ஜபம்-பதிவு-469
(பரம்பொருள்-221)
“பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்களும்
இந்த உண்மையை
தெரிந்து கொள்ளவில்லை”
“பஞ்ச பாண்டவர்களாகிய
நீங்கள் ஐவரும்
உண்மை எது என்று
தெரிந்து கொண்டு
இருந்தீர்கள்
என்றால்
வெற்றிக்கு
யார் காரணம்
என்று விவாதித்து
இருக்க மாட்டீர்கள்”
“18 நாள் நடந்த
குருஷேத்திரப்
போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
அரவான் தான்
முழுக்காரணம்
என்பதை
உணர்ந்து இருப்பீர்கள்”
“பஞ்ச பாண்டவர்கள்
அடைய வேண்டிய
தோல்வியிலிருந்து
அனைவரையும்
காப்பாற்றி
வெற்றியைத்
தேடித்
தந்தவன் அரவான்
“
“பஞ்ச பாண்டவர்கள்
சார்பாக அரவான்
களப்பலியாகவில்லை
என்றால்
பஞ்ச பாண்டவர்களால்
குருஷேத்திரப்
போரில் வெற்றி
பெற்றிருக்கவே
முடியாது”
“குருஷேத்திரப்
போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
முழுக்காரணமும்
அரவான் மட்டுமே;
அரவான் செய்த
தியாகம் மட்டுமே
;
அரவானின்
களப்பலி மட்டுமே
;”
“குருஷேத்திரப்
போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
அரவானின் களப்பலி
மட்டும் தான்
காரணமே தவிர
வேறு எந்த ஒரு
காரணமும் கிடையாது”
“குருஷேத்திரப்
போரின்
வெற்றிக்கு
முழுக்காரணமாக
அரவான் இருந்தும்
கூட
தன்னால் தான்
குருஷேத்திரப்
போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றார்கள்
என்று அரவான்
சொல்லவில்லை
;
அனைத்திற்கும்
காரணம்
கடவுளான கிருஷ்ணன்
தான் என்று
என்னை
சுட்டிக் காட்டுகிறான்”
“வெற்றியை தனதாக்கிக்
கொள்ளும் மனிதர்கள்
வாழும் இந்த
உலகத்தில்
குருஷேத்திரப்
போரில்
பஞ்ச பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
முழுக்காரணமும்
தான் தான்
என்று தெரிந்திருந்தும்
அந்த வெற்றியை
தனதாக்கிக்
கொள்ளாமல்
கடவுளால் நிகழ்ந்தது
என்று கிருஷ்ணனாகிய
என்னைப் பார்த்து
சொல்கிறான்”
“நிர்ணயிக்கப்பட்டு
நடக்கும்
எந்த ஒரு செயலின்
வெற்றி தோல்விக்கும்
கடவுள் தான்
காரணம்
என்பதை உணர்ந்து
கொள்பவர்களால்
மட்டுமே தன்னால்
எதுவும் நடக்கவில்லை
அனைத்தும்
கடவுளால் நடந்தது
என்பதை உணர்ந்து
சொல்ல முடியும்”
“அத்தகையவர்களால்
மட்டுமே
நடை பெற்றது
;
நடை பெற்றுக்
கொண்டிருப்பது
;
நடைபெறப்போவது
;
அனைத்தும் கடவுளால்
நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது
என்பதை உணர்ந்து
சொல்ல முடியும்
“
“அத்தகையவர்களால்
மட்டுமே
இந்த உலகத்தில்
நடக்கும் அனைத்து
செயல்களுக்கும்
கடவுள் தான்
காரணம்
என்பதை உணர்ந்து
சொல்ல முடியும்”
“இந்த உலகத்தில்
உள்ள
அனைத்து செயல்களுக்கும்
கடவுள் தான்
காரணம்
என்பதை உணர்ந்து
சொல்ல வேண்டுமென்றால்
ஆன்மீகத்தின்
முக்கிமான
மூன்று நிலைகளான
ஞானம்; சமாதி;
மோட்சம்;
என்ற வரிசையில்
ஞானத்தை உணர்ந்து
;
சமாதியை சுவைத்து
;
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்காகக்
காத்துக்
கொண்டிருப்பவர்களால்
மட்டுமே சொல்ல
முடியும்”
“அரவான் ஆன்மீக
வரிசையில்
ஞானத்தை உணர்ந்து
;
சமாதியை சுவைத்து
;
முக்தி என்ற
மோட்ச நிலையை
அடைவதற்காகக்
காத்துக்
கொண்டிருக்கிறான்
“
“அரவான் மோட்சம்
அடையும் நிலையை
அடைந்து விட்டான்”
“அரவானுக்கு
மோட்சம்
வழங்கும் நேரம்
நெருங்கி விட்டது
அரவானுக்கு
நான் மோட்சம்
வழங்க வேண்டும்
“
“ஆகவே நீங்கள்
அனைவரும் இங்கிருந்து
சென்று அடுத்து
என்ன செயல்களை
செயல்படுத்த
வேண்டுமோ
அதை செயல்படுத்துங்கள்
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
01-05-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment