட்டான்
சிந்தை
தடுமாறிய
நான்
செய்த செயல்
இவ்வாறு
தவறாக
முடியும்
என்று
நான்
நினைக்கவில்லை”
காந்தாரி
:
“நான்
உனக்காகச்
சிந்திக்கும்
சிந்தனை
சொல்லும்
சொல்
செய்யும்
செயல்
ஆகிய
அனைத்தும்
உன்னுடைய
நன்மைக்காகத் தான்
இருக்கும்
என்பதை
எப்படி
அறியாமல்
விட்டாய்
என் மகனே!”
துரியோதனன்
:
“மன்னிக்க
வேண்டும்
தாயே
நடந்து விட்ட
தவறுகளுக்காக
நான்
உங்களிடம்
மன்னிப்பு
கேட்டுக்
கொள்கிறேன்”
“ஆனாலும்
நீங்கள்
கலக்கம்
அடையத்
தேவையில்லை
தாயே!”
“நான்
கதாயுதப் போர்
தான்
புரியப் போகிறேன்
கதாயுதப்போரில்
இடுப்பிற்குக்
கீழ்
தாக்கவே
கூடாது
என்பது
விதி
உண்மையான
வீரர்கள்
இதைத்
தான்
பின்பற்றுவார்கள்
விதியை
மீறுவது
தர்மத்தை
மீறுவதாகும்”
“ஆகவே
நீங்கள் என்னைப்
பற்றி
கவலைப்பட
வேண்டாம்
தாயே!”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
09-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment