May 01, 2020

பரம்பொருள்-பதிவு-220


                ஜபம்-பதிவு-468
               (பரம்பொருள்-220)

பீமன்:
(கோபத்துடன்
பேசத் தொடங்கினான்)

“குருஷேத்திரப் போரில்
அதிக அளவில்
வீரர்களைக் கொன்றதும்
நான் தான் ;
மாவீரர்களைக் கொன்றதும்
நான் தான் ;
ஏன் துரியோதனனைக்
கொன்றதும்
நான் தான் ;
குருஷேத்திரப் போரில்
நான் ஆற்றிய பணி
மிக முக்கியமான பணி
என்பதை இந்த
உலகமே அறிந்து
வைத்திருக்கிறது “

“இந்த விஷயத்தை
நீ அறிந்து
வைத்திருக்கவில்லையா ? “

“குருஷேத்திரப் போரில்
வீரமாகப் போரிட்டது
நான் தான் என்பதும் ;
பல பேர்களைக்
கொன்றது
நான் தான் என்பதும் ;
வெற்றிக்கு காரணமாக
இருந்தது
நான் தான் என்பதும் ;
குருஷேத்திரப் போரில்
முக்கியமானவாக
இருந்தது
நான் தான் என்பதும் ;
உனக்குத் தெரியாதா ?
அல்லது தெரிந்தும்
தெரியாதது போல்
உண்மையை மறைத்து
விட்டு பேசுகிறாயா ?”

கிருஷ்ணன் :
“பீமா ! நீ ஏன்
அரவானிடம் கோபம்
கொள்கிறாய்
நீ அரவானிடம் கோபம்
கொள்வதால் ஒரு பயனும்
ஏற்படப் போவதில்லை”

“ஏன் அரவான் சொன்ன
உண்மையை உன்னால்
ஏற்றுக் கொள்ள
முடியவில்லை”

“நீ கோபப்படுவதால்
உண்மையை
மாற்றி விட முடியாது “

“உண்மையை மாற்றி
விட முடியும் என்று
நீ நினைக்கிறாயா ? “

“உண்மையை மாற்ற
முடியாது என்ற
உண்மையை நீ
உணர்ந்து கொள் “

பீமன் :
“பரந்தாமா நீங்கள்
என்ன சொல்ல
வருகிறீர்கள்”

கிருஷ்ணன் :
“மனிதன் தன்னுடைய
வாழ்க்கையில் எந்த
ஒரு செயலைச்
செய்தாலும்
அந்த செயல் வெற்றி
பெற்று விட்டால்
நான் தான் செய்தேன் ;
என்னுடைய திறமையால்
தான் செய்தேன் ;
என்னுடைய உழைப்பால்
தான் செய்தேன் ;
என்னுடைய அறிவால்
தான் செய்தேன் ;
யாரும் எனக்கு
உதவி செய்யவில்லை
நான் மட்டுமே
தனியாக செய்தேன்;

என்று சொல்லும்
மனிதன் ஏன்
தோல்வியடையும்
போது மட்டும்
தோல்விக்கு காரணம்
நான் தான் என்று
சொல்வதில்லை

“கடவுள் கண்
திறக்கவில்லை;
கடவுள் என்னை
காப்பாற்ற வில்லை ;
கடவுள் என்னைக்
கைவிட்டு விட்டார் ;
என்று கடவுளை
குற்றம் சாட்டுவது ஏன்?”

“வெற்றி பெற்றால்
தன்னால் தான் நடந்தது
என்று சொல்லி பெருமை
பட்டுக் கொள்ளும் மனிதன்
தோல்வியடைந்தால் மட்டும்
அதற்குக் காரணம் கடவுள்
என்று சொல்வது ஏன்?”

“வெற்றி பெற்றால்
அதற்குக் காரணம் நான்
தான் என்று
சொல்லும் மனிதன்
தோல்வியடையும் போது
மட்டும் பிறரை
சுட்டிக் காட்டுவது ஏன்?”

“இந்த உலகத்தில்
வெற்றிக்குக் காரணம்
நான் தான் என்று
வெற்றிக்கு
பொறுப்பேற்பவர்கள்
அனைவரும் ஏதேனும்
தோல்வி ஏற்பட்டால்
தோல்விக்கு நான் தான்
காரணம் என்று
பொறுப்பேற்று அதனை
ஒப்புக் கொள்வார்களா?”

“வெற்றி பெற்றதற்கு
நான் தான் காரணம்
என்று சொல்லும் நீ !
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
முக்கியக் காரணமாக
இருந்தது நான் தான்
என்று சொல்லும் நீ !
பஞ்ச பாண்டவர்கள்
தோல்வியடைந்து
இருந்தால் நீ
தான் காரணம்
என்று ஒப்புக்
கொள்வாயா ?
பஞ்ச பாண்டவர்கள்
தோல்விக்கு நான் தான்
காரணம் என்று
உன்னால்
சொல்ல முடியுமா ?
உன்னால்
சொல்ல முடியாது ? “

“ஏனென்றால்
வெற்றியையும்
தோல்வியையும் யார்
நிர்ணயிக்கிறார்கள்
எவரால்
நிர்ணயிக்கப்படுகிறது
என்ற உண்மையை
நீ இன்னும் தெரிந்து
கொள்ளவில்லை”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment