May 01, 2020

பரம்பொருள்-பதிவு-222


               ஜபம்-பதிவு-470
             (பரம்பொருள்-222)

பீமன்:
“மோட்சம் அடையும்
நேரம் அரவானுக்கு
நெருங்கி விட்டது
என்று சொல்கிறீர்களே
ஏன் எங்களுக்கு
மோட்சம் அடையும்
நேரம் நெருங்கவில்லையா?”

கிருஷ்ணன்:
“பீமா! நீ மோட்சம்
அடையக்கூடிய
நேரத்தை
நெருங்கி
இருப்பாயானால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்றதற்கு
நீ தான் காரணம்
என்று பேசி
இருக்க மாட்டாய் “

“குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
நான் தான்
காரணம் என்று
ஒவ்வொருவரும்
தனித்தனியாக
பேசிக் கொண்டு
உங்களுக்குள்
ஒருவருக்கொருவர்
விவாதித்து
இருந்திருக்க மாட்டீர்கள்”

“இதிலிருந்து
தெரியவில்லையா
நீங்கள் அனைவரும்
மோட்ச நிலையை
அடைவதற்கு
இன்னும் தகுதி
பெறவில்லை என்று”

தர்மர் :
“அப்படி என்றால்
நீங்கள் சொல்லும்
தகுதி எங்களுக்கு
எப்போது வரும் ;
நாங்கள் எப்போது
மோட்சம் அடைவோம்;
எங்களுக்கு மோட்சம்
எப்போது கிடைக்கும் ;
எங்களுக்கு இப்போது
மோட்சம்
கிடைக்காததற்கு
இது தான் காரணமா ?”

கிருஷ்ணன் :
“உங்களுக்கென்று
ஒப்படைக்கப்பட்ட
கடமைகள் இன்னும்
முடிவடையவில்லை “

“நீங்கள் பிறப்பு
எடுத்ததற்கான
கடமைகளை இன்னும்
நீங்கள் நிறைவேற்றி
முடிக்கவில்லை;
இது மட்டும் தான்
காரணம் என்று
சொல்லிவிட முடியாது;
இருந்தாலும் இதுவும்
ஒரு காரணம் தான்”

தர்மர்:
“எங்களுடைய
கடமைகளை
முடித்து விட்ட பிறகு
மோட்ச நிலைக்கு
நாங்கள் தகுதி
பெற்று விடுவோமா?”

கிருஷ்ணன் :
“நாளை
நடக்கப்போவதை
இன்றே
தெரிந்து கொள்ள
ஏன் ஆசைப்படுகிறாய்
தர்மா”

“நாளை
நடக்கப் போவது
என்ன என்பதை
தெரிந்து கொள்ள
ஆசைப்படாதே
சில விஷயங்களை
தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது”

“எது எப்போது எங்கே
என்ன நடக்க
வேண்டுமோ
அது அப்போது
அங்கே நடக்கும்
நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய
காலத்தில் நடக்கும்
அது யார்
தடுத்தாலும் நிற்காது
யாருக்காகவும் நிற்காது”

“அதனால் அது
நடக்கும் வரை
காத்திருங்கள்
இப்போது நீங்கள்
செல்லுங்கள்”

“நான் அரவானிடம்
கடைசியாக மனம்
விட்டு பேச
வேண்டியதிருக்கிறது”

“எங்கள் இருவருக்கும்
தனிமை
அவசியமாகிறது”

(என்று பஞ்ச
பாண்டவர்களை
நோக்கி கிருஷ்ணன்
சொன்னவுடன்
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
எதுவும் சொல்லாமல்
அமைதியாக
கிருஷ்ணனிடம்
விடை பெற்றுக் கொண்டு
சென்று விட்டனர்
கிருஷ்ணன்
அரவானை நோக்கி
பேசத் தொடங்கினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-221


                ஜபம்-பதிவு-469
              (பரம்பொருள்-221)

“பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்களும்
இந்த உண்மையை
தெரிந்து கொள்ளவில்லை”

“பஞ்ச பாண்டவர்களாகிய
நீங்கள் ஐவரும்
உண்மை எது என்று
தெரிந்து கொண்டு
இருந்தீர்கள் என்றால்
வெற்றிக்கு யார் காரணம்
என்று விவாதித்து
இருக்க மாட்டீர்கள்”

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
அரவான் தான்
முழுக்காரணம் என்பதை
உணர்ந்து இருப்பீர்கள்”  

“பஞ்ச பாண்டவர்கள்
அடைய வேண்டிய
தோல்வியிலிருந்து
அனைவரையும்
காப்பாற்றி
வெற்றியைத் தேடித்
தந்தவன் அரவான் “

“பஞ்ச பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியாகவில்லை
என்றால்
பஞ்ச பாண்டவர்களால்
குருஷேத்திரப்
போரில் வெற்றி
பெற்றிருக்கவே முடியாது”

“குருஷேத்திரப் போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
முழுக்காரணமும்
அரவான் மட்டுமே;
அரவான் செய்த
தியாகம் மட்டுமே ;
அரவானின்
களப்பலி மட்டுமே ;”

“குருஷேத்திரப் போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
அரவானின் களப்பலி
மட்டும் தான்
காரணமே தவிர
வேறு எந்த ஒரு
காரணமும் கிடையாது”

“குருஷேத்திரப் போரின்
வெற்றிக்கு
முழுக்காரணமாக
அரவான் இருந்தும் கூட
தன்னால் தான்
குருஷேத்திரப் போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றார்கள்
என்று அரவான்
சொல்லவில்லை ;
அனைத்திற்கும் காரணம்
கடவுளான கிருஷ்ணன்
தான் என்று என்னை
சுட்டிக் காட்டுகிறான்”

“வெற்றியை தனதாக்கிக்
கொள்ளும் மனிதர்கள்
வாழும் இந்த உலகத்தில்
குருஷேத்திரப் போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
முழுக்காரணமும்
தான் தான்
என்று தெரிந்திருந்தும்
அந்த வெற்றியை
தனதாக்கிக் கொள்ளாமல்
கடவுளால் நிகழ்ந்தது
என்று கிருஷ்ணனாகிய
என்னைப் பார்த்து
சொல்கிறான்”

“நிர்ணயிக்கப்பட்டு நடக்கும்
எந்த ஒரு செயலின்
வெற்றி தோல்விக்கும்
கடவுள் தான் காரணம்
என்பதை உணர்ந்து
கொள்பவர்களால்
மட்டுமே தன்னால்
எதுவும் நடக்கவில்லை
அனைத்தும்
கடவுளால் நடந்தது
என்பதை உணர்ந்து
சொல்ல முடியும்”

“அத்தகையவர்களால்
மட்டுமே
நடை பெற்றது ;
நடை பெற்றுக்
கொண்டிருப்பது ;
நடைபெறப்போவது ;
அனைத்தும் கடவுளால்
நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்து
சொல்ல முடியும் “

“அத்தகையவர்களால்
மட்டுமே
இந்த உலகத்தில்
நடக்கும் அனைத்து
செயல்களுக்கும்
கடவுள் தான் காரணம்
என்பதை உணர்ந்து
சொல்ல முடியும்”

“இந்த உலகத்தில் உள்ள
அனைத்து செயல்களுக்கும்
கடவுள் தான் காரணம்
என்பதை உணர்ந்து
சொல்ல வேண்டுமென்றால்
ஆன்மீகத்தின் முக்கிமான
மூன்று நிலைகளான
ஞானம்; சமாதி; மோட்சம்;
என்ற வரிசையில்
ஞானத்தை உணர்ந்து ;
சமாதியை சுவைத்து ;
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்காகக் காத்துக்
கொண்டிருப்பவர்களால்
மட்டுமே சொல்ல முடியும்”

“அரவான் ஆன்மீக
வரிசையில்
ஞானத்தை உணர்ந்து ;
சமாதியை சுவைத்து ;
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்காகக் காத்துக்
கொண்டிருக்கிறான் “

“அரவான் மோட்சம்
அடையும் நிலையை
அடைந்து விட்டான்”

“அரவானுக்கு மோட்சம்
வழங்கும் நேரம்
நெருங்கி விட்டது
அரவானுக்கு
நான் மோட்சம்
வழங்க வேண்டும் “

“ஆகவே நீங்கள்
அனைவரும் இங்கிருந்து
சென்று அடுத்து
என்ன செயல்களை
செயல்படுத்த வேண்டுமோ
அதை செயல்படுத்துங்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-220


                ஜபம்-பதிவு-468
               (பரம்பொருள்-220)

பீமன்:
(கோபத்துடன்
பேசத் தொடங்கினான்)

“குருஷேத்திரப் போரில்
அதிக அளவில்
வீரர்களைக் கொன்றதும்
நான் தான் ;
மாவீரர்களைக் கொன்றதும்
நான் தான் ;
ஏன் துரியோதனனைக்
கொன்றதும்
நான் தான் ;
குருஷேத்திரப் போரில்
நான் ஆற்றிய பணி
மிக முக்கியமான பணி
என்பதை இந்த
உலகமே அறிந்து
வைத்திருக்கிறது “

“இந்த விஷயத்தை
நீ அறிந்து
வைத்திருக்கவில்லையா ? “

“குருஷேத்திரப் போரில்
வீரமாகப் போரிட்டது
நான் தான் என்பதும் ;
பல பேர்களைக்
கொன்றது
நான் தான் என்பதும் ;
வெற்றிக்கு காரணமாக
இருந்தது
நான் தான் என்பதும் ;
குருஷேத்திரப் போரில்
முக்கியமானவாக
இருந்தது
நான் தான் என்பதும் ;
உனக்குத் தெரியாதா ?
அல்லது தெரிந்தும்
தெரியாதது போல்
உண்மையை மறைத்து
விட்டு பேசுகிறாயா ?”

கிருஷ்ணன் :
“பீமா ! நீ ஏன்
அரவானிடம் கோபம்
கொள்கிறாய்
நீ அரவானிடம் கோபம்
கொள்வதால் ஒரு பயனும்
ஏற்படப் போவதில்லை”

“ஏன் அரவான் சொன்ன
உண்மையை உன்னால்
ஏற்றுக் கொள்ள
முடியவில்லை”

“நீ கோபப்படுவதால்
உண்மையை
மாற்றி விட முடியாது “

“உண்மையை மாற்றி
விட முடியும் என்று
நீ நினைக்கிறாயா ? “

“உண்மையை மாற்ற
முடியாது என்ற
உண்மையை நீ
உணர்ந்து கொள் “

பீமன் :
“பரந்தாமா நீங்கள்
என்ன சொல்ல
வருகிறீர்கள்”

கிருஷ்ணன் :
“மனிதன் தன்னுடைய
வாழ்க்கையில் எந்த
ஒரு செயலைச்
செய்தாலும்
அந்த செயல் வெற்றி
பெற்று விட்டால்
நான் தான் செய்தேன் ;
என்னுடைய திறமையால்
தான் செய்தேன் ;
என்னுடைய உழைப்பால்
தான் செய்தேன் ;
என்னுடைய அறிவால்
தான் செய்தேன் ;
யாரும் எனக்கு
உதவி செய்யவில்லை
நான் மட்டுமே
தனியாக செய்தேன்;

என்று சொல்லும்
மனிதன் ஏன்
தோல்வியடையும்
போது மட்டும்
தோல்விக்கு காரணம்
நான் தான் என்று
சொல்வதில்லை

“கடவுள் கண்
திறக்கவில்லை;
கடவுள் என்னை
காப்பாற்ற வில்லை ;
கடவுள் என்னைக்
கைவிட்டு விட்டார் ;
என்று கடவுளை
குற்றம் சாட்டுவது ஏன்?”

“வெற்றி பெற்றால்
தன்னால் தான் நடந்தது
என்று சொல்லி பெருமை
பட்டுக் கொள்ளும் மனிதன்
தோல்வியடைந்தால் மட்டும்
அதற்குக் காரணம் கடவுள்
என்று சொல்வது ஏன்?”

“வெற்றி பெற்றால்
அதற்குக் காரணம் நான்
தான் என்று
சொல்லும் மனிதன்
தோல்வியடையும் போது
மட்டும் பிறரை
சுட்டிக் காட்டுவது ஏன்?”

“இந்த உலகத்தில்
வெற்றிக்குக் காரணம்
நான் தான் என்று
வெற்றிக்கு
பொறுப்பேற்பவர்கள்
அனைவரும் ஏதேனும்
தோல்வி ஏற்பட்டால்
தோல்விக்கு நான் தான்
காரணம் என்று
பொறுப்பேற்று அதனை
ஒப்புக் கொள்வார்களா?”

“வெற்றி பெற்றதற்கு
நான் தான் காரணம்
என்று சொல்லும் நீ !
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
முக்கியக் காரணமாக
இருந்தது நான் தான்
என்று சொல்லும் நீ !
பஞ்ச பாண்டவர்கள்
தோல்வியடைந்து
இருந்தால் நீ
தான் காரணம்
என்று ஒப்புக்
கொள்வாயா ?
பஞ்ச பாண்டவர்கள்
தோல்விக்கு நான் தான்
காரணம் என்று
உன்னால்
சொல்ல முடியுமா ?
உன்னால்
சொல்ல முடியாது ? “

“ஏனென்றால்
வெற்றியையும்
தோல்வியையும் யார்
நிர்ணயிக்கிறார்கள்
எவரால்
நிர்ணயிக்கப்படுகிறது
என்ற உண்மையை
நீ இன்னும் தெரிந்து
கொள்ளவில்லை”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-219


              ஜபம்-பதிவு-467
             (பரம்பொருள்-219)

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருந்தவர் யார்
என்பதை நீ தான்
சொல்ல வேண்டும் “

“அனைவரும்
உன்னுடைய பதிலுக்காக
காத்திருக்கிறார்கள் “

“கேள்விக்கான பதில்
என்ன என்று தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவே
உன்னைத் தேடி
பஞ்ச பாண்டவர்கள்
இங்கு வந்திருக்கிறார்கள் “

“பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருந்தவர்கள் யார்
என்பதை அறிந்து
கொள்வதற்காகவே
உன்னைத் தேடி
வந்திருக்கிறார்கள் “

அரவான் :
“நீங்கள் கேட்கும்
இந்த கேள்வி
மிகவும்
சிக்கலான கேள்வி  

“நான் இந்த
கேள்விக்கு பதில்
சொல்லும் பட்சத்தில்
என்னுடைய பதிலை
ஏற்றுக் கொள்ளாமல்
சிலருக்கு 
மன உளைச்சல்
ஏற்படக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது “

“அந்த மன உளைச்சலே
கோபமாக மாறி
என் மேல் திரும்பும்
நிலையும் இருக்கிறது “

“நான் பதில்
சொல்வதால்
மற்றவர்கள் என் மீது
கோபப்படக்கூடிய
நிலை உருவாகுமே
தவிர நல்ல
விளைவுகள்
எதுவும் ஏற்படாது”

“தவறான நிகழ்வுகள்
எதுவும் நடைபெறாமல்
இருக்க வேண்டுமென்றால்
நான் பதில் சொல்லாமல்
இருந்து தான்
ஆக வேண்டும்”

“இவை எல்லாவற்றையும்
மீறி நீங்கள் கேட்கும்
கேள்விக்கு நான்
சொல்லித் தான் ஆக
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்களா?”

கிருஷ்ணன் :
“எந்தவிதமான தவறான
நிகழ்வுகளும்
நடைபெறாது அரவான்”

“உண்மையை ஏற்றுக்
கொள்ளக்கூடிய
மனப்பக்குவம் யாருக்கு
இருக்கிறதோ அவர்கள்
நீ சொல்லப் போகும்
உண்மையை
ஏற்றுக் கொள்வார்கள்”

“உண்மையை ஏற்றுக்
கொள்ளக்கூடிய
மனப்பக்குவம்
இல்லாதவர்கள் மட்டும்
தான் உன் மீது
கோபம் கொள்வார்கள் “

“உண்மையை ஏற்றுக்
கொள்ளக்கூடியவர்கள்
யாரும் உன் மேல்
கோபம் கொள்ள
மாட்டார்கள் “

“ஆகவே நீ எதைப்
பற்றியும் கவலைப்
படாமல் நடந்த
நிகழ்வில் நீ தெரிந்து
கொண்ட உண்மைகளை
அனைவரும் அறிந்து
கொள்வதற்காக
சொல்ல வேண்டும்”
 
அரவான் :
“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
யார் ஒருவர்
கைகளால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
வாளால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
ஈட்டியால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
கதாயுதத்தால் எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
வில் அம்பு
கொண்டு எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
எந்த ஒரு ஆயுதத்தைப்
பயன் படுத்தி எதிரிகளைக்
கொன்றிருந்தாலும் ;
இவைகள் அனைத்தையும்
செய்து முடித்தது
பரமாத்மா
கிருஷ்ணனின் சக்கரம் ;
மற்றும்
சிந்திய இரத்தத்தைச்
சேகரித்தது பரமாத்மா
கிருஷ்ணனின் சங்கு
ஆகிய இரண்டு மட்டுமே “

“18 நாள் நடந்த
குருஷேத்திரப் போரில்
என்னுடைய கண்ணுக்கு
தெரிந்தது பரமாத்மா
கிருஷ்ணனின் சக்கரம்
மற்றும் சங்கு ஆகிய
இரண்டு மட்டுமே”

“வேறு எந்த
ஒன்றையும் நான்
குருஷேத்திரப்
போரில் காணவில்லை “

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
பஞ்ச பாண்டவர்களின்
வெற்றிக்கு
முழுக்காரணமாக
இருந்தது
கிருஷ்ணன் மட்டுமே”

“கிருஷ்ணன்
இல்லாவிட்டால்
பஞ்ச பாண்வர்களால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்றே
இருக்க முடியாது “

“என்னுடைய
முடிவான கருத்தும்
இது தான் ;
இறுதியான கருத்தும்
இது தான் ;
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெறுவதற்கு
காரணமாக இருந்தது
பரமாத்மா
கிருஷ்ணன் மட்டுமே
பரமாத்மா
கிருஷ்ணன் மட்டுமே”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////