ஜபம்-பதிவு-636
(அறிய
வேண்டியவை-144)
“அரக்கு
மாளிகை
சம்பவத்தில்
சாட்சியாக
இருந்த
ஒரே
ஒருவனான
புரோசனனையும்
அழித்து
விட்டேன்
இனி
பயப்பட
வேண்டிய
அவசியம்
இல்லை”
“மருமகனே
துரியோதனா
ஒன்றே
ஒன்றை
மட்டும்
நன்றாக
ஞாபகம்
வைத்துக்
கொள்”
“கடன்
விரோதி
நெருப்பு
மூன்றையும்
மிச்சம்
வைக்கக்
கூடாது
அப்படி
மிச்சம்
வைத்தால்
அந்த
மூன்றும்
வளர்ந்து
நம்மையே
அழித்து
விடும்”
(இச்செயலைக்
கண்ட
துரியோதனனும்
கர்ணனும்
மிகுந்த
ஆச்சரியப்பட்டனர்
சகுனியின்
செயலைக்
கண்டு
மிகுந்த
ஆச்சரியப்பட்டனர்”
“ஒரு
திட்டத்தை
தீட்டும்
போதும்
தீட்டிய
திட்டத்தை
செயல்
படுத்தும்
போதும்
எவ்வளவு
ஆழமாக
யோசிக்க
வேண்டுமோ
அவ்வளவு
ஆழமாக
யோசிப்பதில்
வல்லவராக
இருக்கும்
சகுனி
அந்த
திட்டத்தில்
ஏதேனும்
தவறு
நடந்து
அந்த
செயலைச்
செய்தது
நாம்
தான்
என்று
தெரிந்து
நாம்
மாட்டிக்
கொள்ளக்
கூடிய
சூழ்நிலை
ஏற்பட்டால்
அதை
சரி
செய்து
மாட்டிக்
கொள்ளாமல்
இருப்பதற்கு
தேவையான
விஷயங்களைச்
செய்வதில்
வல்லவராகவும்
இருக்கின்ற
சகுனியைக்
கண்டு
துரியோதனனும்
கர்ணனும்
வியந்தனர்”
அறிய வேண்டியவை
“இந்த
நிகழ்வின்
மூலம்
நாம்
அறிய
வேண்டிய
உண்மை
என்னவென்றால்
நமக்கு
பிடிக்காதவருக்கு
எதிராக
ஒரு
செயலைச்
செய்வதற்காக
நாம்
ஒரு
திட்டத்தை
தீட்டி
அதை
செயல்படுத்தும்
போது
அதில்
தவறு
நடந்து
நாம்
தான்
செய்தோம்
என்பது
தெரிந்து
நாம்
மாட்டிக்
கொள்ளக்கூடிய
சூழ்நிலை
ஏற்பட்டால்
அதை
சரி
செய்து
நாம்
மாட்டிக்
கொள்ளாமல்
இருப்பதற்கு
தேவையான
விஷயங்களைச்
செய்ய
வேண்டும்
என்பதைத்
தான்
இந்த
நிகழ்வு
நமக்கு
விளக்குகிறது”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
05-08-2020
/////////////////////////////////