ஜபம்-பதிவு-509
(அறிய
வேண்டியவை-17)
(என்று
சாபம் கொடுத்து
விட்டு
ஊர்வசி அந்த
அறையை
விட்டு
வெளியேறினாள்
; - இந்த
நிகழ்வை
அர்ஜுனன்
சித்திர
சேனன் மூலம்
தன்னுடைய
தந்தையான
இந்திரனிடம்
சொன்னான் ;
விஷயத்தைக்
கேள்விபட்ட
இந்திரன்
அர்ஜுனனை
நேரில்
காண்பதற்காக
வந்தான் ;)
இந்திரன்
:
விஷயத்தைக்
கேள்விபட்டேன்
நடந்த
விஷயங்களுக்காக
வருந்துகிறேன்
- நீ
ஊர்வசியை
பார்க்கும்
பார்வையை
தவறாக
புரிந்து
கொண்டு விட்டேன் ;
நீ
அவள் மேல்
ஆசை
வைத்திருக்கிறாய்
அவளுடன்
இணைவதற்கு
விரும்புகிறாய்
என்று
நினைத்து
விட்டேன் ;
அதனால்
உன்னுடைய
ஆசையை
நினைவேற்ற
வேண்டும்
என்ற எண்ணம்
கொண்டு
ஊர்வசியை
நான்
தான்
உன்னிடம்
அனுப்பினேன் ;
நடந்து
விட்ட
பெருந்தவறை
நினைத்து
என்னுடைய
மனது
வருந்துகிறது
;”
அர்ஜுனன்
:
“தந்தையே
நான்
ஊர்வசியை
என்னுடைய
குலம்
தழைக்க காரணமாக
இருந்தவராகத்
தான்
பார்த்தேன்
- என்னுடைய
தாயாக
நினைத்துத்
தான்
பார்த்தேன்
எந்தவிதமான
தவறான
எண்ணத்துடன்
நான்
பார்க்கவில்லை ;”
இந்திரன்
:
“உன்னுடைய
எண்ணங்கள்
எனக்கு
புரிகிறது அர்ஜுனா
ஆனால்
ஒருவர்
கொடுத்த
சாபத்தை
நீக்க
முடியாது ;
ஒருவர்
கொடுத்த சாபத்தை
நடக்க
விடாமல்
தடுக்க
முடியாது ;
ஆனால்
கொடுத்த சாபத்தை
மாற்றி
அமைக்க முடியும் ;
நானும்
அதைத் தான்
செய்யப்போகிறேன்
;
ஊர்வசி
கொடுத்த
சாபத்தை
மாற்றி
அமைக்கப்
போகிறேன் ;
வருங்காலத்தில்
நீ
தலைமறைவாக
வாழக்கூடிய
சூழ்நிலை
உனக்கு
ஏற்படும் போது
நீ
ஆணிலிருந்து
பெண்ணாக
திருநங்கையாக
மாறுவாய் ;
அந்த
சமயத்தில்
உன்னுடைய
உருவம்
மறைந்திருக்கும்
;
அப்போது
அர்ஜுனன்
என்பவன்
மறைந்து
திருநங்கை
என்ற தன்மை
மட்டுமே
இருக்கும் ;
அந்த
சமயத்தில்
நீ
எடுக்கப் போகும்
திருநங்கை
உருவமே
உன்னைக்
காப்பாற்றும் ;
அர்ஜுனனுடைய
வீரம்
காப்பாற்றாது ;”
“மற்ற
நேரங்களில்
திருநங்கை
என்ற
தன்மை
உனக்குள்
மறைந்திருக்கும்”
(என்று
இந்திரன்
சாபத்தை
மாற்றி
அமைத்தார்
இந்திரன்
சொன்னது
போலவே
பாண்டவர்கள்
அஞ்ஞாத
வாசம்
மேற்கொண்டு
மறைவாக
வாழக்கூடிய
நிலை
ஏற்பட்டபோது
அர்ஜுனனுடைய
வீரம்
பயன்படவில்லை
;
அர்ஜுனனுடைய
தனுசு
பயன்படவில்லை
;
அவனைக்
காப்பாற்றியது
திருநங்கை
உருவம்
மட்டுமே ;
திருநங்கை
என்ற
உருவமே
அர்ஜுனனைக்
காப்பாற்றியது
;)
“ஒருவருடைய
கர்மவினையில்
உள்ள
புண்ணிய
பதிவுகளை
அனுபவிக்க
வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும்
சாபம்
நல்லவவை
நடக்க
வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும்
சாபம்”
“இந்த
கதையிலிருந்து
நாம்
அறிந்து கொள்ள
வேண்டிய
உண்மை
என்னவென்றால்
ஒருவருடைய
கர்ம
வினைகளுக்கேற்ப
புண்ணிய
பதிவுகளை
அனுபவிக்க
வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும்
சாபம்
நல்லவை
நடக்க
வேண்டும்
என்பதற்காக
கொடுக்கப்படும்
சாபம்
என்பது
ஆகும் “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
07-06-2020
//////////////////////////////////////////