May 03, 2022

ஜபம்-பதிவு-752 (சாவேயில்லாத சிகண்டி-86)

 ஜபம்-பதிவு-752

(சாவேயில்லாத

சிகண்டி-86)

 

கங்காதேவி :

ஆனால்,

பரசுராமர்

அனைத்தும் அறிந்தவர்

 

பீஷ்மர் :

பரசுராமர்

அனைத்தையும்

அறிந்தவர் கிடையாது

அனைத்தையும் 

அறிந்தவராக

இருந்திருந்தால்

என்னை

அறிந்திருப்பார்

என்னுடைய

கொள்கையை

அறிந்திருப்பார்

நியாயம் எது

அநியாயம் எது

என்று

தெரிந்திருப்பார்

 

ஒன்றும் அறியாத

காரணத்தினால்

தான் சீடனுடன்

போரிட

போர்க்களத்திற்கு

வந்திருக்கிறார்

 

பரசுராமர்

அறியாததை

நான் அவருக்கு

அறிய

வைக்கிறேன்

நியாயம் எது

என்பதை

அவரை

உணர

வைக்கிறேன்

 

தாயே

இனி போரை

யாராலும்

நிறுத்த

முடியாது

போரை நிறுத்த

எந்த ஒரு

வழியும்

கிடையாது

 

தாயே

என்னை

ஆசிர்வதித்து விட்டு

செல்லுங்கள்

 

கங்காதேவி :

எதையும் சொல்லி

வாழ்த்தும்

நிலையில்

நான் இல்லை

மகனே

கடவுள் உனக்கு

துணை நிற்கட்டும்

 

(என்று

சொல்லி விட்டு

கங்காதேவி

அந்த இடத்தை

விட்டு சென்று

விடுகிறாள்)

 

பீஷ்மருக்கும்

பரசுராமருக்கும்

போர்

ஆரம்பிக்கப்

போகிறது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////

ஜபம்-பதிவு-751 (சாவேயில்லாத சிகண்டி-85)

 ஜபம்-பதிவு-751

(சாவேயில்லாத

சிகண்டி-85)

 

பீஷ்மர் :

என்னைப் புரிந்து

கொள்ளாதவர்கள்

என் மேல் பொறாமை

கொண்டவர்கள்

என் வளர்ச்சியை

பிடிக்காதவர்கள் தான்

என்னைக் குற்றவாளி

என்கிறார்கள்

 

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

சாதாரண

மனிதர்களுடன்

போட்டி போட

மாட்டார்கள்

அவர்களை

குற்றம் சொல்ல

மாட்டார்கள்

குறை சொல்ல

மாட்டார்கள்

ஏளனம் செய்ய

மாட்டார்கள்

அவர்கள்

தனித்திறமை

வாய்ந்தவர்களைத் தான்

குற்றம் சொல்வார்கள்

குறை சொல்வார்கள்

 

தனக்கென்று

தனித்திறமை

இல்லாதவர்கள்

பிறருடைய

திறமையுடன் போட்டி

போட முடியாதவர்கள்

பிறருடைய

வளர்ச்சியைக் கண்டு

பொறாமைப் படுபவர்கள்

தான்

எதற்கெடுத்தாலும்

குறை சொல்லிக்

கொண்டு திரிவார்கள்

 

அவர்களுக்கு குறை

சொல்வதைத் தவிர

வேறு வேலை

கிடையாது

குறை சொல்வதையே

தொழிலாகக் கொண்டு

திரிவார்கள்

 

ஒருவர் தன்

தனித்திறமையினால்

சமுதாயத்தில்

உயர்ந்த நிலைக்கு

சென்று விட்டால்

பணம் பதவி

புகழ் பெற்று விட்டால்

அவரைப் போல

நாமும்

முன்னேற வேண்டும்

அதற்காக

உழைக்க வேண்டும்

என்று இந்த

உலகத்தில்

உள்ள மக்கள்

யாரும் முயற்சி

செய்ய மாட்டார்கள்

 

உயர்ந்த நிலையில்

இருப்பவரை

எப்படி கீழே

இறக்க வேண்டும்

அவரை எப்படி

அவமானப்

படுத்த வேண்டும்

ஏளனம்

செய்ய வேண்டும்

குறை

சொல்ல வேண்டும்

என்று தான்

செயல்களைச்

செய்வார்கள்

 

வயிற்றெரிச்சலால்

அவமானப்படுத்துவார்கள்

அவமானங்கள்

அசிங்கங்கள்

ஏளனங்கள்

ஆகியவற்றால்

இழிவு படுத்தும்

வேலையைச்

செய்வார்கள்

 

பொறாமை கொண்ட

மனிதர்களால் செ

ய்யப்படும்

இந்த செயல்களை

நாம் கவனித்துக்

கொண்டு இருந்தால்

நம்மால் எந்த

ஒரு செயலையும்

செய்ய முடியாது

நமக்கு நிம்மதி

இருக்காது

 

நம்முடைய

வாழ்க்கையை

நாம் நிம்மதியாக

வாழ முடியாது

 

பொறாமை

கொண்டவர்களால்

வயிற்றெரிச்சலால்

செய்பவர்களுடைய

வார்த்தைகளைப்

புறம் தள்ள வேண்டும்

 

குறை

சொல்பவர்களை

ஒரு மனிதாரகவும்

குறை சொல்பவர்களின்

வார்த்தைகளையும்

ஒரு பொருட்டடாகவும்

மதிக்கவே கூடாது

நான் செய்த செயல்

சரியானது தான்

என்பது

எனக்குத் தெரியும்

 

நான் செய்த செயல்

தவறானது என்று

எனக்கு சிறிதளவு

சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்

என் மேல் எனக்கே

சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்

என்னால்

பரசுராமரை மட்டுமல்ல

யாரையும்

எதிர்க்க முடியாது

 

எதிர்த்து போர்

புரியவே முடியாது

நான் பரசுராமருடன்

போரிட வந்தே

இருக்க மட்டேன்

 

நான் பரசுராமரை

எதிர்த்துப் போரிட

போர்க்களத்திற்கு

வந்து இருக்கிறேன்

என்றால்

நான் செய்த செயல்

சரியானது என்ற

காரணத்திற்காகத் தான்

 

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-750 (சாவேயில்லாத சிகண்டி-84)

 ஜபம்-பதிவு-750

(சாவேயில்லாத

சிகண்டி-84)

 

(பீஷ்மரிடம் சென்ற

கங்காதேவி

பீஷ்மரிடம் பேச

ஆரம்பித்தாள்)

 

கங்காதேவி :

மகனே பீஷ்மா

 

நீ அம்பையை

சிறை

எடுத்ததைத் தான்

பரசுராமர் தவறு

என்கிறார்

 

பிரம்மச்சாரியாக

இருப்பவன்

எதற்காக ஒரு

பெண்ணை

சிறை எடுத்தான்

பீஷ்மன் செய்த

செயல் சரியான

செயலா

என்று பரசுராமர்

மட்டுமல்ல

இந்த உலகமே

கேள்வி கேட்கிறது

 

இந்த கேள்விக்கு

எவ்வளவு பதில்

சொன்னாலும்

பரசுராமர்

ஏற்றுக் கொள்ளும்

நிலையில் இல்லை

 

இந்த கேள்வி

உன்னுடைய

வாழ்க்கை

முழுவதும்

உன்னைத்

துரத்தப் போகிறது

நீ இறந்த பிறகும்

உன்னைத்

துரத்தப் போகிறது

 

இந்த கேள்வி

உன்னுடைய

வாழ்க்கையில்

ஒரு கேள்விக்

குறியாகவே

இருக்கப் போகிறது

 

நீ எங்கு சென்றாலும்

இந்த கேள்வி

உன்னைத் தொடர்ந்து

கொண்டே தான்

இருக்கும்

 

உன்னுடைய புகழுக்கு

களங்கத்தை

ஏற்படுத்திக் கொண்டே

தான் இருக்கும்

 

மற்றவர்கள்

சொன்னார்கள்

என்பதற்காக

நாம் எந்த ஒரு

செயலையும்

செய்யக் கூடாது

செயலைச் செய்வதற்கு

முன்னர் நமக்கு

ஏதேனும் பாதிப்பு

ஏற்படுமா என்பதை

ஆராய்ந்து

பார்க்க வேண்டும்

 

நமக்கு பாதிப்பு

எதுவும் இல்லை

என்று தெரிந்தால்

மட்டுமே

அந்தச் செயலைச்

செய்ய வேண்டும்

நமக்கு பாதிப்பு

ஏற்படும் என்று

தெரிந்தால்

அந்தச் செயலை

நாம் செய்யக் கூடாது

 

பாதிப்பு ஏற்படும்

என்று தெரிந்தும்

நாம் அந்தச்

செயலைச் செய்தால்

செய்த செயலுக்கு

நாம் தான்

பொறுப்பேற்க வேண்டும்

 

செயலுக்குரிய

விளைவானது

நன்மையில் முடிந்தால்

அனைவரும்

சொல்லியதை கேட்டு

செய்தார்கள் என்று

இந்த உலகம்

சொன்னவர்கள்

அனைவரையும் புகழும்

 

ஆனால் செய்த

செயலுக்குரிய

விளைவானது

தீமையாக இருந்தால்

செயலைச்

செய்தவன் தான்

பொறுப்பேற்க

வேண்டும்.

செயலைச்

செய்தவனைத் தான்

இந்த உலகம்

குற்றம் சொல்லும்

செயலைச் செய்யச்

சொன்னவர்களை

இந்த உலகம்

குற்றம் சொல்லாது

 

நீ செய்த

செயலின்

விளைவானது

தீமையை உண்டாக்கி

விட்ட காரணத்தினால்

இந்த உலகம்

உன்னை குற்றவாளி

என்கிறது

 

மற்றவர்கள்

சொன்னார்கள்

என்பதற்காக

ஒரு செயலைச்

செய்து

சிக்கலில் மாட்டிக்

கொண்டதற்கு

நீ ஒரு

உதாரணமாக

இப்போது

திகழ்ந்து

கொண்டிருக்கிறாய்

 

இந்த உலகத்தின்

முன்

நீ ஒரு

குற்றவாளியாக

நிறுத்தப்பட்டிருக்கிறாய்

பீஷ்மா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-749 (சாவேயில்லாத சிகண்டி-83)

 ஜபம்-பதிவு-749

(சாவேயில்லாத

சிகண்டி-83)

 

அம்பையை

திருமணம் செய்ய

ஒத்துக் கொண்டால்

போரை நிறுத்துகிறேன்

என்று சொல்

 

போரில் பீஷ்மன்

கொல்லப்பட

வேண்டாம் என்றால்

அவனை அம்பையை

திருமணம் செய்து

கொள்ளச் சொல்

 

கங்காதேவி :

விரும்பும் போது

தான் மரணம் என்ற

வரத்தைப் பெற்றவன்

பீஷ்மன்

அவனை எப்படி

உங்களால்

கொல்ல முடியும்

 

பரசுராமர் :

தீர்வு இல்லாத

பிரச்சினை என்ற

ஒன்று கிடையவே

கிடையாது

பிரச்சினைக்குரிய

தீர்வு தெரியவில்லை

என்று தான்

சொல்ல வேண்டும்

 

பீஷ்மனைக்

கொல்லும் வழி

இந்த உலகத்திற்கு

வேண்டுமானால்

தெரியாமல்

இருக்கலாம் ஆனால்

பீஷ்மனைக் கொல்லும்

வழி எனக்குத்

தெரியும்

 

அவனை எப்படி

கொல்வது என்பது

எனக்குத் தெரியும்

பீஷ்மனை நான்

கொல்லும் போது

அதை நீயே

தெரிந்து கொள்வாய்

 

கங்காதேவி செல்

உன் மகனிடம் செல்

அவனை

அம்பையை

திருமணம் செய்து

கொள்ளச் சொல்

மரணத்திலிருந்து

அவன் உயிரைக்

காப்பாற்றிக்

கொள்ளச் சொல்

 

ஒரு தாய்

எப்படி நடந்து

கொள்ள வேண்டுமோ

அப்படி

நடந்து கொள்

 

உன் மகனை

அறிவுரை கூறி

திருத்த முயற்சி செய்

 

இங்கே என்னிடம்

நின்று கொண்டு

காலத்தை வீணாக்காமல்

உன் மகன்

பீஷ்மனிடம் செல்

அவனிடம் பேசு

 

நான் உரைத்த

உண்மையை பேசு

நீ உணர்ந்த

உண்மையை பேசு

உனக்கு

உணர்த்தப்பட்ட

உண்மையைப் பேசு

 

(என்று பரசுராமர்

கங்காதேவியிடம்

சொல்லி

அனுப்பி விட்டார்.

கங்காதேவி

பீஷ்மரிடம்

செல்கிறாள்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-748 (சாவேயில்லாத சிகண்டி-82)

 

ஜபம்-பதிவு-748

(சாவேயில்லாத

சிகண்டி-82)

 

பீஷ்மனுக்கு

புத்தி பேதலித்து

விட்டது

அதனால்

குரு சொல்வதையே

தவறு என்கிறான்

 

பீஷ்மனுக்கு

சிந்திக்கும் திறன்

போய் விட்டது

அதனால்

குருவையே எதிர்த்து

போரிடத்

தயாராகி விட்டான்

 

பீஷ்மன்

அறிவற்ற ஒரு

செயலைச்

செய்திருக்கிறான்

அதுவும்

அறிவில்லாமல்

செய்திருக்கிறான்

 

பிள்ளைகள் தவறு

செய்யும் போதே

பெற்றோர்கள்

கண்டித்து

வளர்க்க வேண்டும்

பிள்ளைகள்

தவறு செய்யும் போது

அவர்கள் தவறு

செய்கிறார்கள் என்பதை

அவர்களுக்கு

உணர்த்த வேண்டும்

பிள்ளைகள்

தாங்கள் செய்தது

தவறு என்பதை

அவர்கள் உணர்ந்து

கொள்ளும்படிச்

செய்ய வேண்டும்

 

செய்த தவறுக்கு

மன்னிப்பு கேட்கச்

சொல்ல வேண்டும்

தவறை

திருத்திக் கொள்ளச்

சொல்ல வேண்டும்

 

பிள்ளைகள் தங்கள்

தவறை திருத்திக்

கொள்ளாமல்

அதே தவறை

மீண்டும் மீண்டும்

செய்தால்

பிள்ளைகளை

தண்டிக்க வேண்டும்

 

பிள்ளைகளை

தண்டிப்பது என்பது

பிள்ளைகள் தாங்கள்

செய்தது தவறு

என்பதை

உணர்ந்து கொண்டு

தவறை மீண்டும்

செய்யாமல்

தங்களைத்

திருத்திக்

கொள்வதற்குத் தான்

 

பிள்ளைகள்

தவறு செய்யும் போது

பெற்றோர்கள்

அதை கண்டு

கொள்ளாமல் இருப்பதும்

தவறை

ஊக்குவிப்பது போல்

நடந்து கொள்வதும்

பிள்ளைகள்

கெட்டுப்போவதற்கு

அது ஒரு

வாய்ப்பாக அமையும்

 

தாங்கள் செய்தது

தவறு என்பதை

உணராத பிள்ளைகள்

பெற்றோர்களை

மதிக்காது

கல்வி

கற்றுக் கொடுத்த

குருவை மதிக்காது

 

உன் மகன்

செய்த தவறை

அவனுக்கு உணர்த்த

நீ தவறி விட்டாய்

 

பீஷ்மன்

தான் செய்தது

தவறு என்று உணர்ந்து

இருப்பானேயானால்

தன் தவறை

திருத்திக் கொண்டு

இருந்திருப்பான்

என்னை

மதித்திருப்பான்

என் வார்த்தைக்கு

மதிப்பு

கொடுத்திருப்பான்

 

பீஷ்மன்

தான் செய்த

தவறை உணரவில்லை

தான் செய்தது

தவறு என்று

அவனுக்குத்

தெரியவில்லை

அதனால்

அவன் என்னை

மதிக்காமல்

நடந்து கொள்கிறான்

என்னுடைய

வார்த்தைக்கு

மதிப்பு கொடுக்காமல்

அவமதிக்கிறான்

குருவை எதிர்த்து

போரிடவே

வந்து விட்டான்

 

கங்காதேவியே

நீயும் ஒரு

சாதாரண பெண்

போலத் தான்

நடந்து கொள்கிறாய்

 

உன் மகன்

பீஷ்மன்

செய்த தவறை

நியாயப்படுத்தி பேசிக்

கொண்டிருக்கிறாய்

 

செல்

உன் மகனிடம்

செல்

 

உன் மகன்

செய்தது தவறு

என்று சொல்

செய்த தவறுக்கு

பிராயச் சித்தம்

செய்யச் சொல்

அம்பையை

திருமணம்

செய்யச் சொல்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////