போகர்-7000- சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-3
“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பாடல் - 3
“””கூறுமே நன்மையென்ற தீமையாவும்
குறிப்புடனே உந்தமக்கு முன்னேசொல்லும்
மாறுபடா மேனியது வாசிகூறும்
வளமான தேகமது கல்துhண் ஆகும்
வீறுடனே வையகத்தில் கோடிகாலம்
வித்தகனே இருப்பதும் நிட்சயந்தான்
நாறுமுடல் அழியாது கோடிகாலம்
நானிலத்தில் இருப்பதும் சமாதியாமே”””””””
-----------போகர்-- 7000 ----
“””கூறுமே நன்மையென்ற தீமையாவும்
குறிப்புடனே உந்தமக்கு முன்னேசொல்லும்””””
நாளை நடக்கப் போவது நல்லதா , கெட்டதா என்று தெரியாத நமக்கு வருங்காலத்தில் நடக்கப் போகும் நன்மைகளையும் , தீமைகளையும் அந்தச் செயல்கள் நடைபெறுவதற்கு முன்னர் சாயா தரிசனம் செய்பவருக்கு
நம்முடனேயே இருக்கும் , ஆள் ரூபமாய் இருக்கும் , அந்த ரூபம் நமக்கு முன் கூட்டியே சொல்லி விடும் .
நாளை நடைபெறும் செயலுக்கு ஏற்றவாறு தம்மை தயார் படுத்திக் கொள்ள செயல்களை வகுத்துக் கொள்ள தகவல்களை முன் கூட்டியே சொல்லி நம்மை தயார் நிலையில் வைக்கும் .
“””””மாறுபடா மேனியது வாசிகூறும்
வளமான தேகமது கல்துhண் ஆகும்”””””
வாசி என்று சொல்லப்படும் சுவாசக் காற்று ஓடும் இந்த உடலானது ,
கல்லினால் செய்யப்பட்ட செதுக்கப்பட்ட துhண் ஆனது எவ்வளவு கெட்டியாக, உறுதியாக , கடினமாக இருக்குமோ?
அதைப் போல் உடலானது உறுதியாக இருக்கும் எவரும் எளிதில் வீழ்த்தி விட முடியாத அளவுக்கு வலிமை உடையதாக இருக்கும் .
“”””””வீறுடனே வையகத்தில் கோடிகாலம்
வித்தகனே இருப்பதும் நிட்சயந்தான்
நாறுமுடல் அழியாது கோடிகாலம்
நானிலத்தில் இருப்பதும் சமாதியாமே”””””””
சாயா தரிசனம் செய்பவர் உயிரோடு கூடிய இந்த உடலோடு இந்த உலகத்தில் கோடி காலம் நிச்சயாக வாழ்வார் என்பது உண்மை ஆகும் . இதில் எள்ளளவும் சந்தேகப் பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் போகர் .
உயிர் உடலை விட்டு பிரிந்தால் உடல் அழிந்து விடும் .
அவ்வாறு நடக்காமல் உயிரானது உடலை விட்டு பிரியாமல் உடல் அழியாமல் கோடிக் கணக்கணக்கான ஆண்டுகள் வாழ்வதற்குரிய தகுதியை சாயா தரிசனம் செய்பவர் அடைவார்,
அதாவது சாயா தரிசனம் செய்பவர் சமாதி என்னும் நிலையை அடைந்து , இந்த உலகத்தில் இறவா நிலையுடன் வாழ்வதற்குரிய தகுதியைப் பெறுவார்.
சமாதி என்றால் ஆதி நிலைக்குச் சமமாக மனிதன் உயர்தல் என்று பொருள்.
ஆதி நிலை , முதல் நிலை , மூல நிலை , இருப்பு நிலை என்று சொல்லப்படக் கூடிய கடவுள் நிலைக்குச் சமமாக மனிதன் உயர்ந்து வாழ்வான் .
இறைவன் என்ற நிலையை அடைந்து இறைவனாகவே வாழ்வான் .
இறவா நிலையுடன் என்றும் நித்தியமாக வாழ்வான் என்று அர்த்தம் .
பாடல் - 4
“”””ஆமேதான் சாயாவின் தரிசனத்தை
அப்பனே கண்டவர்க்கு எல்லாம் சித்தி
தாமேதான் அட்டமா சித்தியாவும்
தாரணியில் அடைவதற்கு ஐயம் இல்லை
போமேதான் பனிரெண்டு ஆண்டுமட்டும்
பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
வேமேதான் காணாத மாண் பருக்கு
விட்டகுறை இருந்தாலும் வாய்க்காதன்றே
---------போகர் --7000----------
""“”””ஆமேதான் சாயாவின் தரிசனத்தை
அப்பனே கண்டவர்க்கு எல்லாம் சித்தி””””"
சாயா தரிசனம் கண்டவருக்கு , அதாவது சாயா தரிசனம் செய்தவருக்கு ,
என்ன செயல்களைச் செய்தாரோ,
என்ன செயல்களைச் செய்கின்றாரோ ,
என்ன செயல்களைச் செய்யப் போகின்றாரோ ,
எல்லா செயல்களும் அவருக்கு வெற்றியாகத் தான் முடியும் . தோல்வி என்பது கிடையாது .
சாயா தரிசனம் செய்தவர்களுக்கு காலம் என்பது கிடையாது அதாவது முக்காலத்திலும் அவர் செய்யும் செயல்கள் வெற்றியாகத் தான் முடியும் .
"“”தாமேதான் அட்டமா சித்தியாவும்
தாரணியில் அடைவதற்கு ஐயம் இல்லை
போமேதான் பனிரெண்டு ஆண்டுமட்டும்
பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்”””””
இங்கே ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் .
அஷ்ட கன்மங்கள் , அஷ்டமா சித்தி என்று இரண்டு நிலைகள் உள்ளன.
அஷ்ட கன்மங்கள் என்பது வேறு , அஷ்டமா சித்தி என்பது வேறு , இரண்டும் இரண்டு வேறுபட்ட நிலைகளில் மனிதர்கள் அடையும் பெறும் சக்திகள் ஆகும் .
அஷ்ட கன்மங்கள் எனப்படுபவை ,
1. வசியம் 5. ஆக்ருஷ்ணம்
2. பேதனம் 6. மோகனம்
3. வித்வேஷணம் 7. ஸ்தம்பணம்
4. மாரணம் 8 .உச்சாடணம்
ஆகியவை ஆகும் .
அஷ்டமா சித்தி எனப்படுபவை ,
1. அணிமா 5. பிராப்தி
2. மஹிமா 6. பிரகாமியம்
3. லஹிமா 7. வசித்துவம்
4. கரிமா 8. ஈசத்துவம்
ஆகியவை ஆகும் .
மேலே சொல்லப்பட்ட அஷ்ட கன்மங்கள் , அஷ்டமா சித்திகள் ஆகியவற்றை, ஆகிய சக்திகளை , ஆகிய பலன்களை சாயா தரிசனம் செய்பவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில்
அதாவது வாழும் காலத்தில் மேற்கண்ட சக்திகளை அடைந்து வாழ்வார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்கிறார் போகர் .
மேலே சொல்லப்பட்ட சித்திகள் , மகிமைகள் , சக்திகள் ஆகிய அனைத்தும் 12 ஆண்டுகள் விடாமல் தொடர்ந்து சாயா தரிசனம் கண்டவருக்கே, பார்த்தவருக்கே கிடைக்கும் .
சாயா தரிசனம் 12 ஆண்டுகள் :
இங்கே நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் :
சாயா தரிசனம் செய்து 12 வருடங்கள் கழித்து தான் இத்தகைய சக்திகள் கிடைக்கும் என்று யாரும் தவறாக எண்ணி விடக் கூடாது .
தவறான கருத்தை மனதில் திணிக்கக் கூடாது .
எந்த தவம் செய்தாலும் , எந்த பயிற்சி செய்தாலும் , அதை தவறில்லாமல் முறைப்படி செய்தால் , விடாமல் தொடர்ந்து செய்தால் ஒவ்வொரு வருடமும் ஒரு சக்தி கிடைக்கும்.
அதை நம்மால் உணர முடியாது .
மூன்று அல்லது நான்கு வருடங்கள் கழித்துத் தான் நமக்கு என்ன சக்தி, எத்தனை சக்தி கிடைத்திருக்கிறது என்று உணர முடியும் .
12 வருட முடிவில் எந்த பயிற்சி செய்தோமோ , எந்த தவம் செய்தோமோ அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சாயா தரிசனம் செய்பவர்கள் 12 வருட முடிவில் சித்தர் என்ற நிலையை அடைவார்கள் என்றால்
சொல்லப்பட்ட சக்திகள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் நமக்குக் கிடைக்கும் என்றும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடக்கும் என்றும் பொருள்
“”””வேமேதான் காணாத மாண் பருக்கு
விட்டகுறை இருந்தாலும் வாய்க்காதன்றே”””
இத்தகைய வார்த்தைகளால் சொல்ல முடியாத பல்வேறு சிறப்புகள் பலவற்றை தன்னுள் கொண்ட சாயா தரிசனத்தை 12 ஆண்டுகள் விடாமல் தொடர்ந்து செய்யாதவருக்கு தவங்கள் பல செய்தாலும் அதாவது விட்டகுறை இருந்தாலும் அதன் பலனாக மேற்கண்ட சக்திகள் கிடைக்காது என்கிறார் போகர்.
விட்ட குறை என்றால் போன ஜென்மத்தில் எத்தகைய செயல்களைச் செய்கிறோமோ அவைகள் நல்லவைகளாகவோ ,தீமைகளாகவோ இருந்தாலும் அதற்குரிய பாவங்களுக்கு உரிய , புண்ணியத்திற்கு உரிய, பலன்கள் இந்த ஜென்மத்தில் கிடைக்கும் என்று பொருள்.
அதைப் போல போன ஜென்மத்தில் செய்த தவங்களின் பலனாக இந்த ஜென்மத்தில் தவ நிலையில் உயர்ந்தாலும், ஆன்மீக உலகில் சிறப்புப் பெற்றாலும் , இந்த ஜென்மத்தில் சாயா தரிசனம் செய்யா விட்டால் மேலே சொல்லப் பட்ட சக்திகள் பலன்கள் கிடைக்காது என்று போகர் கூறுகிறார்
""""“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”