ஜபம்-பதிவு-751
(சாவேயில்லாத
சிகண்டி-85)
பீஷ்மர் :
என்னைப் புரிந்து
கொள்ளாதவர்கள்
என் மேல் பொறாமை
கொண்டவர்கள்
என் வளர்ச்சியை
பிடிக்காதவர்கள்
தான்
என்னைக் குற்றவாளி
என்கிறார்கள்
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
சாதாரண
மனிதர்களுடன்
போட்டி போட
மாட்டார்கள்
அவர்களை
குற்றம் சொல்ல
மாட்டார்கள்
குறை சொல்ல
மாட்டார்கள்
ஏளனம் செய்ய
மாட்டார்கள்
அவர்கள்
தனித்திறமை
வாய்ந்தவர்களைத்
தான்
குற்றம் சொல்வார்கள்
குறை சொல்வார்கள்
தனக்கென்று
தனித்திறமை
இல்லாதவர்கள்
பிறருடைய
திறமையுடன்
போட்டி
போட
முடியாதவர்கள்
பிறருடைய
வளர்ச்சியைக்
கண்டு
பொறாமைப்
படுபவர்கள்
தான்
எதற்கெடுத்தாலும்
குறை
சொல்லிக்
கொண்டு
திரிவார்கள்
அவர்களுக்கு
குறை
சொல்வதைத்
தவிர
வேறு
வேலை
கிடையாது
குறை
சொல்வதையே
தொழிலாகக்
கொண்டு
திரிவார்கள்
ஒருவர் தன்
தனித்திறமையினால்
சமுதாயத்தில்
உயர்ந்த நிலைக்கு
சென்று விட்டால்
பணம் பதவி
புகழ் பெற்று
விட்டால்
அவரைப் போல
நாமும்
முன்னேற வேண்டும்
அதற்காக
உழைக்க வேண்டும்
என்று இந்த
உலகத்தில்
உள்ள மக்கள்
யாரும் முயற்சி
செய்ய மாட்டார்கள்
உயர்ந்த நிலையில்
இருப்பவரை
எப்படி கீழே
இறக்க வேண்டும்
அவரை எப்படி
அவமானப்
படுத்த வேண்டும்
ஏளனம்
செய்ய வேண்டும்
குறை
சொல்ல வேண்டும்
என்று தான்
செயல்களைச்
செய்வார்கள்
வயிற்றெரிச்சலால்
அவமானப்படுத்துவார்கள்
அவமானங்கள்
அசிங்கங்கள்
ஏளனங்கள்
ஆகியவற்றால்
இழிவு படுத்தும்
வேலையைச்
செய்வார்கள்
பொறாமை கொண்ட
மனிதர்களால்
செ
ய்யப்படும்
இந்த செயல்களை
நாம் கவனித்துக்
கொண்டு இருந்தால்
நம்மால் எந்த
ஒரு செயலையும்
செய்ய முடியாது
நமக்கு நிம்மதி
இருக்காது
நம்முடைய
வாழ்க்கையை
நாம் நிம்மதியாக
வாழ முடியாது
பொறாமை
கொண்டவர்களால்
வயிற்றெரிச்சலால்
செய்பவர்களுடைய
வார்த்தைகளைப்
புறம் தள்ள
வேண்டும்
குறை
சொல்பவர்களை
ஒரு மனிதாரகவும்
குறை சொல்பவர்களின்
வார்த்தைகளையும்
ஒரு பொருட்டடாகவும்
மதிக்கவே கூடாது
நான் செய்த
செயல்
சரியானது தான்
என்பது
எனக்குத் தெரியும்
நான் செய்த
செயல்
தவறானது என்று
எனக்கு சிறிதளவு
சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்
என் மேல் எனக்கே
சந்தேகம் ஏற்பட்டிருந்தாலும்
என்னால்
பரசுராமரை மட்டுமல்ல
யாரையும்
எதிர்க்க முடியாது
எதிர்த்து போர்
புரியவே முடியாது
நான் பரசுராமருடன்
போரிட வந்தே
இருக்க மட்டேன்
நான் பரசுராமரை
எதிர்த்துப்
போரிட
போர்க்களத்திற்கு
வந்து இருக்கிறேன்
என்றால்
நான் செய்த
செயல்
சரியானது என்ற
காரணத்திற்காகத்
தான்
--------ஜபம்
இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------01-05-2022
-------செவ்வாய்க்
கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment