May 01, 2020

பரம்பொருள்-பதிவு-222


               ஜபம்-பதிவு-470
             (பரம்பொருள்-222)

பீமன்:
“மோட்சம் அடையும்
நேரம் அரவானுக்கு
நெருங்கி விட்டது
என்று சொல்கிறீர்களே
ஏன் எங்களுக்கு
மோட்சம் அடையும்
நேரம் நெருங்கவில்லையா?”

கிருஷ்ணன்:
“பீமா! நீ மோட்சம்
அடையக்கூடிய
நேரத்தை
நெருங்கி
இருப்பாயானால்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்றதற்கு
நீ தான் காரணம்
என்று பேசி
இருக்க மாட்டாய் “

“குருஷேத்திரப் போரில்
பாண்டவர்கள்
வெற்றி பெற்றதற்கு
நான் தான்
காரணம் என்று
ஒவ்வொருவரும்
தனித்தனியாக
பேசிக் கொண்டு
உங்களுக்குள்
ஒருவருக்கொருவர்
விவாதித்து
இருந்திருக்க மாட்டீர்கள்”

“இதிலிருந்து
தெரியவில்லையா
நீங்கள் அனைவரும்
மோட்ச நிலையை
அடைவதற்கு
இன்னும் தகுதி
பெறவில்லை என்று”

தர்மர் :
“அப்படி என்றால்
நீங்கள் சொல்லும்
தகுதி எங்களுக்கு
எப்போது வரும் ;
நாங்கள் எப்போது
மோட்சம் அடைவோம்;
எங்களுக்கு மோட்சம்
எப்போது கிடைக்கும் ;
எங்களுக்கு இப்போது
மோட்சம்
கிடைக்காததற்கு
இது தான் காரணமா ?”

கிருஷ்ணன் :
“உங்களுக்கென்று
ஒப்படைக்கப்பட்ட
கடமைகள் இன்னும்
முடிவடையவில்லை “

“நீங்கள் பிறப்பு
எடுத்ததற்கான
கடமைகளை இன்னும்
நீங்கள் நிறைவேற்றி
முடிக்கவில்லை;
இது மட்டும் தான்
காரணம் என்று
சொல்லிவிட முடியாது;
இருந்தாலும் இதுவும்
ஒரு காரணம் தான்”

தர்மர்:
“எங்களுடைய
கடமைகளை
முடித்து விட்ட பிறகு
மோட்ச நிலைக்கு
நாங்கள் தகுதி
பெற்று விடுவோமா?”

கிருஷ்ணன் :
“நாளை
நடக்கப்போவதை
இன்றே
தெரிந்து கொள்ள
ஏன் ஆசைப்படுகிறாய்
தர்மா”

“நாளை
நடக்கப் போவது
என்ன என்பதை
தெரிந்து கொள்ள
ஆசைப்படாதே
சில விஷயங்களை
தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது”

“எது எப்போது எங்கே
என்ன நடக்க
வேண்டுமோ
அது அப்போது
அங்கே நடக்கும்
நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய
காலத்தில் நடக்கும்
அது யார்
தடுத்தாலும் நிற்காது
யாருக்காகவும் நிற்காது”

“அதனால் அது
நடக்கும் வரை
காத்திருங்கள்
இப்போது நீங்கள்
செல்லுங்கள்”

“நான் அரவானிடம்
கடைசியாக மனம்
விட்டு பேச
வேண்டியதிருக்கிறது”

“எங்கள் இருவருக்கும்
தனிமை
அவசியமாகிறது”

(என்று பஞ்ச
பாண்டவர்களை
நோக்கி கிருஷ்ணன்
சொன்னவுடன்
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
எதுவும் சொல்லாமல்
அமைதியாக
கிருஷ்ணனிடம்
விடை பெற்றுக் கொண்டு
சென்று விட்டனர்
கிருஷ்ணன்
அரவானை நோக்கி
பேசத் தொடங்கினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 01-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment