ஜபம்-பதிவு-745
(சாவேயில்லாத
சிகண்டி-79)
நீங்கள் இருவரும்
சாதாரண அஸ்திரங்கள்
தெய்வீக அஸ்திரங்கள்
உலகை
அழிக்கக்கூடிய
அஸ்திரங்கள்
என்று அனைத்து
விதமான
அஸ்திரங்களையும்
கையாளத் தெரிந்தவர்கள்
இத்தகைய
அஸ்திரங்களை
நீங்கள் இருவரும்
போரில் பயன்படுத்தினால்
விளை நிலங்கள்
அழிந்து போகும்
நீர் நிலைகள்
வறண்டு போகும்
இந்த உலகத்தில்
எந்த ஒரு
உயிரினமும்
உயிர் வாழ
முடியாத
சூழ்நிலை
உருவாகி விடும்
இந்த உலகத்தின்
நலனைக்
கருத்தில் கொண்டு
பரசுராமருக்கு
எதிராக போர்
செய்யாதே
பரசுராமருடன்
போரிடும்
தவறான விஷயத்தை
மட்டும்
செய்து விடாதே
பீஷ்மர் :
தவறை நான்
செய்யவில்லை
பரசுராமர் தான்
செய்திருக்கிறார்
கங்காதேவி :
எதைத் தவறு
என்கிறாய்
பீஷ்மர் :
அம்பையின் வாழ்க்கை
பாதிக்கப்பட்டதற்கு
நான் தான்
காரணம் என்றார்
அதைத் தான்
நான் தவறு
என்கிறேன்
நான் பிரம்மச்சரிய
விரதம்
மேற்கொண்டிருப்பவன்
என்று தெரிந்திருந்தும்
என்னை அம்பையை
திருமணம் செய்து
கொள்ளச் சொன்னார்,.
அதைத் தான்
நான் தவறு
என்கிறேன்
அம்பை
பக்கம் தான் நியாயம்
இருக்கிறது என்று
அம்பையின்
சார்பாக பேசினார்.
அதைத் தான்
நான் தவறு
என்கிறேன்
என் பக்கம் உள்ள
நியாயத்தைப் புரிந்து
கொள்ள மறுக்கிறார்
அதைத் தான் நான்
தவறு என்கிறேன்
கங்காதேவி :
அம்பையின்
கஷ்டத்தைப்
போக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகப்
பேசி இருப்பார்
பீஷ்மர் :
கஷ்டம் என்பது
யாருக்குத் தான்
இல்லை
கஷ்டம் என்பது
அனைவருக்கும்
வருவது தானே
அம்பையின்
கஷ்டத்தைப் பார்ப்பவர்
ஏன் என்னுடைய
கஷ்டத்தை
பார்கக மறுக்கிறார்
கங்காதேவி :
அம்பையின்
கஷ்டத்தை
பெரிய கஷ்டமாக
நினைத்து இருப்பார்
பீஷ்மர் :
கஷ்டத்தில்
பெரிய கஷ்டம்
சிறிய கஷ்டம்
என்றெல்லாம் இல்லை
கஷ்டம் என்றால்
ஒன்று தான்
கஷ்டம்
மட்டும் தான்
வேறெதுவும்
கிடையாது
நாம் கஷ்டப்படும்
போது நம்முடைய
கஷ்டத்தை யாரிடம்
சொல்லி உதவி
கேட்கிறோமோ
அவர் நமக்கு உதவி
செய்யவில்லை
என்றால் அவரை
நாம் பகைவராகக்
கருதுகிறோம்
ஆனால்
நாம் உதவி
யாரிடம் கேட்கிறோமோ
அவர் எந்த
நிலையில்
இருக்கிறார்
எந்த கஷ்டத்தில்
இருக்கிறார்
என்பதைப் பற்றி நாம்
யோசிப்பதேயில்லை
நமக்கு மட்டும்
தான் கஷ்டம்
மற்றவர்களுக்கு
கஷ்டம் இல்லை
என்று நினைத்துக்
கொள்கிறோம்
நம்முடைய
கஷ்டத்தை நினைக்கும்
நாம்
பிறருடைய
கஷ்டத்தை
நினைப்பதேயில்லை
--------ஜபம்
இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------01-05-2022
-------செவ்வாய்க்
கிழமை
No comments:
Post a Comment