July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-101


               ஜபம்-பதிவு-593
        (அறிய வேண்டியவை-101)

“நான் யாரைக்
கண்டும் பயப்பட
மாட்டேன்
எதற்காகவும்
பயப்பட
மாட்டேன்
யுதிஷ்டிரன்
பீமசேன்
அர்ஜுனன் நகுலன்
சகாதேவன்
வாசுதேவ
கிருஷ்ணன்
பாஞ்சாலர்கள்,
யுயுதானன்
இன்னும் மற்றும்
உள்ள உன்னுடைய
வீரர்கள்
யாரைக் கண்டும்
நான் பயப்பட
மாட்டேன்
பயம் என்பதும்
எனக்கு இல்லை”

“நீங்கள் அனைவரும்
உண்மையான
வீரர்களாக இருந்தால்
தர்மத்தைக்
கடைபிடித்து
போரிடுபவராக
இருந்தால்
தனியாக இருக்கும்
என்னுடன் ஒருவர்
பின் ஒருவராக
நேரடியாக
வந்து போரிடுங்கள்
நீங்கள் அனைவரும்
உண்மையான
வீரர்களாக இல்லை
என்றால்
தர்மத்தைக்
கடைபிடிக்காமல்
போரிடுபவராக
இருந்தால்
கும்பலாகச் சேர்ந்து
அனைவரும்
என்னுடன்
போரிட வாருங்கள்
அதற்கும் நான்
தயாராகத் தான்
இருக்கிறேன்
போரிட
வாருங்கள்”

“நான்
போரிடுவதற்கு
தயாராகத் தான்
இருக்கிறேன்”

(என்று மடுவிற்குள்
மறைந்து கொண்டு
தான் பேசிக்
கொண்டிருந்தான்
துரியோதனன்)

தர்மர் :
“தர்மத்தை அழித்து
அதர்மத்தை நிலை
நாட்ட வேண்டும்
என்பதற்காக
குருஷேத்திரப்
போரை
ஆரம்பித்து
வைத்த நீ
இன்று
தோல்வியின்
எல்லையில்
வந்து நின்று
கொண்டிருக்கிறாய்
இப்போதாவது
அதர்மம் எப்போதும்
எந்த காலத்திலும்
வெற்றி
பெற முடியாது
என்பதைத்
தெரிந்து
கொள்ள
முயற்சி செய்
துரியோதனா”

“போரிடுவதற்கு நீ
முடிவு எடுத்து
விட்டதால் -நீ
விரும்பியபடி
நான் உனக்கு
வாய்ப்பு
அளிக்கிறேன்”

“நீ எந்த
ஒருவனுடன்
சண்டையிட
விரும்புகிறாயோ
அந்த ஒருவனை
எதிர்த்து - நீ
எந்த ஆயுதத்தைப்
பயன்படுத்தி
சண்டையிட
விரும்புகிறாயோ
அந்த ஆயுதத்தை
வைத்துக் கொண்டு
நீ சண்டையிடலாம்
நாங்கள்
அனைவரும்
நடக்கும்
சண்டையை
பார்க்கும்
பார்வையாளர்களாக
இருப்போம் “

“நீ மேலும்
கேட்டுக்
கொண்டபடி
எங்களில்
ஒருவனை
நீ கொன்றால்
அரசனாகி இந்த
நாட்டை ஆளலாம்
எங்களில் ஒருவர்
உன்னைக்
கொன்றால்
நீ சுவர்க்கத்தை
அடைய
வேண்டியது தான் “

துரியோதனன் :
“என்னுடைய ஒரே
ஆயுதம் கதாயுதம்
கதாயுதத்தை
வைத்துத் தான்
நான் சண்டையிட
விரும்புகிறேன் “
///////////////////////////////////////////////////

(கிருஷ்ணன் தர்மர்
அருகில் சென்று
தர்மருடன் ரகசியமாகப்
பேசத் தொடங்கினார்)

கிருஷ்ணன் :
“என்ன பெரியண்ணா
என்ன காரியம்
செய்து விட்டீர்கள்
துரியோதனனுக்கு
இணையாக கதாயுதப்
போர் புரிய தகுதி
உடையவர்
சின்ன அண்ணா
பீமன் மட்டுமே “

“பீமனைத் தவிர யார்
துரியோதனனுடன்
சண்டையிட்டாலும்
அவர்களால்
துரியோதனனுடைய
அடியை தாக்குப்
பிடிக்கவும் முடியாது
உயிர் பிழைக்கவும்
முடியாது
பீமனைத் தவிர
யாராலும்
சிறிது நேரம் கூட
துரியோதனனின்
அடிகளை தாக்குப்
பிடித்துக் கொண்டு
துரியோதனன்
முன்னால் நின்று
கொண்டிருக்க
முடியாது
பீமனைத் தவிர
இந்த உலகத்தில்
உள்ள யாரும்
துரியோதனனுக்கு
இணையாக
கதாயுதப் போர்
புரிய முடியாது”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////


No comments:

Post a Comment