ஜபம்-பதிவு-508
(அறிய
வேண்டியவை-16)
“உண்மை
இப்படி
இருக்கும்
போது
தாங்கள்
என்னை
தாய்
என்று
அழைத்தது
தவறு ;
உங்கள்
மேல்
விருப்பம்
கொண்டு
உங்களுடன்
இணைய
வந்தவள்
நான் ;
உங்கள்
மேல்
அளவற்ற
காதல் கொண்டு
இணைய
வந்தவள் நான் ;
உங்களுக்காக
என்னை
அர்ப்பணிக்க
வந்தவள் நான் ;
என்னை
தாய் என்றும்
தங்களை
மகன் என்றும்
சொல்வது
தவறு ;
நான்
சொன்ன உண்மைகளை
புரிந்து
கொண்டு
என்னுடன்
இணைந்து
என்னுடைய
ஆசையை
பூர்த்தி
செய்யுங்கள்;”
அர்ஜுனன்
;
“உங்களை
என்னுடைய
தாயாக
நினைத்திருக்கிறேன் ;
தாயான
உங்களை
என்னுடைய
இதய
சிம்மாசனத்தில்
அமர
வைத்திருக்கிறேன்
;
உங்களை
நினைக்கும்
போதும்
; உங்களைப்
பார்க்கும்
போதும் ;
நீங்கள்
எனக்கு தாயாகத்
தான்
தெரிகிறீர்கள் ;
தாயாக
இருக்கும்
உங்களை
எப்படி நான்
தவறான
எண்ணத்துடன்
பார்க்க
முடியும் ;”
“தாயான
நீங்கள் என்னை
உங்களுடைய
மகனாக
ஏற்றுக்
கொள்ளுங்கள் “
“நான்
இல்லாவிட்டாலும்
நீங்கள்
சந்தோஷமாகத்
தான்
இருப்பீர்கள் ;
உங்களுடைய
ஆசைகளை
உங்களுடைய
தேவைகளை
உங்களுடைய
விருப்பங்களை
நிறைவேற்றுவதற்கு
உங்கள்
மேல்
விருப்பம்
கொண்டவர்கள்
இந்த
உலகத்தில்
உங்களைச்
சுற்றி இருக்கத்
தானே
செய்கிறார்கள் “
“ஆதலால்
நான்
இல்லாவிட்டாலும்
நீங்கள்
சந்தோஷமாகத்
தான்
இருப்பீர்கள் “
ஊர்வசி
:
“இன்னொரு
முறை
சொல்லுங்கள்
“
அர்ஜுனன்
:
“நான்
இல்லாவிட்டால்
நீங்கள்
சந்தோஷமாகத்
தான்
இருப்பீர்கள் “
ஊர்வசி
:
“மற்றொரு
முறை
சொல்லுங்கள்
“
அர்ஜுனன் :
“நான்
இல்லாவிட்டால்
நீங்கள்
சந்தோஷமாகத்
தான்
இருப்பீர்கள் “
ஊர்வசி
:
“நான்
இல்லாவிட்டால்
நீங்கள்
சந்தோஷமாகத்
தான்
இருப்பீர்கள்
என்ற
வார்த்தை
தவறான
வார்த்தை ;
முட்டாள்கள்
பயன்படுத்தும்
வார்த்தை ;
அறிவற்றவர்கள்
பயன்படுத்தும்
வார்த்தை ;
தன்னை
அதிமேதாவிகள்
நினைத்துக்
கொள்பவர்கள்
பயன்படுத்தும்
வார்த்தை ;
வாழ்க்கையை
சரியாக
புரிந்து
கொள்ளாதவர்கள்
பயன்படுத்தும்
வார்த்தை ;”
“இந்த
உலகத்தில்
யாரும்
தனிமையில்
சந்தோஷமாக
இருக்க
முடியாது
; நம்மைச் சுற்றி
ஆயிரம்
பேர்கள்
இருந்தாலும்
; நமக்கு
நன்மை
செய்யக்கூடியவர்கள்
ஆயிரம்
பேர்கள் இருந்தாலும் ;
நமக்கு
உதவி
செய்யக்கூடியவர்கள்
ஆயிரம்
பேர்கள் இருந்தாலும் ;
நாம்
விருப்பப்படுபவர்
நம்முடன்
இருந்தால்
மட்டுமே
நாம் சந்தோஷமாக
இருக்க
முடியும் ;”
“நான்
உங்களை
விரும்புகிறேன்
;
காதலில்
தவிக்கிறேன் ;
என்னுடைய
ஆசையை
புரிந்து
கொண்டு
என்னுடைய
தேவையை
நிறைவு
செய்வதற்காக
என்னுடன்
இணைய நீங்கள்
ஒப்புக்
கொள்கிறீர்களா ?
இல்லையா
?
கடைசியாக
ஒரு முறை
உங்களை
நான் கேட்கிறேன்”
அர்ஜுனன்
:
“நீங்கள்
முதலில்
கேட்டாலும் ;
கடைசியாக
கேட்டாலும் ;
எப்போது
கேட்டாலும் ;
என்
முடிவு ஒன்று தான்
நீங்கள்
எனக்கு தாய் ;
நான்
உங்கள் மகன் ;”
(கோபத்தின்
உச்சத்தில்
இருந்தாள்
ஊர்வசி)
“நான்
என்ற ஆணவம்
கொண்டு
இருக்கிறீர்கள் ;
உலகத்திலேயே
சிறந்த
வீரன்
என்ற
எண்ணத்தில்
இருக்கிறீர்கள் ;
யாராலும்
உங்களை
வீழ்த்த
முடியாது
என்ற
எண்ணம்
கொண்டு
இருக்கிறீர்கள் ;
இந்த
எண்ணம் உங்களை
உண்மை
எது என்று
யோசிக்க
விடாமல் உங்கள்
அறிவை
மறைக்கிறது ;”
“நான்
என்ற வார்த்தையில்
மறைந்திருக்கும்
அர்ஜுனன்
என்ற பெயர்
தானே
உங்களுக்கு
ஆணவத்தை
உண்டாக்குகிறது ;
அர்ஜுனன்
என்ற
உருவத்தை
உடைத்து
உங்களுடைய
ஆணவத்தை
அடக்குகிறேன்
;
இனி
நான் என்ற
எண்ணம்
உங்களுக்கு
ஏற்படாமல்
செய்கிறேன்;
நான்
என்ற அகம்பாவத்தில்
தானே
என்னை
உதாசீனப்படுத்தினீர்கள்
;
இனி
அந்த நானாகிய
அர்ஜுனன்
இருக்க மாட்டான் ;
இருக்க
முடியாது;
இருக்க
விட மாட்டேன்;
ஆண்தன்மை
திரிந்து
பெண்ணாக
மாறி
அணும்
பெண்ணும்
கலந்த
கலவையான
திருநங்கையாக
மாற
வேண்டும்
என்று
உங்களை
சபிக்கிறேன்;
நீங்கள்
ஆணிலிருந்து
பெண்ணாக
திருநங்கையாக
மாறுவீர்கள்
இது
தான்
என்னுடைய சாபம்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
07-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment