ஜபம்-பதிவு-744
(சாவேயில்லாத
சிகண்டி-78)
வெள்ளை
வஸ்திரம் உடுத்தி
வெண்மையான
தலைப்பாகையை
அணிந்து
வெண்மையான எல்லா
ஆபரணங்களையும்
பூட்டி
சரீரத்திற்கு பொருந்தும்
வகையில்
வெண்மையான
கவசம் பூண்டு
வெண்மையான
வில்லை
எடுத்துக் கொண்டு
வெள்ளியினால்
செய்யப்பட்டதும்
அழகு
பொருந்தியதும்
வெண்மையான
குதிரைகள்
பூட்டப்பட்டதும்
நல்ல
அவயங்களையுடையதும்
நல்ல
சக்கரங்களையுடையதும்
புலித்தோலால்
மூடப்பட்டதும்
பெரிதான
ஆயுதங்களோடு
கூடினதும்
போருக்குத் தேவையான
அனைத்து
வசதிகளையுடையதும்
தலையில்
வெண்மையான
குடை பிடிப்பதும்
வெண்மையான
விசிறிகளால் வீசுவதும்
வாயுவுக்கும்
ஒப்பான வேகமுள்ள
குதிரைகளைக் கொண்ட
அழகுமிக்க தேரில்
நல்ல குலத்தில்
பிறந்தவனும்
சிறந்த வீரனும்
அஸ்வசாஸ்திரத்தை
அறிந்தவனும்
தேரை ஓட்டுவதில்
நல்ல பயிற்சியுள்ளவனும்
தேரோட்டிகளில்
சிறந்தவனாக
கருதப்படுபவனும்
பல போர்களில்
கலந்து கொண்டு
தேரை திறமையாக
ஓட்டியவனையும்
கொண்ட
திறமையான
தேரோட்டியால்
ஓட்டப்படும் தேரில்
ஏறிக் கொண்டு
ஹஸ்தினாபுரத்துதிலிருந்து
வெளிக்கிளம்பிப்
போர்க்களமான
குருஷேத்திரத்தை
பீஷ்மர் அடைந்தார்
குருக்ஷேத்திரக்
களத்திற்கு வந்த
பீஷ்மரும் பரசுராமரும்
போர் புரிவதற்காக
நேருக்கு நேராக
நின்று கொண்டனர்.
பீஷ்மர் தனது
அற்புதமான சங்கை
எடுத்து ஊதினார்
பல அந்தணர்களும்
காட்டைத் தங்கள்
வசிப்பிடமாகக் கொண்ட
பல தவசிகளும்
இந்திரனின்
தலைமையிலான
தேவர்களும்
அந்தப் பெரும்
போரைக் காண நின்று
கொண்டிருந்தனர்
பரசுராமருடன்
வந்திருந்த அந்தத்
தவசிகள் அனைவரும்
போரின்
பார்வையாளர்களாக
இருக்க விரும்பி
அந்தக் களத்தைச்
சுற்றி நின்று
கொண்டிருந்தனர்
போரை நிறுத்த
வேண்டும் என்பதற்காக
பீஷ்மரின் தாயான
கங்காதேவி
குருக்ஷேத்திரக் களத்திற்கு
வந்து பீஷ்மரிடம்
பேசத் தொடங்கினாள்
கங்காதேவி :
மகனே பீஷ்மா
பரசுராமர்
யாராலும் கொல்ல
முடியாதவர்
யாராலும் வெற்றி
கொள்ள முடியாதவர்
வீரத்தில் சிறந்தவர்
பிராமணர்களில்
உயர்ந்தவர்
ஷத்திரியர்களை
அழித்தவர்
உன்னுடைய ஆசிரியராக
இருப்பவர்
இத்தகைய
சிறப்புகளைப் பெற்ற
பரசுராமருடன் போரிடாதே
பரசுராமரை எப்படி
யாராலும் கொல்ல
முடியாதோ
அதேபோல் விரும்பும்
போது தான் மரணம்
என்ற வரத்தைப்
பெற்ற உன்னையும்
யாராலும்
கொல்ல முடியாது
உலகத்திலேயே
கொல்ல
முடியாதவர்களாக
இருக்கும்
நீங்கள் இருவரும்
போரிடுவது என்பது
இந்த உலகத்திற்கு
நன்மையை
உண்டாக்காது
தீமையையே
உண்டாக்கும்
--------ஜபம்
இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------01-05-2022
-------செவ்வாய்க்
கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment