July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-98


               ஜபம்-பதிவு-590
        (அறிய வேண்டியவை-98)

“எங்களுடன் போரிட்டு
வெற்றி பெற்று
சிம்மாசனத்தில் அமர்ந்து
உயிரோடு இருந்து
இந்த உலகத்தை
ஆட்சி செய்
அப்படி உன்னால்
செய்ய முடியவில்லை
என்றால்
எங்களுடன் போரிட்டு
தோல்வியைச் சந்தித்து
உயிரை இழந்து
நிம்மதியாக இந்த
பூமியில் உறங்கு”

“மடுவில் ஒளிந்து
கொண்டிருப்பதை
விட்டு விட்டு
வெளியே வா
துரியோதனா
வெளியே வா
வெளியே
வந்து போரிடு”

(துரியோதனன்
தண்ணீருக்குள்
மறைந்து இருந்து
கொண்டே பேசுகிறான்)

துரியோதனன் :
“நான் ரதத்தை
இழந்தவனாக
நிற்கிறேன்
என்னுடைய
அம்புத் தூணிகளை
இழந்தவனாக
நிற்கிறேன்
எனக்கு பக்கபலமாக
இருந்த சாரதி
கொல்லப்பட்டு
விட்டதால்
சாரதி இல்லாமல்
நிற்கிறேன்
சேனைகளை
இழந்து நிற்கிறேன்
எனக்கு துணையாக
இருந்தவர்கள்
அனைவரும்
இறந்து விட்டதால்
அனாதையாக
நிற்கிறேன்
பயம் என்ற
ஒன்றைக் கண்டிராத
இந்த துரியோதனன்
என்னுடைய
மன வேதனைக்கு
ஆறுதல் சொல்வதற்கு
ஒருவர் கூட
இல்லாமல்
தன்னந்தனியாக
நிற்கிறேன் “

“பயம் என்பது
பிராணிகளிடம்
இருக்கும் ஒன்று
மனிதர்களிடம்
இருக்குமா என்பது
எனக்குத் தெரியவில்லை
பயம் என்றால்
என்ன என்று
எனக்குத் தெரியாது
ஏனென்றால் நான்
என்னுடைய
வாழ்க்கையில்
பயப்பட்டதே இல்லை
ஏனென்றால் அந்த
பயம் என்னிடம்
நெருங்குவதே இல்லை
நானும் பயத்தை
நெருங்க விடுவதில்லை
அதனால் பயம்
என்பது எனக்கு
எற்பட்டதேயில்லை
கொல்லப்படும்
பிராணிகளிடம் தான்
உயிர் பயம்
என்ற ஒன்று இருக்கும் “

“கொல்லப்படப்
போகிறோம் என்று
தெரிந்திருந்தும்
உயிரைப் பற்றிக்
கவலைப்படாமல்
இருப்பவன் தான்
இந்தத் துரியோதனன்
துரியோதனனாகிய
நான் இந்த
மடுவிற்குள் வந்து
இருந்தது கோழையைப்
போல் ஒளிந்து
கொள்வதற்காகவும் அல்ல
போரிடுவதைத் தவிர்க்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் அல்ல
உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் அல்ல
என்னுடைய உடலும்
மனமும் அதிக அளவில்
காயம் பட்டு இருக்கிறது’

“உடலிலும் மனதிலும்
ஏற்பட்டுள்ள காயங்களின்
வலிகளை ஆற்றிக்
கொண்டு மன
அமைதி பெற
வேண்டும் என்ற
காரணத்திற்காகத் தான்
நான் இந்த
மடுவிற்குள் வந்து
ஓய்வு எடுத்துக்
கொண்டிருக்கிறேன் “

யுதிஷ்டிரர் :
“உனக்கு
நிரந்தர ஓய்வு
அளிப்பதற்காகத் தான்
நாங்கள்
வந்திருக்கிறோம்
உன்னுடைய
ஆத்மாவிற்கு
ஓய்வு கொடுத்து
உன்னை நிம்மதியாக
உறங்க வைப்பதற்காகத்
தான் நாங்கள்
வந்திருக்கிறோம்
உனக்கு மரணத்தை
பரிசாக அளிப்பதின்
மூலம் நிம்மதியான
ஓய்வு என்றால்
என்ன என்பதை
உனக்குக் காட்டவே
நாங்கள்
வந்திருக்கிறோம்
மடுவை விட்டு
வெளியே வா
ஓய்வு என்றால் என்ன
என்பதை உன்க்குக்
காட்டுகிறோம் வா
துரியோதனா வா “

துரியோதனன் :
“நான் யாருக்காக இந்த
நாட்டை ஆள
வேண்டும் என்று
நினைத்தேனோ
அவர்கள் அனைவரும்
என்னை விட்டு
போன பிறகு
நான் யாரிடம்
எல்லாம் பிரியமாக
இருந்தேனோ
அவர்கள் அனைவரும்
என்னை விட்டு
போன பிறகு
செல்வங்கள் அனைத்தும்
என்னை விட்டு
போன பிறகு
வீரர்கள் அனைவரும்
என்னை விட்டு
போன பிறகு
நான் ஏன் ஆட்சி
செய்ய வேண்டும்
எனக்கு ஆட்சி
செய்ய விருப்பம் இல்லை”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment