பரம்பொருள்-பதிவு-78
“தன்னுடைய
கறவைப்
பசுக்கள்
கள்வர்களால்
களவாடப்பட்டு
சென்று
விட்டதே
என்ற
வேதனையின்
காரணமாக
கோபாவேசத்துடன்
பேசி
தற்போது
கண்ணீர் சிந்தி
அழுது
கொண்டிருக்கும்
அந்தணனைக்
கண்டான்
அர்ஜுனன் ;
சோகமே
வடிவமாய்
நின்று
கொண்டிருந்த
அந்தணனைக்
கண்டான்
அர்ஜுனன் ;
இழப்பின்
வேதனையை
முடிந்த
அளவு
வார்த்தைகளால்
சொல்லி
விட்டு
சொல்லமுடியாத
வேதனையை
தன்னுடைய
கண்ணீரின்
மூலம்
வெளிப்படுத்திக்
கொண்டு
நின்று
கொண்டிருந்த
அந்தணனைக்
கண்டான்
அர்ஜுனன்;”
"
அந்தணனுக்கு யார்
தீங்கிழைத்தார்களோ
அவர்களுக்கு
நான்
சரியான
வகையில்
தண்டனை
வழங்கவில்லை
என்றால்
நான் நீதி
தவறியவன்
ஆவேன் ;
அந்தணனுடைய
கறவைப்
பசுக்களை
நான்
மீட்டு வரவில்லை
என்றால்
தர்மருடைய
ஆட்சிக்கு
நான் களங்கம்
விளைவித்தவனாவேன்
;
என்
கடமையிலிருந்து
விலகியவன்
ஆவேன் ;
நீங்கமுடியாத
களங்கத்தை
அரசுக்கு
செய்தவனாவேன்
;
அறத்தை
மறந்தவன்
ஆவேன்
;
தர்மர்
ஆட்சிக்கு
கெட்ட
பெயரை
உண்டாக்கியவன்
ஆவேன்,;
கழிக்க
முடியாத
பாவத்தை
செய்தவன்
ஆவேன்,;
குடிமக்களைக்
காக்கத்
தவறி
விட்டார்
தர்மர்
என்ற
அவப்பெயரை
தர்மருக்கு
ஏற்படுத்தி
தீர்க்க
முடியாத
குற்றத்தைச்
செய்தவனாவேன்
;
இதனால்
ஏற்படக்கூடிய
பாவத்தை
எத்தனை
பிறவி
எடுத்தாலும்
கழிக்க
முடியாத
பாவியாவேன்;"
"அந்தணனிடமிருந்து
கள்வர்களால்
களவாடி
செல்லப்பட்ட
கறவைப்
பசுக்களை
மீட்டு
வரவில்லை
என்றால்
தர்மர்
தன்
குடிமக்களைக்
காக்கத்
தவறி
விட்டார்
என்ற
செய்தியும் ;
அர்ஜுனன்
அந்தணனுடைய
கறவைப்
பசுக்களை
மீட்டு
வரவில்லை
என்ற
செய்தியும் ;
நாடு
முழுவதும் பரவும் ;
அப்படி
நாடு முழுவதும்
பரவினால்
தர்மருடைய
ஆட்சிக்கும்
;
பஞ்ச
பாண்டவர்களுக்கும்
நீக்க
முடியாத
அவப்பெயர்
ஏற்படும்,;"
"தர்மரும்
திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுத
சாலைக்குள்
நுழைந்தால்
விதியை
மீறிய
குற்றத்திற்காக
12
மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
போக
வேண்டியதிருக்கும்
;
என்ற
விதிக்கு
பயந்து
நான்
என்னுடைய
தனிப்பட்ட
நலன்களை
மட்டுமே
கருத்தில்
கொண்டு
சுயநலத்துடன்
செயல்பட்டால்
;
என்
மேல்
முழுவதும்
நம்பிக்கை
வைத்து
என்
மீது அளவற்ற
பாசத்துடன்
இருக்கும்
என்னுடைய
அண்ணன்
தர்மர்
அவர்களுடைய
ஆட்சிக்கு
மிகப்பெரிய
துரோகம்
செய்தவனாவேன்
"
"தர்மர்
ஆட்சிக்கு
கெட்ட
பெயர் எதுவும்
ஏற்படாமல்
இருக்க
வேண்டும்
என்றால்
நான்
ஆயுத சாலைக்குள்
நுழைந்து
கண்டிப்பாக
ஆயுதங்களை
எடுத்துத்
தான்
வர
வேண்டும் ;
கள்வர்களை
தண்டித்து
கறவைப்
பசுக்களை
மீட்டுத்
தான்
வர
வேண்டும் ;"
"சுயநலத்தை
விட
பொது
நலன்
தான்
முக்கியம் ;
என்
நலத்தை விட
மக்கள்
நலன் தான்
முக்கியம்
;
என்னை
விட
தர்மர்
ஆட்சிக்கு
கெட்ட
பெயர்
ஏற்படாமல்
இருப்பது
தான்
முக்கியம்
; - என்று
பல்வேறு
விதமாக
யோசனை
செய்தான்
அர்ஜுனன்
“
"இறுதியில்
தர்மரும்,
திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுத
சாலைக்குள்
நுழைந்து
ஆயுதத்தை
எடுத்து
வந்து
கள்வர்களிடமிருந்து
அந்தணனுடைய
கறவைப்
பசுக்களை
மீட்டு
வருவது என்றும் ;
இதனால்
விதியை
மீறிய
குற்றத்திற்காக
தான்
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
செல்லவும்
தயார்
என்றும் ;
முடிவெடுத்தான்
அர்ஜுனன்"
"தர்மரும்,
திரௌபதியும்
தனித்திருக்கும்
ஆயுதசாலைக்குள்
நுழைந்து
ஆயுதங்களை
எடுத்து
வருவதற்காக
ஆயுத
சாலையின்
கதவுகளைத்
திறந்து
உள்ளே
சென்றான்
அர்ஜுனன்".
“அந்த
அறைக்குள்………………….?”
-----------இன்னும்
வரும்
------------K.பாலகங்காதரன்
-----------30-10-2019
//////////////////////////////////////////