July 24, 2019

பரம்பொருள்-பதிவு-47


                  பரம்பொருள்-பதிவு-47

மக்கள் :
“ஒரு சாரர் என்று
நீங்கள் யாரை
குறிப்பிடுகிறீர்கள்?”

திருஞான சம்பந்தர் :
“அண்ட சராரசரங்கள்
அனைத்தையும் இயக்கி
காப்பாற்றி வழி
நடத்திக் கொண்டிருக்கும்
இறைவனுடைய
அற்புதமான சக்தியை
புரிந்து கொள்ள
முடியாத நிலையில்
இருப்பவர்களும்;
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
உண்மை என்றால் என்ன
என்று உணராமல்
இருப்பவர்களும் ;
இறைவன் நம்முடைய
உடலில் சிரசில் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ,
இறைவனை
அடையக்கூடிய வழி
எது என்பதையும் ,
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது
எது என்பதையும் ,
உணராமல் இருப்பவர்களும் ;
இறந்தவரை எழுப்புவது
என்பது மிகப்பெரிய செயல் ;
அந்த செயலைச் செய்பவர்
மிகப்பெரியவர் ;
அந்த செயலைத் தான்
மிகப் பெரிய அற்புதம் ;
என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் “

மக்கள் :
“அப்படி என்றால்
இறந்தவரை எழுப்புவது
என்பது தேவையற்ற
செயல் என்ற கருத்தைக்
கொண்டிருப்பவர்கள் யார்
என்று நீங்கள் நினைக்கிறீர்கள்”

திருஞான சம்பந்தர் :
“நமது உடலில் சிரசில்
கடவுள் எந்த இடத்தில்
இருக்கிறார் என்பதை
அறிந்து ;
அவரை அடையக்கூடிய
வழி எது என்பதை
அறிந்து ;
அவரை அடையப்
பயன்படுத்தக் கூடியது
எது என்பதை அறிந்து ;
அதனைப் பயன்படுத்தி
எல்லாம் வல்ல
இறைவனுடன் இரண்டறக்
கலந்து எல்லாம் வல்ல
பரம்பொருளே இந்த
உலகம் அனைத்தையும்
இயக்கி காப்பாற்றி வழி
நடத்திக் கொண்டு
இருக்கிறது என்று
பரம்பொருளை உணர்ந்தவர்கள்
இறந்தவரை எழுப்பும் செயல் ;
தேவையற்ற செயல் என்பதை
உணர்ந்து இருக்கிறார்கள் ; “

“ சுருக்கமாகச்
சொல்லப்போனால்
உண்மை என்றால் என்ன
என்பதை உணர்ந்தவர்கள்
இறந்தவரை எழுப்புவது
தேவையில்லாத
செயல் என்பதை
உணர்ந்திருக்கிறார்கள் “

மக்கள் :
“உங்களுக்கு தமிழ்
வார்த்தைகளை வைத்து
விளையாடத் தெரியும் ;
என்பது இங்குள்ள
அனைவருக்கும் தெரியும் ;  
உங்களிடம் இருக்கும் 
அந்த தமிழை வைத்து
வார்த்தைகளால் விளையாடி
எங்களிடமிருந்து
தப்பிக்க பார்க்கிறீர்கள் ; “

திருஞான சம்பந்தர் :
“ தப்பிக்க வேண்டிய
அவசியம் எனக்கு
எப்போதுமே ஏற்பட்டதில்லை
நான் உண்மையைச்
சொன்னேன் உங்களுக்கு
புரியவில்லை !”

“உங்களுக்கு புரியவைக்க
வேண்டும் என்று
எவ்வளவோ முயற்சி
செய்தேன் முடியவில்லை!”

“நான் என்ன செய்ய
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்கள்”

மக்கள் :
“இறந்த பூம்பாவைக்கு
உயிர் கொடுத்து இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்ப வேண்டும் - நீங்கள்
இந்த அற்புதத்தை
செய்தால் மட்டுமே
நீங்கள் இறைவனுடைய
அடியவர் என்பதையும் ;
இறைவனின் அருள்
பெற்றவர் என்பதையும்
நாங்கள் ஏற்றுக்
கொள்வோம் “

திருஞான சம்பந்தர் :
“செய்யாவிட்டால்”

மக்கள் :
“ஏற்றுக் கொள்ள மாட்டோம்”

திருஞான சம்பந்தர் :
“அற்புதம் செய்தால்
மட்டும் தான் - நான்
இறைவனின் அருள்
பெற்றவன் என்பதையும்;
நான் வணங்கும்
இறைவன் சக்தி
நிறைந்தவர் என்பதையும்
ஏற்றுக் கொள்வீர்களா ?”

“நான் பேசும் வார்த்தைகள்
இறைவனின் வார்த்தைகள்
என்பதையும்;
என் மூலமாக இறைவன்
வெளிப்படுத்தும் வார்த்தைகள்
என்பதையும் ; நீங்கள்
அறியவில்லையா?”
இறைவன் என் மூலமாக
எந்த ஒன்றை வெளிப்படுத்த
நினைக்கின்றானோ - அந்த
ஒன்றை என் மூலமாக
வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறான் என்பதை
நீங்கள் உணரவில்லையா?”

மக்கள் :
“இதை எல்லாம்
உணரக்கூடிய சக்தி
எங்களுக்கு இல்லை;
நீங்கள் இறந்த
பூம்பாவையை உயிரோடு
எழுப்பி அற்புதம்
செய்தால் மட்டுமே
நீங்கள் வணங்கும்
இறைவன் உண்மையான
இறைவன் என்பதையும்;
தாங்கள் இறைவனின்
அருள் பெற்றவர்
என்பதையும் ;நாங்கள்
ஒப்புக் கொள்வோம் ;”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 24-07-2019
//////////////////////////////////////////////////////////