June 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-15


               ஜபம்-பதிவு-507
         (அறிய வேண்டியவை-15)

ஊர்வசி :
“என்னை அன்பே
என்று அழையுங்கள் ;
ஆரூயிரே என்று
அழையுங்கள் ;
மோகத்தின் முழுநிலவே
என்று அழையுங்கள்;
இன்பத்தை அளிக்க
வந்த தாரகையே
என்று அழையுங்கள்;
தாய் என்ற
வார்த்தையால்
மட்டும் என்னை
அழைக்காதீர்கள்;”

“ஏற்கனவே உங்களுடைய
அழகால் கவரப்பட்டு
மதி மயங்கிய நான்
தங்களுடைய
பிதாவான இந்திரனின்
கட்டளைக்கிணங்க
உங்களுடன் கலந்து
உறவாட வந்தேன் ;
இன்பத்தை இருவரும்
பகிர்ந்து கொண்டு
களிக்கலாம்
என்று வந்தேன் ;
காமக்கடலில்
மூழ்கி முத்து
எடுக்கலாம்
என்று வந்தேன் ;
உங்களுடைய
ஆசைகளுக்கு உருவம்
கொடுக்கலாம்
என்று வந்தேன் ;
கண்ணால் காண
முடியாத சுகங்களையும்
உணர்வுகளால்
நீங்கள் உணர்ந்து
கொள்வதற்காக
சுகங்களை அள்ளி
வாரி வழங்கலாம்
என்று வந்தேன் ;
உங்களை என்னுடைய
கதாநாயகனாக
என்னுடைய மனதில்
உருவகித்து
வைத்து விட்டேன் ;
நான் என்னுடைய
மனக்கோட்டையில் கட்டி
வைத்துள்ள காதல்
சாம்ராஜ்யத்தில் காதல்
நாயகனாக உங்களை
வைத்திருக்கிறேன் ;
என்னுடைய காதல்
சாம்ராஜ்யத்தை தகர்த்து
காதல் கோட்டைடைய
அழித்து விடாதீர்கள் ;
என்னை கட்டி அணைத்து
தழுவுவீர்களாக ;
இன்பத்தின் வாயில்களைத்
திறந்து சொர்க்கத்தின்
சுகங்களை அனுபவிப்போம்;
வாருங்கள்
வார்த்தையில் இருக்கும்
மகிழ்ச்சியை உருவமாக
உணர்வுகளாக
பார்ப்போம் வாருங்கள் ;”

அர்ஜுனன் :
“தாயே ! நீங்கள் என்
மூதாதையரில்
ஒருவராகிய
புரூரவனுடன்
இணைந்து ஆயு
என்ற மகனைப் பெற்று
எடுத்து இருக்கிறீர்கள் ;
ஆதலால் நீங்கள்
என் குலத்துக்கே
தாயாகத் திகழ்பவர் ;
தாயாக வாழ்பவர் ;
தாயாக வாழ்ந்தவராக
நீங்கள் இருக்கின்ற
காரணத்தினால்
குந்தி தேவியும்
இந்திராணியும்
நீங்களும் எனக்கு தாயைப்
போன்றவர்கள் தான் ;
நீங்கள் தாய் என்றால்
நான் உங்கள் மகன் ;
ஆகவே நீங்கள்
என்னை மகனாக
ஏற்றுக் கொள்ளுங்கள் ;
நான் உங்கள் மகன் ;
நீங்கள் எனக்கு தாய் ;”

ஊர்வசி :
“அர்ஜுனரே ! என்னை
என்ன கண்டவரையும்
கண்டு மதி மயங்கும்
பெண் என்று
நினைத்து விட்டீர்களா ?
கண்டவர் பின்
செல்லும் மதியற்றவள்
என்று நினைத்து
விட்டீர்களா ?
காமவெறி கொண்டு
ஆசைப்பட்டவர்களுடன்
இணையும் அறிவற்றவன்
என்று நினைத்து
விட்டீர்களா ?
நான் உங்களுக்கு
தாயும் இல்லை ;
நீங்கள் எனக்கு
மகனும் இல்லை ; “

“சில நியதிகளை
புரிந்து கொள்ளாமல்
பேசுகிறீர்கள்
உண்மைகளை
உணர்ந்திருந்தால்
நீங்கள் இவ்வாறு
என்னை அன்னை
என்றும் உங்களை
மகன் என்றும் பேசி
இருக்க மாட்டீர்கள் “

“நான் பொது மகள்
பொதுமகள் என்ற
வார்த்தைக்கு அர்த்தம்
தெரியுமா உங்களுக்கு ?
பொதுமகளுக்கும்
விலைமகளுக்கும்
வேறுபாடு தெரியுமா
உங்களுக்கு ; “

“விலைமகள் என்றால்
தன்னுடைய
வாழ்க்கையையும்
தன்னைச்
சார்ந்தவர்களுடைய
வாழ்க்கையையும்
காப்பாற்றுவதற்காக
தேவைப்படும்
செல்வத்தைப்
பெறுவதற்காக தன்மேல்
விருப்பப்படுபவர்களுடன்
இணைந்தால்
அவர்களுக்கு பெயர்
விலைமகள்
அவர்கள் செல்வத்தைப்
பெறுவதற்காக
இவ்வாறு செய்வார்கள் “

“ஆனால் நான் பொதுமகள்
பொது மகளாக
கருதப்படும் எங்களிடம்
அனைத்து
செல்வங்களும் இருக்கும்;
எங்கள் வாழ்க்கையை
நடத்துவதற்கும்
எங்களைச் சார்ந்தவர்களுடைய
வாழ்க்கையை
காப்பாற்றுவதற்காகவும் ;
செல்வத்தைப்
பெறுவதற்காக
நாங்கள் எங்கள் மேல்
விருப்பப்படுபவருடன்
இணைய வேண்டிய
அவசியம் இல்லை ;
ஏனென்றால் எங்களிடம்
அனைத்து செல்வங்களும்
இருக்கும் ;“

“புண்ணியம் செய்தவர்கள்
மட்டுமே பொது மகள்
என்று சொல்லப்படும்
எங்களுடன்
இணைய முடியும்
மற்றவர்கள் யாரும்
எங்களுடன்
இணைய முடியாது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment