ஜபம்-பதிவு-746
(சாவேயில்லாத
சிகண்டி-80)
மற்றவர்கள்
எந்த நிலையில்
இருக்கிறார்கள்
எந்த கஷ்டத்தில்
இருக்கிறார்கள்
எந்த துன்பத்தில்
இருக்கிறார்கள்
எந்த பிரச்சினையில்
இருக்கிறார்கள்
என்பதை நாம்
நினைப்பதேயில்லை
இதனால் நமக்கு
உதவி
செய்யாதவர்களை
பகைவர்களாக
கருத ஆரம்பித்து
விடுகிறோம்
அவரை பழிவாங்க
முடிவு எடுத்து
விடுகிறோம்
அம்பை தன்னுடைய
கஷ்டம் தீருவதற்கு
என்னை திருமணம்
செய்யச் சொன்னாள்
என்னுடைய
கஷ்டத்தைப்
புரிந்து கொள்ளாமல்
வற்புறுத்தினாள்
என்னுடைய
கஷ்டத்தை அம்பை
புரிந்து
கொள்ளவில்லை
அவளுடைய
கஷ்டத்தைத் தான்
பெரியதாக
நினைத்தாள்
அவளுடைய
கஷ்டத்தை நான்
தீர்க்கவில்லை என்ற
நிலை வந்த போது
என்னை
பகைவனாகக்
கருதினாள்
என்னை
கொல்ல வேண்டும்
என்று முடிவு
எடுத்து விட்டாள்
இந்த உலகம்
இப்படித் தான்
தன்னுடைய
கஷ்டத்தைத் தான்
பார்க்கும்
மற்றவர்களுடைய
கஷ்டத்தைப்
பார்க்கவே பார்க்காது
தன்னுடைய கஷ்டத்தை
மட்டுமே பார்த்த
அம்பை
என்னுடைய
கஷ்டத்தை
பார்ககவில்லை
அம்பையின்
கஷ்டத்தைப் பார்த்த
பரசுராமர்
என்னுடைய
கஷ்டத்தைப்
பார்க்கவில்லை
கங்காதேவி :
பெண் என்பதால்
இரக்கப்பட்டிருப்பார்
பீஷ்மர் :
கஷ்டம் என்பது
அனைவருக்கும்
பொதுவானது தானே
கஷ்டத்திற்கு
ஆண் பெண் என்ற
வேறுபாடு எல்லாம்
கிடையாதே
அம்பையின்
கஷ்டத்தைப் பார்த்த
பரசுராமர்
நியாயம் யார்
பக்கம் இருக்கிறது
என்பதை
யோசிக்கத்
தவறி விட்டார்
அதனால்
என்னை எதிரியாக
நினைத்து விட்டார்
என்னுடன் போரிடத்
தயாராகி விட்டார்
என்னை போருக்கு
அழைத்து விட்டார்
அதனால் அவரை
எதிர்த்து போர்
புரிவதற்கு
வந்திருக்கிறேன்
கங்காதேவி :
குருவை
எதிர்த்து போர்
புரிவது தவறானது
பீஷ்மா
போரை நிறுத்து
பீஷ்மர் :
என்னால்
போரை நிறுத்த
முடியாது
நான் போரை
நிறுத்தினால்
பீஷ்மன் தோல்வி
அடைந்து விட்டான்
என்று
இந்த உலகம்
என்னை பழிக்கும்
நான்
போர்க்களத்திற்கு
வந்து விட்டேன்
போர்க்களத்தை
விட்டு போக
மாட்டேன்
நான் தோற்று
போர்க்களத்தில்
மடிய வேண்டும்
அல்லது
வெற்றி பெற்று
இந்த போர்க்களத்தை
விட்டு வெளியே
செல்ல வேண்டும்
இரண்டில் ஒன்று
தான் நடக்கும்
பரசுராமருக்குத் தான்
போரை நிறுத்தும்
அதிகாரம் இருக்கிறது
ஏனென்றால் போரை
ஆரம்பித்ததே அவர் தான்
போரை ஆரம்பித்த
பரசுராமர் தான்
போரை நிறுத்த
வேண்டும்
பரசுராமர் போரை
நிறுத்தினால் மட்டுமே
போரானது வெற்றி
தோல்வியின்றி முடியும்
பரசுராமரை போரை
நிறுத்தச் சொல்லுங்கள்
என்னால் போரை
நிறுத்த முடியாது
(என்று பீஷ்மர்
சொல்லி விட்ட
காரணத்தினால்
கங்காதேவி
பரசுராமரை சந்திக்க
சென்றாள்)
--------ஜபம்
இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------01-05-2022
-------செவ்வாய்க்
கிழமை
No comments:
Post a Comment